அறிவிப்பு

குறும்படப் பரிசு

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் 2011ம் ஆண்டிற்கான குறும்படப் போட்டியில் சிறந்த குறும்படமாக நான் கதைவசனம் எழுதி அருண் பிரசாத் இயக்கியுள்ள கொக்கரக்கோ என்ற படம் முதல் பரிசு வென்றுள்ளது, இதற்காக ரூ15 ஆயிரம் பரிசு வழங்கப்பட இருக்கிறது, சிறந்த படத்தொகுப்பிற்கான பரிசும் நான் கதைவசனம் எழுதி அருண் பிரசாத் இயக்கியுள்ள பிடாரன் படத்திற்குக் கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற அருண்பிரசாத்தையும் அவரது குழுவினர்களையும் மனம் நிறைய வாழ்த்துகிறேன். **

அறிவிப்பு

கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம்  எனக்கு இந்த ஆண்டிற்கான கண்ணதாசன் விருது வழங்குகிறது, 50 ஆயிரம் பணமும் பட்டயமும் கொண்டது இவ்விருது,  அதைப்பெறுவதற்காக  கோவை வருகை தர இருக்கிறேன்,  25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் இருக்கிறேன்,  சந்திக்க விரும்பும் நண்பர்கள் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா புத்தகக் கடையைத் தொடர்பு கொள்ளவும். 26.06.2011 ஞாயிறு அன்று காலை பத்துக்கு கண்ணதாசன் விழா துவங்குகிறது, இதில் கண்ணதாசன் குறித்து கவிஞர் மு. அர்ச்சுனன் …

அறிவிப்பு Read More »

கதைக்கம்பளம்

1)      எனக்கு ஏன் கனவு வருது 2)      நீள நாக்கு 3)      எழுதத்தெரிந்த புலி 4)      பம்பழாபம் 5)      தலையில்லாத பையன் 6)      லாலி பாலே 7)      காசுக்கள்ளன் என குழந்தைகளுக்கான ஏழு புத்தகங்களை நானும் நான்காவது வகுப்பு படிக்கும் எனது பையன் ஆகாஷ் இருவருமாக இணைந்து வெளியிட்டிருக்கிறோம். இக்கதைகளை நானும் அவனுமாகப் பேசி விவாதித்து  உருவாக்கினோம், புத்தகங்களுக்கான எண்ணம் அவனுடையது, நான் எழுத்து வடிவம் தந்திருக்கிறேன். சில கதைகளில் அவன் கதையின் முக்கிய நிகழ்வுகளை மாற்றியிருக்கிறான், …

கதைக்கம்பளம் Read More »

இன்னொரு பயணம்

கோடை மழை துவங்கியிருக்கிறது,  ஈரம் படிந்த காற்றுடன் பயணம் செய்வது அற்புதமானது ஜுன் 2 முதல் இருபது நாட்களுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன், அநேகமாக ஜுன் 21ல் சென்னை திரும்புவேன். ••

மலேசியத் தமிழறிஞர்

மலேசியாவில் வசிக்கும் தமிழறிஞரான டாக்டர் எஸ் ஜெயபாரதியின் எழுத்துகளை நான் விரும்பிப் படித்து வருகிறேன், பழந்தமிழ் இலக்கியம். ஆன்மீகம். விஞ்ஞானம், ஜோதிடம், தமிழ்பண்பாடு, நுண்கலை. வரலாற்று ஆய்வுகள் என்று பரந்த தளங்களில் சிறப்பாக எழுதிவருபவர், அவரது மலேசிய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகள் அற்புதமானவை, அவரது எழுத்து தேர்ந்த நகைச்சுவையும் செழுமையான மொழிநடையும் கொண்டது, டாக்டர் ஜெயபாரதி தேர்ந்த படிப்பாளி, அவரது எழுத்தில், வியக்க வைக்கும் தகவல்கள். நுட்பமான விபரங்கள்.  நேரடியாக கள ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட …

மலேசியத் தமிழறிஞர் Read More »

பிடாரன்

நான் கதைவசனம் எழுதி அருண்பிரசாத் இயக்கியுள்ள குறும்படமான பிடாரன் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது,  இக்குறும்படம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது, https://youtu.be/i2h75PBHirg **

கண்ணதாசன் விருது

தாகூர் விருதினைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு விருது கிடைத்திருக்கிறது இது கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் ஆண்டு தோறும் வழங்கி வரும் கண்ணதாசன் விருதாகும், இந்த விருது வழங்கும் விழா ஜுன் 26.06.2011 ஞாயிறன்று கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நடைபெற உள்ளது, *** கண்ணதாசன் விருதுகள்-2011 குறித்த அறிவிப்பு இது: கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் …

கண்ணதாசன் விருது Read More »

தி எக்னாமிக் டைம்ஸ்

நேற்றைய  தி எக்னாமிக் டைம்ஸில் தாகூர் விருது பற்றிய எனது நேர்காணலுடன் இந்தக் கட்டுரை வெளியாகி உள்ளது Link : https://economictimes.indiatimes.com/articleshow/8285164.cms?prtpage=1 ***

விருது ஏற்புரை

மே 5ம் நாள் மும்பையில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் எனக்குத் தாகூர் விருது வழங்கப்பட்டது, இந்த விருதினை மராத்தியின் முக்கிய எழுத்தாளரும் இந்திய திட்டகமிஷன் உறுப்பினருமான நரேந்திர ஜாதவ் வழங்கினார், இவர் தாகூர் குறித்து முக்கியமான புத்தகங்களை மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார், தாகூரின் முக்கிய படைப்புகளை மராத்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர்களுடன் கொரிய அரசின் பன்னாட்டுஉறவுச் செயலர்  Seo-hang Lee, சாகித்ய அகாதமியின் செயலாளர் திரு, அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி. பிரபலநாடக நடிகர் பரூக் ஷேக், நோபல் …

விருது ஏற்புரை Read More »