அறிவிப்பு

கதாவிலாசம் / விமர்சனம்

எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தை உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் ஒருவரான டெய்லர் & பிரான்சிஸ் (Routledge )பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தியப் பதிப்பு. அயல்நாட்டு பதிப்பு என இருவிதமாக இந்நூல் வெளியாகியுள்ளது. அதற்கான விமர்சனம் இம்மாத thebookreviewindia இதழில் வெளியாகியுள்ளது.

முரளிதரன் கண்ட கனவு

P. பொன்மாரியப்பன் தங்களது இணையதளத்தில் முப்பது வயதுச் சிறுவன் சிறுகதை வெளியாகியுள்ளதைக் கண்டு உடனடியாகக் கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் கதையைப் பிரிண்ட் அவுட் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு 44 வயதாகிறது. எனக்குள் இருக்கும் முப்பது வயது சிறுவன் தான் இந்தச் சிறுகதையை வாசிக்கத் தூண்டினான் என்பேன் கதையை வாசித்து முடித்தபோது என் கனவில் சேதுராமனின் அப்பா வந்தது போலவே இருந்தது. அவரை நேரில் பார்த்தது போல உணர்ந்தேன். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நட்பு ஐந்தாம் …

முரளிதரன் கண்ட கனவு Read More »

ஒரு நாத்திகனின் பிரார்த்தனை

பிரவீன் துளசி என்ற பெயரில் எழுதிவரும் பிரவீன் சந்திரசேகரன் முறையாகப் பிரெஞ்சு பயின்றவர். சென்னை அலியான் பிரான்சேஸ் நடத்திய மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். இவர் ஒனோரே தெ பல்சாக்கின் இரண்டு நெடுங்கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஒரு நாத்திகனின் பிரார்த்தனை நூலை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்சாக் பற்றி விரிவான உரை நிகழ்த்தியிருக்கிறேன். இந்த நூலை பிரவீன் எனக்குச் சமர்பணம் செய்திருக்கிறார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

சீனாவில் தாகூர்

சீனாவின் கடைசிப் பேரரசர் பு யி வுடன் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். இந்தப் பேரரசர் பற்றித் தான் The Last Emperor திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி அணிந்த மன்னர் என்ற பிம்பம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. 1924 இல் தாகூர் சீனாவிற்கு வருகை தந்தார். அப்போது எடுக்கபட்ட புகைப்படமிது. Forbidden city எனப்படும் பீஜிங் அரண்மனை வளாகத்தில் இப்புகைப்படம் எடுக்கபட்டிருக்கிறது. 1924 மற்றும் 1928 எனத் தாகூர் இரண்டு முறை …

சீனாவில் தாகூர் Read More »

புதிய காணொளித் தொடர்

அன்றாடம் எனக்கு வருகின்ற மின்னஞ்சலில் பாதிக்கும் மேல் கேள்விகளே. அதிலும் புத்தகங்கள். எழுத்தாளர்கள், அயல் சினிமா மற்றும் பயணம் குறித்த கேள்விகளே அதிகம். பெரும்பான்மைக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும் எனது புத்தகப் பரிந்துரை காணொளிகள் நிறையப் பேருக்கு உதவிகரமாக இருந்ததை அறிவேன். தேசாந்திரி யூடியூப் சேனல் வழியாக சென்னையும் நானும் என்ற காணொளித் தொடர் உருவாக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்த சேனலில் நூறுக்கும் மேற்பட்ட எனது …

புதிய காணொளித் தொடர் Read More »

மதராஸ் நினைவுகள்

கரிம்புமண்ணில் மத்தாய் ஜார்ஜ் எனப்படும் டாக்டர். கே.எம். ஜார்ஜ் 1914 ஆம் ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்தார். 1940 களில் மலையாளத்தில் எழுத்த்துவங்கிய இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறந்த ஆங்கில இலக்கிய விமர்சகர், தேர்ந்த மொழிபெயர்ப்பாளர். ஜவகர்லால் நேருவால் தேர்வு செய்யப்பட்டுச் சாகித்ய அகாதமியில் பணியாற்றியவர். Masterpieces of Indian Literature என்ற இந்திய இலக்கியங்களின் மிகப்பெரிய தொகுப்பு நூலை எடிட் செய்தவர். ஜார்ஜின் சுயசரிதையான AS I SEE MYSELF நூலை சாகித்ய …

மதராஸ் நினைவுகள் Read More »

கதைகளின் ஆழ்படிமங்கள்

மணிகண்டன் ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன். இக்கதைகள் மொத்தமாய்க் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கிறன. இக்கதைகளின் நாயக நாயகியர் வாழ்வின் பாரத்தை மௌனமாகச் சுமப்பவர்கள், அனைத்து விஷயங்களுக்கும் தார்மீக பொறுப்பேற்பவர்கள்,பழையவற்றில் சிலதை விடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள் சிறிய வைராக்கியங்கள் நிறைய உடையவர்கள் , சிறிய விஷயங்களிலேயே நிறைவை காண்பவர்கள், தனித்துவமிக்கக் குணாதிசயம் வழி துயர் மிகு வாழ்வை கடப்பவர்கள். நீங்கள் அவர்களது வாழ்வை எழுதியிருக்கும் விதத்தில் அவர்களிடம் பெரிய குற்றச்சாட்டோ பரிதாபமோ …

கதைகளின் ஆழ்படிமங்கள் Read More »

Usawa இதழில்

எனது புலிக்கட்டம் சிறுகதை ஜி.பரத்குமாரால் “Lambs and Tigers” என மொழியாக்கம் செய்யப்பட்டு Usawa Literary Review இதழில் வெளியாகியுள்ளது.

நூல் கொள்முதல் கொள்கை 2024

தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024யை வெளியிட்டுள்ளது நூலகத்துறையின் எதிர்காலம் மற்றும் பதிப்புத்துறையின் வளர்ச்சி, வாசகர்களின் பன்முகப் பயன்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், நூலகங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நூல் தேர்விற்கான சிறப்புக் குழு, இணைய வழியாக விண்ணப்பம் செய்வது, நூல்களுக்கான விலையை முறையாக நிர்ணயம் செய்வது எனச் சிறந்த வழிகாட்டுதல்களைக் கொண்ட நிகரற்ற ஆவணமாகவே இதனைக் கருதுகிறேன். நூல் கொள்முதலை ஆண்டுமுழுவதும் செயல்படுத்தும் முயற்சி மிகுந்த …

நூல் கொள்முதல் கொள்கை 2024 Read More »

சாகித்ய அகாதமி விழா

சாகித்ய அகாதமியின் நிறுவன நாள் விழா மார்ச் 12 மாலை சென்னையிலுள்ள சாகித்ய அகாதமி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இலக்கியத்தின் புதிய பாதைகள் என்ற தலைப்பில் சமகால உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியத்தின் புதிய போக்குகள் குறித்து உரையாயாற்றுகிறேன். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குணா பில்டிங்கின் இரண்டாம் தளத்தில் சாகித்ய அகாதமி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கே தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி …

சாகித்ய அகாதமி விழா Read More »