அறிவிப்பு

தவற விட்ட மீச்சிறு தருணங்கள்

துணையெழுத்து- வாசிப்பனுபவம் – கோபி சரபோஜி எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையைக் குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் சுற்றி …

தவற விட்ட மீச்சிறு தருணங்கள் Read More »

அன்பின் வடிவம்.

இரா.ராஜசேகர் தங்களின் மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலை படித்தேன். ஒரு சிறந்த நாவலை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்நாவலை படிக்கும்பொழுது ரஷ்யாவில் வாழ்ந்தது போல உணர்ந்தேன். லியோடால்ஸ்டாய் தவறுகளைச் செய்யும் ஒரு சாதாரண மனிதராகவும் சக மனிதனை நேசிக்கும் ஒரு புனிதராகவும் என் கண் முன்னே நிற்கிறார். சோபியா தன் கணவனுக்கும் அவன் காதலிக்கும் நடுவே பாசப் போராளியாக நிமிர்ந்து நிற்கிறாள். அக்ஸின்யா தன் மகனுக்கும் காதலனுக்கும் நடுவே உரிமையில்லாத காதலியாக மகனே உலகம் எனும் அவலத் …

அன்பின் வடிவம். Read More »

தாராசங்கர் ஆவணப்படம்

சாகித்ய அகாதமி சார்பில் தயாரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இன்று வங்காள எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவரது ஆரோக்கிய நிகேதனம். கவி போன்ற நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தாராசங்கர் 65 நாவல்கள் எழுதியிருக்கிறார். இதில் பல திரைப்படமாக வெளியாகியுள்ளன. அவரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராஜ்யசபாவின் நியமன எம்பியாகப் பணியாற்றியிருக்கிறார். தாராசங்கர் பந்தோபாத்யாயின் இல்லம் பிர்பூம் மாவட்டத்தின் லாப்பூரில் அமைந்துள்ளது. தாராசங்கரின் வீடு இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. தாராசங்கர் பந்தோபாத்யாய் …

தாராசங்கர் ஆவணப்படம் Read More »

அபாய வீரன்

ராஜ் குழந்தைகளுக்கான கதைகளை விளையாட்டு வடிவத்தில் நீங்கள் வடிவமைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாங்கி அதை என் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். கூடவே பகடையும். மகிழ்ச்சியுடன் அவர்கள் நண்பர்களுடன் விளையாடினார்கள். கூடவே என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் குழந்தையாகி போனதில் நான் அடைந்த பேரானந்தத்தை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் நான்கைந்து நாட்களாகச் செல்போன் பற்றிய ஞாபகமே அவர்களுக்குப் பெரிதாக வரவில்லை. புத்தகத்தில் படித்து விளையாடிய அந்த விளையாட்டை …

அபாய வீரன் Read More »

டான்டூனின் கேமிரா – வாசிப்பனுபவம்

ந. பிரியா சபாபதி, மதுரை. டான்டூன் எனும் கறுப்பு எறும்பின் வாழ்க்கை வழியே ஆசிரியர் மனிதர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைக் கண் முன்னே கொண்டு வருகிறார் என்றால் அது மிகையாது. டான்டூன் சிந்தையானது அறிஞர்களின் சிந்தையாகவே உள்ளது. பிற எறும்புகள் அனைத்தும் ஒன்று சேரும் பொழுது பெரும்பாலும் உணவுகளைப் பற்றியே இருக்கும். ஆனால் இதன் சிந்தையானது பரந்து பட்ட சிந்தையாகத்தான் இருக்கும். இந்தப் பரந்த பட்ட சிந்தனைதான் சீரிய செயலுக்கு வழி வகுக்கும் என்பதைக் கூறிச் செல்கிறார். …

டான்டூனின் கேமிரா – வாசிப்பனுபவம் Read More »

மனித மனதின் குறியீடு

G. கோபி சிகரெட் பிடிக்கும் குரங்கு சிறுகதை பல நினைவுகளைக் கிளறிவிட்டது. எனது ஊர் கழுகுமலை. அங்குள்ள மலையில் உள்ள குரங்குகள் அங்கு வரும் மனிதர்கள் போடும் திண்பண்ட பொட்டலங்கள், கவர், வாட்டர் கேன், இவற்றை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். பள்ளி படிக்கும் போது நண்பர்களோடு நான் அடிக்கடி போவேன். அப்போது சில நேரங்களில் அந்தக் குரங்குகள் யாரோ புகைத்து விட்டு போட்ட பீடி தூண்டுகளை எடுத்து பற்ற வைப்பது போலப் பாவனைச் செய்யும். ஆனால் காற்று …

மனித மனதின் குறியீடு Read More »