அறிவிப்பு

நூலக வாரவிழா

தூத்துக்குடியில் தேசிய நூலக வார விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியைத் துவங்கி வைத்து உரையாற்றினேன். நூலகர் ராம்சங்கர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் மாலையில் பொது நிகழ்வு. இடைவிடாத மழைக்குள்ளும் அரங்கு நிரம்ப வாசகர்கள் வந்திருந்தார்கள். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணப்பு செய்த நூலக மனிதர்கள் இயக்கத்தின் பொன். மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பியர்ல் ஷிப்பிங் நிர்வாக இயக்குநர் …

நூலக வாரவிழா Read More »

தூத்துக்குடியில்

நவம்பர் 19 ஞாயிறு மாலை தூத்துக்குடியில் நடைபெறும் தேசிய நூலக வாரவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இதனை நூலக மனிதர்கள் இயக்கமும் மாவட்ட மைய நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

வாசகர்களின் அன்பு

கேரளாவின் கோட்டயத்திலிருந்து டி.எம்.சந்திரசேகரன் என்பவர் மின்னஞ்சல் செய்திருந்தார். அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. கூகுள் உதவியால் மொழியாக்கம் செய்து படித்தேன். மலையாளத்தில் வெளியாகியுள்ள எனது உப பாண்டவம் நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார். உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பது மின்னஞ்சல்களுக்கு மேல் வந்திருக்கும். பெரும்பான்மை மலையாளத்தில். தங்களின் பாராட்டினை எழுத்தாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்ற மலையாள வாசகர்களின் பண்பை எண்ணி வியந்து போனேன் மகாபாரதம் மீது மலையாளிகளுக்கு …

வாசகர்களின் அன்பு Read More »

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

விருதுநகர் புத்தகத் திருவிழா நவம்பர் 16 முதல் 27 வரை நடைபெறுகிறது நவம்பர் 18 சனிக்கிழமை மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்.

ஹீப்ரு மொழியில்

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதையை ஆங்கிலம் வழியாக ஹீப்ரு மொழியில் Dr. M. Gluzman மொழியாக்கம் செய்துள்ளார். அவர் தொகுக்கும் சிறந்த இந்தியச்சிறுகதைகள் நூலில் இக்கதை இடம்பெறுகிறது.

எலியின் பாஸ்வேர்ட் – ஆங்கிலத்தில்

எலியின் பாஸ்வேர்ட் என்ற எனது சிறார் நூலை சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.

தூத்துக்குடியில்

தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் பொன். மாரியப்பன் மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து வாசகர் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார். தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நவம்பர் 19 ஞாயிறு மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

அ.கி.கோபாலன்

முனைவர் மு.வளர்மதி எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் நூலில் அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது •• வங்க மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் அ.கி.ஜெயராமன் . இவர் சரத்சந்திரரின் நூல்களை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1941 ல் அ.கி. ஜெயராமன்  தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி சென்னையில் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சரத் சந்திரரின் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது. அ.கி. ஜெயராமனின் உடன் பிறந்த …

அ.கி.கோபாலன் Read More »