முகமது அலியின் கையெழுத்து
இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதை “முகமது அலியின் கையெழுத்து “ வெளியாகியுள்ளது
இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதை “முகமது அலியின் கையெழுத்து “ வெளியாகியுள்ளது
போரிஸ் பாஸ்டர்நாக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவரது புகழ்பெற்ற நாவலான டாக்டர் ஷிவாகோ டேவிட் லீனால் படமாக்கபட்டு ஐந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது. போரிஸ் பாஸ்டர்நாக்கின் வாழ்க்கை மற்றும் ஷிவாகோ நாவலுக்குப் பின்னுள்ள உண்மைகளை விளக்கும் விதமாகப் பிபிசி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது. The Real Doctor Zhivago என்ற இந்த ஆவணப்படம் அவரது கால அரசியல் மற்றும் இலக்கியச் சூழலை தெளிவாக விளக்குகிறது
சாந்தி சிவராமன் சாகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். எனது சஞ்சாரம் நாவலை வாசித்த சாந்தி சிவராமன் தனக்கு மிகவும் பிடித்துப்போகவே அதை முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டார். எனது தொடர்பு கிடைக்காத காரணத்தால் தகவலைத் தெரிவிக்க இயலவில்லை. இவரது மகன் சத்யா சிவராமன் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். சாந்தி சிவராமன் முன்னதாக அசோகமித்ரனின் இன்று, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறார். 2016 …
எனது பிறந்தநாளுக்கு மின்னஞ்சல் மூலமும் நேரிலும் குறுஞ்செய்திகள் மூலமும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனது ஆடிட்டர் சந்திரசேகர் பெரிய கேக் ஒன்றை வாங்கி வந்து பிறந்தநாளைக் கொண்டாடச் செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும் எனது பிறந்த நாளை பெரிய கொண்டாட்டமாக்கிய தூத்துக்குடி மாரியப்பன். ஜெயபால், அருண்பிரசாத் உள்ளிட்ட நண்பர்களுக்கும், நிலக்கோட்டை மாணிக்கம் நகைமாளிகை ஸ்ரீதர், எழில் உணவகம் சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது தீராத நன்றிகள்.
மல்லாங்கிணறு அரசுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறார் K. ராம்குமார். இவர் மாவட்ட அளவில் கலைத்திறன் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக அளித்துள்ளார். ராம்குமாருக்கு எனது அன்பும் நன்றியும். அரசுப் பள்ளிகளில் வாசிப்பை மேம்படுத்தும் இவர் போன்ற ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.
ந. பிரியா சபாபதி (எஸ். ராமகிருஷ்ணனின் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” வாசிப்பு அனுபவம்) அறிவின் திறவுகோல் புத்தகம். புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கம் நூலகம். அந்நூலகம்தான் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” என்ற இந்தப் புத்தகத்தின் மையம். அந்த மையத்தைச் சுற்றி நிகழ்பவையே இக்கதை. நந்து எனும் சிறுவன் வழியாக இக்கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இக்காலக் குழந்தைகளின் மனநிலையின் பிம்பந்தான் இந்த நந்து. ‘குழந்தைகளின் பிடிவாதம் பெரியோர்களின் வீராப்பைப் போன்றது அல்ல’ என்பதை நூலகம் செல்வதன் …
ஜென் குரு டோஜன் பற்றிய திரைப்படம். அவரது வழியாக ஜென் பௌத்தம் உருவான விதம் விவரிக்கபடுகிறது
எனது உணவு யுத்தம் கட்டுரை தொகுப்பினை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விரைவில் இந்நூல் வெளியாக உள்ளது
புதுமைப்பித்தன் நாடகம் குறித்து வெளியான நாளிதழ் பதிவுகள் நன்றி The Indian Express / The Hindu/இந்து தமிழ் திசை
Why Has Bodhi Dharma Left for the East பௌத்த திரைப்படங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தென் கொரியத் திரைப்படமாகும், பே யோங்-கியூன் இதனை இயக்கியுள்ளார். மூன்று புத்த பிக்குகளின் வாழ்க்கையைப் படம் விவரிக்கிறது. தலைப்பைப் பார்த்து பலரும் படம் போதி தர்மாவைப் பற்றியது என நினைக்கிறார்கள். படம் பதிலற்ற அந்தக் கேள்வியை வேறுவிதமாக எதிர்கொள்கிறது. இந்த திரைப்படம் Zen koan போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது