அறிவிப்பு

இஸ்தான்புல்லின் கண்

அரா குலார் (Ara Güler) துருக்கியின் தலைசிறந்த புகைப்படக்கலைஞர். இவர் தன்னை Visual Historian என்றே அடையாளப்படுத்துகிறார். 2018ல் காலமான  இவரது புகைப்படங்களை வரலாற்று ஆவணங்களாகக் கருதுகிறார்கள்.  இஸ்தான்புல்லின் கண் என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஓரான் பாமுக் இஸ்தான்புல் குறித்த தனது நூலில் இவரைக் குறிப்பிடுகிறார். அத்துடன் இவரது புகைப்படங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். புகழ்பெற்ற ஆளுமைகளை மட்டுமின்றி தினசரி வாழ்க்கை காட்சிகளையும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார். பிக்காசோ, டாலி உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்களையும் …

இஸ்தான்புல்லின் கண் Read More »

செய்தியும் கதையும்

தமிழக அரசால் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் அழைப்பில் நேற்று அங்கே சென்று செய்தியும் கதையும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். கதையும் செய்தியும் எப்படி வேறுபடுகிறது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களான ஹெமிங்வே, மார்க்வெஸ் போன்றவர்கள் எப்படிப் பத்திரிக்கையுலகிலிருந்து எழுத்தாளர்களாக உருவானார்கள். பாரதியார், காந்தியடிகள் நடத்திய பத்திரிக்கைகள். தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான விஷயங்கள். டிஜிட்டில் உலகில் செய்தியின் இடம் மற்றும் தரம். இளம் பத்திரிக்கையாளர் பயில வேண்டிய அடிப்படைகள் விஷயங்கள் எவை என்பது குறித்து …

செய்தியும் கதையும் Read More »

தி காட் ஃபாதர் / சிறப்புக் காட்சி.

தி காட் ஃபாதர் படத்தின் சிறப்புக் காட்சிகள் சென்னையின் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. நேற்று இரவு அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். அரங்கு நிறைந்த கூட்டம். பெரிதும் இளைஞர்கள். அதிலும் திரைத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள். தி காட் ஃபாதர் படத்தை எல்டி, ப்ளூ ரே டிஸ்க் வழியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆயினும் அதனைத் திரையில் காணுவது பரவசமளிக்கும் அனுபவம். 1972ல் வெளியான இப்படம் ஐம்பது ஆண்டுகளைக் கடந்ததை முன்னிட்டு 2022ல் சிறப்புக்காட்சிகளைத் திரையிட்டார்கள். அன்றும் இதே அளவு …

தி காட் ஃபாதர் / சிறப்புக் காட்சி. Read More »

திரைப்பயணி -10

இங்மர் பெர்க்மென் இயக்கிய தி விர்ஜின் ஸ்பிரிங் (The Virgin Spring) திரைப்படம் குறித்து திரைப்பயணி தொடரில் உரையாற்றியுள்ளேன்

காஃப்கா புதிய திரைப்படம்

அக்னீஸ்கா ஹாலண்டின் இயக்கத்தில் எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்காவின் வாழ்க்கை வரலாற்று படமாக்கபட்டிருக்கிறது. Franz 2025 படத்தின் முன்னோட்ட காட்சி சிறப்பாகவுள்ளது. இப்படம்Toronto International Film Festival ல் திரையிடப்பட்டுள்ளது.

திரைப்பயணி -9

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் 9 வது பகுதி வெளியாகியுள்ளது. இதில் LA STRADA  குறித்து உரையாற்றியுள்ளேன்

இணைய நிகழ்வு

செப்டம்பர் 6 சனிக்கிழமை மாலை எனது நூலக மனிதர்கள் புத்தகம் குறித்த மதிப்புரை நிகழ்வு இணைய வழியாக நடைபெறுகிறது. விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் நூல் குறித்து அம்பாள் ஆர். முத்துமணி பேசுகிறார். விருதை விருட்சம் நூல் வாசிப்பு அனுபவம் -2 Time: Sep 06, 2025 07:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us05web.zoom.us/j/77727323793?pwd=epqtpVZ8vA9l9YwmIYfgQHNkSI5Wd3.1Meeting ID: 777 2732 3793Passcode: 8kraDk

மதுரை புத்தகத் திருவிழாவில்

இன்று துவங்கியுள்ள மதுரை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 205. எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்.

இந்தி இதழில்

வாகர்த் என்ற இந்தி இலக்கிய இதழில் எனது கட்டுரை இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.