சர்வதேச இலக்கிய விழாவில்
கேரளாவில் நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்ள நாளை ( பிப்ரவரி 2) திருச்சூர் செல்கிறேன்.
கேரளாவில் நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்ள நாளை ( பிப்ரவரி 2) திருச்சூர் செல்கிறேன்.
எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் இணைப்பு https://www.usawa.in/issue-8/Translation/The-Last-Horse-Cart-R-Satish.html
Medium என்ற இணைய இதழில் எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருப்பதை இன்று தான் பார்த்தேன். சிங்கப்பூரில் வசிக்கும் ராஜ் ஸ்வரூப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு. தகுந்த ஆங்கிலப் பதிப்பாளர் கிடைக்காத காரணத்தால் அந்நூல் இன்னும் வெளியாகவில்லை. The Eighty-Year Wait கதை அரிய பறவையான JERDON COURSER பற்றியது. கதையின் இணைப்பு. https://rs-writes-well.medium.com/the-eighty-year-wait-fd95a57b8fec
47வது சென்னை புத்தகத்திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்தேன். புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். அவர்களுடன் உரையாடினேன். வாசகர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் ஈடற்றது. புத்தகக் கண்காட்சியின் போது நூறு கைகள் எனக்கிருப்பது போல உணர்ந்தேன். இந்த நம்பிக்கை வாசகர்கள் உருவாக்கியது. அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றி. தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து எனது நூல்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. எனது புதிய புத்தகங்களையும் பரிந்துரைகளையும் ஒளிப்பதிவு …
கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பு தேதியற்ற மத்தியானம் தேசாந்திரி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.
கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இலக்கிய இதழில் ஓவியம் சார்ந்த எனது இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. முதற்குறுங்கதையின் தலைப்பு வெர்மீரின் பால். இதழில் அச்சுப்பிழையாக வெர்மின் பால் என வந்துள்ளது. இரண்டாவது கதை வான்கோவின் உருளைகிழங்கு உண்பவர்கள் ஓவியம் குறித்தது. தலைப்பு : பசியின் வெளிச்சம்.
கேரளாவில் நடைபெறவுள்ள சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 3 காலை எனது அமர்வு நடைபெறுகிறது
நேற்று புத்தகக் கண்காட்சியில் ஒரு இளைஞரைச் சந்தித்தேன். சென்னை ஓவியக்கல்லூரியில் பயில்வதாக அறிமுகம் செய்து கொண்டு தான் வரைந்துள்ள கோட்டோவியத்தை என்னிடம் காட்டினார். அதில் நானும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் தஸ்தாயெவ்ஸ்கியும் இருந்தோம். வியப்போடு அந்த ஓவியம் பற்றிக் கேட்டேன் நீங்கள் விருதுநகர் புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வந்ததைப் பற்றி வரைந்திருக்கிறேன். நீங்கள் விருதுநகருக்கு ரயிலில் வந்து இறங்குகிறீர்கள். உங்கள் பேச்சில் எப்போதும் கி.ராவை, சுந்தர ராமசாமியை உயர்வாகச் சொல்கிறீர்கள் ஆகவே அவர்களும் உங்களுடன் …
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகங்களை வாங்கலாம் என வாசகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். இவை இன்றைய எனது பரிந்துரைகள். பதிப்பாளர் பெயர் குறிப்பிட்டுள்ளேன். அரங்கு எண் தெரியவில்லை. நினைவின் குற்றவாளி – கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன், வேரல் பதிப்பகம் ₹130 ( நகுலன் பற்றிய நினைவுகளும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவக்குறிப்புகளும் கொண்டது. ) கதை இல்லாதவனின் கதை- மலையாளம்- எம். என். பாலூர் ( கதகளி கலைஞரின் வாழ்க்கை நினைவுகளைச் சொல்லும் அற்புதமான படைப்பு. )தமிழில்: …
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதையை ரேடியோ நாடகமாக அகில இந்திய வானொலி சென்னை நேற்று ஒலிபரப்புச் செய்தார்கள். எனது சிறுகதையை ரேடியோ நாடகமாக எழுதியவர் குமரி எஸ். நீலகண்டன். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எஸ்.அண்ணாமலைப் பாண்டியன் ஜே.ஜெயா. நாடகத்தில் பங்கேற்று நடித்த ரவி சுப்ரமணியன். கிருஷ்ணமூர்த்தி, பரத் ராஜ்,வி. லோகபாபு உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும்