அறிவிப்பு

கிதார் இசைக்கும் துறவி ஆங்கிலத்தில்

எனது கிதார் இசைக்கும் துறவி சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு Borderless இணைய இதழில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் சந்தானம். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. இந்தச் சிறுகதையை தலைப்பாகக் கொண்டே எனது புதிய சிறுகதைத் தொகுதி வெளியாகிறது. விகடன் தீபாவளி மலரில் வெளியான இந்தக் கதை இரண்டு மாதங்களுக்குள் மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இணைப்பு. The Monk Who Played the Guitar, a story by S …

கிதார் இசைக்கும் துறவி ஆங்கிலத்தில் Read More »

கோவையில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் நூல் வெளியிடுதல் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. டிசம்பர் 16 சனிக்கிழமை காலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இடம் : டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகம்                காளப்பட்டி சாலை. கோவை 641048

உதவிக்கரம்

மழை வெள்ளத்தால் எனது பதிப்பகத்திற்கு ஏற்பட்டுள்ள இடர் அறிந்து உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி நனைந்த புத்தகங்களை உலர வைத்துக் கொண்டிருக்கிறோம். முழுவதும் நனைந்து போய் கிழிந்த நிலைக்கு வந்தவற்றை ஒன்றும் செய்ய இயலவில்லை. அடுத்த சில நாட்களுக்கு உலர்த்தும் பணி தொடரும். அதன்பிறகு இதனை மறுபடி அச்சகத்திற்கு அனுப்பி அட்டை மற்றும் பைண்டிங் சரி செய்யப் போகிறேன். புத்தகங்களை முடிந்தவரை சரிசெய்த பிறகே தேவையானவர்களுக்கு அனுப்பித் தர இயலும்.

நீளும் நட்புக்கரங்கள்

நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தற்காலிகமாகப் புத்தகங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளோம். ஈரமான புத்தகங்களை உலர்த்தும் பணி நடக்கிறது. இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொள்வதாகப் பல்வேறு நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய அமைப்பினர், பள்ளி நிர்வாகிகள் முன்வந்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி. மழைக்குள்ளாகப் புத்தகங்களைக் காப்பாற்ற துணை நின்ற நண்பர்களுக்குத் தீராத நன்றிகள். எனது நிலையைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்லியும் உதவிகள் புரிந்தும் வரும் …

நீளும் நட்புக்கரங்கள் Read More »

புத்தகங்களை இழந்தோம்

நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.  காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின. செய்வதறியாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாயிற்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி …

புத்தகங்களை இழந்தோம் Read More »

கேள்விகள் ஆயிரம்

தேனி சுந்தர் சிரிக்கும் வகுப்பறை நூலை வாசித்தேன். ஒரு குழந்தையின் பார்வையில் எழுகின்ற கேள்விகள் ஆயிரம்.. நாம் எதிர்பார்க்காத திசைகளில் இருந்து சிந்திப்பார்கள். அப்படியான பல கேள்விகளை இந்நூலில் காண முடிந்தது. ராத்திரி விடியாமலேயே நீண்டு போய்க் கொண்டிருந்தால்..? ஏன் கைக்குக் கை என்று பெயர் வந்தது? பள்ளிக்கூடம் என்ற ஒன்றை யார் முதலில் உருவாக்கினார்கள்? பள்ளிக்கூடங்கள் எல்லாம் ஒரே நாளில் காணாமல் போனால் எப்படி இருக்கும்? பள்ளிக் கூடங்களில் எதற்காக இவ்வளவு பெரிய கதவுகள்? ஆசிரியர்கள் …

கேள்விகள் ஆயிரம் Read More »

ஆங்கிலச் சிறுகதைத்தொகுப்பு / விமர்சனம்

The Man Who Walked Backwards and Other Stories, by S. Ramakrishnan. Translated from the original Tamil by Prabha Sridevan. Published by Orient Black Swan Review by Aparna Karthikeyan If I had a chance to meet one character from any of the books I read, I’d pick Thekkan. He is No Ordinary Thief, as the title …

ஆங்கிலச் சிறுகதைத்தொகுப்பு / விமர்சனம் Read More »

மயூ பதிப்பகம்

எழுத்தாளர் ஜா.தீபா மயூ என்ற பெயரில் புதிய பதிப்பகம் ஒன்றைத் துவங்குகிறார். இன்று அதற்கான தொடக்கவிழா நடைபெறுகிறது. மயூ பதிப்பகம் சார்பில் அவரது ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும், ‘மாபெரும் சபை’ என்கிற தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் குறித்த நூலும் வெளியாகின்றன இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

எழுத்தாளனின் உலகம்

எழுத்தாளர்களின் நேர்காணல்களைக் கொண்ட தொகுப்பில் the Paris Review Interviews (WRITERS AT WORK) தொகுதிகளுக்கு இணையே கிடையாது. என்னிடம் 9 தொகுதிகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதன் ஒரு தொகுதியை எடுத்துப் படிப்பேன். எழுத்தாளர்களை நேர்காணல் செய்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து வாசித்துள்ளார்கள். எது போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொகுதி சிறந்த உதாரணம். நேர்காணலின் போது எழுத்தாளரின் வீடு எப்படியிருந்தது. அவர் என்ன உடை உடுத்தியிருந்தார். அவரது அன்றாட உலகம் எப்படியிருக்கிறது என்பதை …

எழுத்தாளனின் உலகம் Read More »

இரண்டு பயணங்கள்

நிலம் கேட்டது கடல் சொன்னது வாசிப்பனுபவம் மீ. சித்ரா ராஜம். ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது ,புல்லினும் சிறியது ஆகிய இரண்டு பெரிய கட்டுரைகளை உடையது இந்த நூல். தேசாந்திரியான எஸ்.ரா ஜப்பானியப் பயணத்தின் போது தான் கண்ட ஹிரோஷிமாவையும், ஹீரோஷிமாவின் மீது குண்டுமழை பொழிந்து நிர்மூலமாக்கிய அமெரிக்காவின் வால்டன் குளத்தோடு இயைந்த தோரோவின் இயற்கை வாழ்வியலையும் நம்மோடு பகிர்கிறார். ஜப்பானிய மக்களின் நன்றி தெரிவித்தல், பொது இடங்களில் நடக்கும் பண்பு, தேசப்பற்று, மொழிப்பற்று ஆகிய விழுமியங்களை விளக்குகிறார். …

இரண்டு பயணங்கள் Read More »