எனது நூல் வெளியீட்டு விழா

எனது ஐந்து புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழா செப்டம்பர் 5ம் தேதி காலை 9.30 மணி அளவில் மதுரையில் நடைபெற உள்ளது

வெளியிடப்படும் நூல்கள்

1) அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்த்து சிறுகதைத் தொகுப்பு

2) காண் என்றது இயற்கை இயற்கை அறிதல் கட்டுரைகள்

3) இருள் இனிது ஒளி இனிது உலக சினிமா கட்டுரைகள்

4) செகாவின் மீது பனி பெய்கிறது ருஷ்ய இலக்கிய ஆளுமைகள்

5) குறத்தி முடுக்கின் கனவுகள் மீள்வாசிப்பில் நவீன இலக்கியம்

உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் என் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்கள்  பிரபஞ்சன், சாரு நிவேதிதா. கலாப்ரியா, பாரதி கிருஷ்ணகுமார், அருணன்,  மனுஷ்ய புத்திரன் ஆகியோர்  உரையாற்ற இருக்கிறார்கள்.

ஆண்டன் செகாவ் 150 ஆம் ஆண்டை ஒட்டி அந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றி சிறப்புரையொன்றை நான் வழங்கவிருக்கிறேன்.

நாள் 5.9.2010 ஞாயிற்றுக் கிழமை

நேரம் : காலை 9.30

இடம்: ஹோட்டல் சுப்ரீம் ( Hotel Supreme 110, West Perumal Maistry Street, Madurai, – 0452 2343151)

110, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி

மதுரை- 1

(மதுரை ரீகல் திரையரங்கின் நேர் எதிராக உள்ள டவுன்ஹால் ரோடு வழியாக வந்து விஜய் கண்ணாடிகடை அருகே திரும்பி செல்வதே மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி)

நான் செப்டம்பர் 3 ஆந்தேதி காலை முதல் செப்டம்பர் 5 இரவு வரை மதுரையில் இருப்பேன்.  மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் உள்ள  உயிர்மை அரங்கில் (ஸ்டால் எண் 112-113) என்னை சந்திக்கலாம்.

நண்பர் சாருநிவேதிதா செப்டம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரையில் தங்கியிருக்க உள்ளார், அவரைச் சந்திக்க விரும்பும் வாசகர்கள்  உயிர்மை அரங்கில் சந்திக்கலாம்.

வாசகர்கள். நண்பர்கள். கல்விப்புல மாணவர்கள். இணையதள எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் விழாவில் அவசியம் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

••

0Shares
0