அறிவிப்பு

திரைப்பட விருது

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த மோகன் குமார் எனது சிறுகதை புர்ராவைக் குறும்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றுள்ளது. சிறந்த இயக்குநர் விருது பெற்றுள்ள மோகன் குமாருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இந்து தமிழ் விழாவில்

இந்து தமிழ் நாளிதழ் தமிழகமெங்கும் வாசிப்புத் திருவிழாவை நடத்தி வருகிறது. சென்னை வாசிப்புத் திருவிழா மார்ச் 2 காலை பத்து மணிக்கு பேட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

ஷெர்லி அப்படித்தான்

பேராசிரியர் வினோத் ஒருங்கிணைப்பு செய்த எனது நூறு சிறுகதைகள் குறித்த அறிமுக நிகழ்வில் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலர் ஜான் பாக்கியசெல்வன் ஷெர்லி அப்படித்தான் சிறுகதையை குறித்து சிறப்பாகப் பேசியுள்ளார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

இயற்கையுடன் இணைந்து

நிலம் கேட்டது கடல் சொன்னது – வாசிப்பனுபவம் குமரன். ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போல் இருந்தது அச்சம்பவம். என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே பலருடைய உயிரும் உடலில் இருந்து பிரிந்து விட்டது. கரும்புகை திரண்டு வானத்துக்கும். பூமிக்குமாக நாய்க்குடை வடிவில் புகை மண்டலம் சூழ்ந்தது. என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே ஒட்டுமொத்த ஹிரோஷிமா நகரும் தரைமட்டமானது. அணுவீச்சில் உடல் பாதிப்புக் கொண்டு உருகத் துவங்கியது. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு மூன்று லட்சம் …

இயற்கையுடன் இணைந்து Read More »

கல்முகம்

மனித முகத்தைப் போல தோற்றமளிக்கும் கற்களைச் சேகரித்து ஜப்பானில் ஒரு மியூசியம் வைத்திருக்கிறார்கள். அது பற்றிய காணொளி

எழுத்தே வாழ்க்கை

எஸ். ராவின் புத்தகத்தினூடே ஒரு பயணம் : G. கோபி எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள். எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா போன்ற வரலாற்றுக் கட்டுரைகளும் அவசியம் வாசிக்க வேண்டியவை. மேலும் துணையெழுத்து, இலக்கற்ற பயணி, ரயில் நிலையங்களின் தோழமை, வீட்டில்லாத புத்தகங்கள், தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைக்களும் வாசிப்பதற்கு அரிய தகவல்களும் வித்தியாசமான …

எழுத்தே வாழ்க்கை Read More »

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது இந்த விழாவில் 13 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்

கே.ஜி, ஜார்ஜ் நினைவு மலர்

மறைந்த இயக்குநர் கே.ஜி. ஜார்ஜின் நினைவைப் போற்றும்விதமாக மலையாளத்தில் வெளியாகியுள்ள மலரில் எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி.

ரஷ்ய வெளிச்சம்

‘மாஸ்கோவின் மணியோசை’  வாசிப்பனுபவம். ரம்யா ரோஷன் ரஷ்ய இலக்கியமும் எழுத்தாளர்களும் என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.ரஷ்ய எழுத்தாளர்கள் நிச்சயம் தத்துவவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருந்திருக்க வேண்டும். சமூகத்தை இவ்வளவு அக்கறையோடும், கவலையோடும், உணர்ச்சியோடும் பார்க்கும் இலக்கியம் வேறெதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றும். நம்மில் பலர் ரஷ்ய இலக்கியங்களை ரசிக்க காரணம் எஸ்.ரா ஐயா வாக தான் இருக்க முடியும். ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ரஷ்ய இலக்கியம் குறித்த …

ரஷ்ய வெளிச்சம் Read More »