உப பாண்டவம் புதிய பதிப்பு.
எனது உப பாண்டவம் நாவலின் நான்காவது புதிய பதிப்பினை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மிக சிறப்பாக வெளிவந்துள்ள இந்த பதிப்பின் விலை. ரூ.150 கிடைக்குமிடம் புத்தக கண்காட்சி கடை எண் : P 255 & 256 விஜயா பதிப்பகம்
எனது உப பாண்டவம் நாவலின் நான்காவது புதிய பதிப்பினை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மிக சிறப்பாக வெளிவந்துள்ள இந்த பதிப்பின் விலை. ரூ.150 கிடைக்குமிடம் புத்தக கண்காட்சி கடை எண் : P 255 & 256 விஜயா பதிப்பகம்
மலைகள் சப்தமிடுவதில்லை. (கட்டுரைகள் ) பக்கம்: 240 விலை:140 இந்த நூலில் தஸ்தாயெவ்ஸ்கி, தால்ஸ்தாய். செகாவ். இதாலோ செவோ, கார்க்கி, ஷெல் சில்வர்ஸ்டைன், பாஷோ போன்ற இலக்கிய ஆளுமைகளை பற்றியும், இயற்கை குறித்த எனது புரிதல் மற்றும் அது சார்ந்த நினைவுகளை விவரிக்கும் சேவற்சண்டை, இந்தியாவை நடந்தே சுற்றிய மனிதர். தாமரை பூத்த குளம், ரயிலோடும் தூரம், போன்ற வாழ்வியல் அனுபவ கட்டுரைகளுமாக மொத்தம் 48 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நகுலன் வீட்டில் யாருமில்லை (குறுங்கதைகள் …
தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனுக்கு இந்த ஆண்டிற்கான “விளக்கு` இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான “விளக்கு` புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒவ்வோராண்டும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. இந்தவிருதில் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும். 62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் “ஆகாசம் நீல நிறம்`, “ஊரும் காலம்`, “உள்வாங்கும் உலகம்` …
இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம். கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்ன கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள். நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள் அவர்கள் குறித்த ஞாபகங்கள் இவையே இந்த கட்டுரைகளின் அடிநாதம். ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் உதயம் இதழிலும் உயிர்மையிலும் இதில் …
Fables and Parables எனப்படும் குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. இந்த கதை வகைமையின் சிறப்பு அடையாளங்களாக ஜென் கதைகள், முல்லா கதைகள், சூபி கதைகள், பைபிள் கதைகள், ஜாதகக் கதைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை மனித மனதின் ஆதார இச்சைகளை, ஏக்கங்களை, துயரங்களை பேசுகின்றன. உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களான போர்ஹே, இதாலோ கால்வினோ, யாசுனாரி கவபட்டா, ஹென்ரிச் ப்யூல், காப்கா, மார்க்வெஸ், டொனால்டு பார்த்தல்மே, போன்றவர்கள் இந்த குறுங்கதை மரபை புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள். நீதி போதிக்கவும் போதனைக்கும் …
இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் நான் எழுதிய கட்டுரைகள் ஆளுமைகள், அக்கறைகள், அனுபவங்கள் என்று வகைப்படுத்தி தொகுக்கப்பட்டு தனித்த நூலாகியுள்ளது. எதை எழுதும் போது அதில் நினைவுகள் கலந்துவிடுகின்றன. நினைவுகளின் நிழல் விழாத எழுத்து இருக்கிறதா என்ன? இந்த நினைவுகள் தனிநபர் சார்ந்தவை இல்லை. மாறாக நான் வாழும்காலத்தில் கண்டதும் காரணமற்று கைவிடப்பட்டதும், அறிந்து புறக்கணிக்கபட்டதுமான வாழ்வியலின் நுண்மையான சாட்சிகள். கிராமம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே அறிமுகமாகி போன மாநகர சூழலில் சிறுவர்கள் ஒட்டுபுல்லை கூட கண்ணில் …
உயிர்மை பதிப்பகம் எனது நான்கு புதிய புத்தகங்களை வெளியிடுகிறது, அதற்கான வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 13 ஞாயிறு மாலை பிலிம்சேம்பரில் நடைபெறுகிறது, இந்த நிகழ்வில் வாசகர்கள். நண்பர்கள், இணையவலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன் ••• உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு நூல்கள் நாள் 13.12.09 ஞாயிற்றுக் கிழமை நேரம். மாலை 5.30 மணி இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (Film Chamber)604/605/606 டி.ஆர்.சுந்தரம் அவென்யூராணி …
கடந்த நான்கு நாட்களாக உடல்நலக்குறைவு. ஒய்வில் இருக்கிறேன். படுக்கை. மருந்துகள். பாதி நேர உறக்கம் என்று பகலும் இரவும் கடந்து போகின்றன. தொடர்ந்த மழை சப்தம் ஜன்னலின் வழியே கேட்டுக் கொண்டிருக்கிறது**சென்ற வாரம் தேவதச்சனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு விசயம் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கிறது.நடந்து திரிய வேண்டிய அவசியமற்று போனவவைகளுக்கு தான் கண் உருவாகமால் போயிருக்கிறது. அதனால் தான் மரங்களுக்கு கண் இல்லையோ?**சார்லஸ் சிமிக் என்ற அமெரிக்க கவியை தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிக அற்புதமான …
உப பாண்டவம் நாவலின் நான்காவது பதிப்பு விஜயா பதிப்பகத்தால் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளது. அதற்கு எழுதப்பட்ட முன்னுரை.**இதிகாசங்கள் மாபெரும் சிகரங்களை போன்றவை. அவற்றை கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலை வளர்வதை போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. பிரம்மாண்டத்தை மலை தன் இயல்பாக கொண்டிருப்பது போன்றதே இதிகாசங்களும். இதிகாசத்தினுள் நுழைவதற்குள் எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதற்கு துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனை புள்ளிகள் …
உயிரோசை இணைய தளத்தின் ஓராண்டு நிறைவு விழாவினை ஒட்டி உயிர்மை பதிப்பகம் நிகழ்ச்சி ஒன்றினை ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நடத்துகிறது. இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும் – உயிரோசையை முன் வைத்து என்ற அமர்வில் நானும் சாருநிவேதிதாவும் சிறப்புரையாற்ற இருக்கிறோம். இதுதவிர 10 நூல்களையும் உயிர்மை அங்கே வெளியிடுகிறது. முக்கிய படைப்பாளிகளும் விமர்சகர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். நாள்: 30.8.20009 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஹோட்டல் சுப்ரீம் 110. …