அறிவிப்பு

கடலோடு சண்டையிடும் மீன்

கோவை புத்தகக் கண்காட்சிக்கான புதிய வெளியீடு -1 சிறார்களுக்காக எழுதப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு. இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

காஃப்கா உரை

காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதனைக்குறிக்கும் வகையில் சென்னையிலுள்ள, Goethe-Institut சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை 4 மாலை ஆறுமணிக்கு காஃப்காவின் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து உரை வழங்குகிறேன். அத்துடன் காஃப்கா குறித்த உரையாடலில் கலந்து கொள்கிறேன். இந்த நிகழ்வில் ப.சேரலாதன், ரம்யா ராமஸ்வாமி கலந்து கொள்கிறார்கள். அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• நாள் : 4. ஜூலை 2024 நேரம்: மாலை 6-7pm இடம்: கோதே இன்ஸ்டிடியூட் …

காஃப்கா உரை Read More »

விருதுப்பட்டியலில்

2024 Valley of Words Book Awards இறுதிப்பட்டியலில் எனது சிறுகதைத் தொகுப்பு The Man Who Walked Backwards and Other Stories இடம் பெற்றுள்ளது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. Valley of Words என்பது டேராடூனில்  நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவாகும்.

இரண்டு பார்வைகள்

“அப்பாவின் வருகை“ சிறுகதை குறித்த இருவரின் பார்வைகள் கோ.புண்ணியவான். மலேசியா அப்பாவின் வருகை சிறுகதையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது அலாதியான வாசிப்பின்பம் உண்டாகிறது. அப்பா எந்த முக்கியக் காரணமாகவும் சண்டிகார் வரவில்லை. தன் மகனைப் பார்க்கவே வருகிறார். இக்கதையில் அப்பா தன் மகனுக்குச் சிறு பிராயத்தில் என்னவெல்லாம் செய்தாரோ அதனையே மகனும் அப்பா தனக்குச் செய்ததற்கு ஈடான அன்போடு செய்கிறார். இந்த நுணுக்கம் தான் கதையைக் கலைநயமிக்கதாக்குகிறது. அப்பாவின் வருகையை வேற்றிடத்தில் வேலை செய்யும் மகன்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. …

இரண்டு பார்வைகள் Read More »

கவிதா சொக்கலிங்கம் -75

கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களின் 75ம் ஆண்டு விழா சென்னையில் ஜுன் 22 மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறேன் இடம் : முத்தமிழ் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கம். இராஜா அண்ணாமலைபுரம். சென்னை. 28 நாள் : ஜுன் 22 சனிக்கிழமை மாலை 5 மணி

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் மற்றும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அவை புதுவை. சென்னை, திருச்சூரில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராவ் தனது தியேட்டர் லேப் மூலம் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்தினார் தற்போது வெளி ரங்கராஜன் மரண வீட்டின் குறிப்புகள் நாடகத்தை கூத்துப்பட்டறையில் நிகழ்த்தியுள்ளார். தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground நாவலின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு இந்த நாடகத்தை எழுதினேன். மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் புதுவை …

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம் Read More »

ஸி.வி. ஸ்ரீராமனின் கதைகள்

மலையாள எழுத்தாளர் ஸி.வி. ஸ்ரீராமனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பினை சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீராமனின் இரண்டு சிறுகதைகளை அரவிந்தன் திரைப்படமாக்கியிருக்கிறார். ஸ்ரீராமன் கதைகள் இதுவரை நாம் அறியாத கதைப்பரப்பினைக் கொண்டிருக்கின்றன. பாண்டிச்சேரி. கடலூர். சென்னை எனத் தமிழ் வாழ்க்கையின் ஊடாகவும் ஸ்ரீராமன் கதைகள் எழுதியிருக்கிறார். குறிப்பாகப் பாண்டிச்சேரி அன்னை ஆசிரமம் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை சிறப்பானது. ஸ்ரீராமனின் கதைகள் நினைவுகளால் வழிநடத்தப்படும் மனிதர்களின் வாழ்க்கையை விவரிக்கின்றன.   கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை  விஷ்ணுகுமாரன் சிறப்பாக மொழியாக்கம் …

ஸி.வி. ஸ்ரீராமனின் கதைகள் Read More »

இசைக்குப் பின்னால்

கோ.புண்ணியவான் – மலேசியா சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம் நாவல் வடிவில் யாரும் எழுதிராத நாதஸ்வர தவில் கலைஞர்களின் கதையை ‘சஞ்சாரம்’ சொல்லிச் செல்கிறது. அச்சமூகத்தின் இந்த நூற்றாண்டின் வளர்சிதை மாற்றங்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்திக்கொண்டே போகிறது நாவல். தற்காலக் கலைஞர்கள் எவ்வாறு நலிந்த சமூகமாகத் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்டார்கள் என்பதைத் தன் நுணுக்கமான கதைப்பின்னலால் சிக்கலில்லாமல் விவரித்துக்கொண்டே செல்கிறா எஸ் ரா. உண்மையிலேயே, பூ வேலைப்பாடு நன்கு தெரிந்த ஒரு பெண்ணின் கலைக் கைகள் நடத்துகின்ற பின்னல் நடனத்தை அழகு …

இசைக்குப் பின்னால் Read More »

நிழலின் இனிமை.

ஜப்பானிய எழுத்தாளர் ஜுனிச்சிரோ தனிசாகி எழுதிய In Praise of Shadows 1933 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையாகும். இதில் ஜப்பானியப் பாரம்பரியத்தில் ஒளி மற்றும் இருளின் இடம் பற்றிய தனது அவதானிப்புகளை விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக ஜப்பானிய வீடு மற்றும் கட்டிடங்களின் தனித்துவம், ஜப்பானிய நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் குறைந்த வெளிச்சம் பற்றியும், மேற்கத்திய தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக சொந்த மண்ணிலிருந்து உருவாகும் அறிவியல் முயற்சிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். In Praise of Shadows வை ஒரு …

நிழலின் இனிமை. Read More »