அறிவிப்பு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 28 வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் உரையாற்றுகிறேன். தலைப்பு : புத்தகத்தின் கைகள். இடம் : நகர் மன்றம் புதுக்கோட்டை

காந்தி /உரை

அமரர் அ.ராமசாமி எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூல் அறிமுகவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு நூல் குறித்து உரையாற்றினேன்

சொல்வனம்- 300

தமிழ் இணைய இதழ்களில் முதன்மையானது சொல்வனம். சர்வதேச இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும். சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து வெளியிடுவதிலும் சொல்வனம் சிறப்பாகப் பங்களித்து வருகிறது. சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். https://solvanam.com/ சொல்வனம் 300ஆம் இதழ் : புதிய எழுத்துகளும் புதுப் புத்தகங்களும் குறித்த சிறப்பிதழாக வெளிவருகிறது. இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்தக் கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளைக் கவனப்படுத்தும் …

சொல்வனம்- 300 Read More »

உப பாண்டவம் / மலையாள மொழிபெயர்ப்பு

எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே.எஸ்.வெங்கடாசலம். DC புக்ஸ் வெளியிட்டுள்ளார்கள். குறுகிய காலத்தில் இதன் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை வெங்கடாசலம் பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. ஜுலை 3 2023.

தமிழ்நாட்டில் காந்தி

அமரர் அ. இராமசாமி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவர் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூலின் சிறப்புப் பதிப்பு வெளியாகிறது. சந்தியா பதிப்பகம் இந்நூலினை வெளியிடுகிறார்கள். இதன் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இடம் : தக்கர்பாபா வித்யாலயம். தி. நகர் சென்னை. நாள் : ஜுலை 7. மாலை ஆறுமணி

உறுபசி- மலையாளத்தில்

எனது உறுபசி நாவல் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. தீப்பசி என்ற தலைப்பில் லோகோஸ் புக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது. எடமன் ராஜன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

பண்பாட்டின் பயணம்

R பாலகிருஷ்ணன் IAS எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூல் குறித்த அறிமுகவிழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. களம் இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது ThanksShruti Ilakkiyam

திருச்சியில்

களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சி அஜந்தா ஹோட்டலில் 24.6.23 சனிக்கிழமை மாலை ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூலிற்கான அறிமுகவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நூல் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன்