அறிவிப்பு

நன்றி

மழையில் நனைந்த எனது புத்தகங்களுக்கான சிறப்பு விற்பனைக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி. திரளாக வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். எனது ஆங்கில நூலிற்கான அறிமுகவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. அபர்ணா கார்த்திகேயன் உரையை முதன்முறையாகக் கேட்கிறேன். அற்புதமாகப் பேசினார். மேனாள் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் எனது கதைகளின் மொழிபெயர்ப்பு அனுபவங்களை மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருங்கிணைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தின் நுட்பங்கள் குறித்து அவர் கேட்ட …

நன்றி Read More »

சஞ்சாரம் / திறனாய்வுக் கூட்டம்

நாளை ( 04.05.24) இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக சஞ்சாரம் நாவலுக்கான திறனாய்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சஞ்சாரம் குறித்து முனைவர் சு.விநோத் உரையாற்றுகிறார்.

தனிமையின் நூறு ஆண்டுகள்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் நெட்பிளிக்ஸில் தொடராக வெளிவரவுள்ளது. அதற்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது. நாவலின் மறக்க முடியாத துவக்க வரிகள் திரையில் காட்சியாக விரிவது அற்புதமாகவுள்ளது.

Frontline இதழில்

இம்மாத Frontline இதழில் எனது சிறுகதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது நன்றி : மினி கிருஷ்ணன் பிரபா ஸ்ரீதேவன் Frontline இதழ்.

நூல் அறிமுக விழா மற்றும் சிறப்புப் புத்தக விற்பனை

ஓரியண்ட் பிளாக்ஸ்வான் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை The Man Who Walked Backwards and Other Stories என வெளியிட்டுள்ளது. இந்த நூலை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இதற்கான அறிமுக விழா மே 3 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. ஆங்கில எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். கதையாகும் நினைவுகள் என்ற தலைப்பில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன். இந்த விழாவோடு தேசாந்திரி பதிப்பகத்தின் …

நூல் அறிமுக விழா மற்றும் சிறப்புப் புத்தக விற்பனை Read More »

தமிழக ஓவிய மரபுகள்

நாளை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ள தமிழக ஓவிய மரபுகள் குறித்த பயிலரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.