மதுரையில் எனது ஐந்து புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிறைந்து இடமின்றி 200 பேர்களுக்கும் மேலாக வெளியே நின்று கொண்டிருந்தனர், எனது நண்பர்கள். விருப்பமான எழுத்தாளர்கள். அன்பிற்குரிய வாசகர்கள். இணைய பதிவாளர்கள். பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக்கினார்கள். என்னையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
எனது புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் அன்பு நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும். என் அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்ட சாருநிவேதிதா. பிரபஞ்சன். பாரதி கிருஷ்ணகுமார் கலாப்ரியா அருணன் தேவதச்சன் தோழர் எஸஏபெருமாள் ஷாஜி தேவேந்திர புபதி டாக்டர் வெங்கடாசலம் காளிதாஸ் துளசிதாசன் திருநாவுக்கரசு மல்லிகை சுரேஷ் சேதுராமலிங்கம் விவேகானந்தன் வெங்கட் விஜயபாஸ்கர் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த நண்பர் முத்துகிருஷ்ணன் அனைவருக்கும் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு நாட்கள் மதுரை புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்து எனது பள்ளிவயது நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன், அது கூடுதல் மகிழ்ச்சி தருவதாக இருந்தது.