அறிவிப்பு

ஆங்கில மொழிபெயர்ப்பு

எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு borderless journal இதழில் வெளியாகியுள்ளது இதனை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்துள்ளார்

பில்லி காலின்ஸ்

புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் பில்லி காலின்ஸ் தனது கவிதைகளை வாசிக்கும் காணொளி. இதன் முடிவில் கவிதை குறித்த அவரது பேச்சு மிக முக்கியமானது. Basically when you’re teaching poetry, despite that poem (Introduction to Poetry), you’re talking about meaning. We’re basically extracting meaning from the poem. And I realized at some point, that when I wrote a poem, meaning was the last …

பில்லி காலின்ஸ் Read More »

ஆங்கிலத்தில்

எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அக்கதை borderless journal இதழில் வெளியாகிறது.

நீல்பாக் பள்ளி

ரிஷிவேலி அருகே அமைந்துள்ள நீல்பாக் பள்ளியை பற்றிய இந்த இந்த ஆவணப்படம் தனித்துவமான கற்றல் முறையினையும் பள்ளி சூழலையும் விவரிக்ககூடியது. டேவிட் உருவாக்கியுள்ள இப் பள்ளியில் குழந்தைகள் ஐந்து மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். சுதந்திரமாக செயல்படுகிறார்கள். இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. நீல்பாக்கின் கதை கல்வியில் நாம் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த முனைந்த டேவிட்டின் கனவாகவும் விரிகிறது.

தஸ்தாயெவ்ஸ்கி : மூன்று நாடகங்கள்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இதுவரை மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன். மூன்றும் அரங்கில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற நாடகம் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்ககூடியது ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ் தனது குழுவினர்களுடன் இதனை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்திக்காட்டினார். சிறப்பான வரவேற்பைப் பெற்றது. •• தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்பது அவருக்கும் அன்னாவிற்குமான காதலை மையமாகக் கொண்டது இந்த நாடகம் மூன்று முறை மேடையேற்றப்பட்டுள்ளது. •• மரணவீட்டின் குறிப்புகள் தஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையிலிருந்த அனுபவங்களை மையமாகக் கொண்டது. …

தஸ்தாயெவ்ஸ்கி : மூன்று நாடகங்கள் Read More »

ஹரியின் குறும்படம்

எனது மகன் ஹரிபிரசாத் புதிய குறும்படம் ஒன்றை இயக்குகிறான். இதற்கு முன்பாக இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளான். அதில் மைடியர் செகாவ் என்ற குறும்படம் திரைப்படவிழாக்களில் பரிசு பெற்றுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் ஐந்து ஆண்டுகள் மீடியா சயின்ஸ் பயின்றுள்ள ஹரிபிரசாத் தற்போது WHITE KNIGHTS என்ற CREATIVE AGENCY நடத்திவருகிறான்.

அரிய புகைப்படம்

தெலுங்கு எழுத்தாளர் புச்சிபாபு பற்றிய புகைப்படத்தொகுப்பில்1947ல் அவர் ஏற்பாடு செய்த இந்திய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது எடுக்கபட்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அன்றைய புகழ்பெற்ற திரைநட்சத்திரங்களின் அரிய புகைப்படம். ரேடியோ நிலையத்தில் எடுக்கபட்டது போலிருக்கிறது எவ்வளவு அழகான முகங்கள். எத்தனை விதமான பார்வைகள்.  எழுதப்படாத கதைகள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.

இரண்டு பார்வைகள்

சமீபத்தில் வெளியான எனது சிறுகதைகள் முகமது அலியின் கையெழுத்து, இரவுக்காவலாளியின் தனிமை குறித்து வெளியான விமர்சனக்குறிப்புகள் ••• முகமது அலியின் கையெழுத்து கோ.புண்ணியவான் (மலேசியத் தமிழ் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எனது சிறுகதை குறித்து எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு) •• வாசிப்பின்பத்தை நல்கிய நல்ல சிறுகதை. முகம்மது அலியின் கையெழுத்து. உள்ளபடியே பிழைப்புவாதிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றியே கவலைப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து கழித்துவிடுவார்கள்.. கலையின் மகத்துவம் பற்றியோ ரசிகர்களை ஆர்வத்தோடு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றியோ சராசரி மனிதர்களுக்கு …

இரண்டு பார்வைகள் Read More »

உலகப் புத்தக தினம்.

உலகப் புத்தக தினவிழாவினை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை, பொதுநூலகம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் பதினெட்டு நூலகங்களில் கூட்டங்கள் நடத்துகிறார்கள். இதில் நூறு பேர் உரையாற்றுகிறார்கள். புத்தக தினத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவது பாராட்டிற்குரியது. நூலகங்களைப் பண்பாட்டு மையங்களாக மாற்றும் இந்தச் செயல்பாடு முன்னோடியானது. சென்னை தேவநேய பாவாணர் மாவட்ட மையநூலகத்தில் முழு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது இதில் நான் கலந்து கொண்டு உலகின் முதற்புத்தகம் என்ற தலைப்பில் நிறைவுரை ஆற்றுகிறேன். நேரம் …

உலகப் புத்தக தினம். Read More »