பசுமை விருதுகள் 2023

ஈரோட்டை சார்ந்த மருத்துவர் ஜீவா அற்புதமான மனிதர். சிறந்த காந்தியவாதி. சுற்றுசூழல் குறித்துத் தீவிரமான களப்பணிகளை முன்னெடுத்தவர். தேர்ந்த வாசகர். மொழிபெயர்ப்பாளர்.

காந்தி குறித்த எனது சிறுகதைகள் வெளியான தருணங்களில் அவற்றைப் பாராட்டிப் பேசி ஊக்கப்படுத்தியவர். என் மீது மிகுந்த நேசம் கொண்டவர். ஈரோடு செல்லும் போது தவறாமல் அவரைச் சந்திப்பது வழக்கம்.

2021ல் ஜீவா மறைந்தார். அது தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிய இழப்பாகும்.

மறைந்த மருத்துவர் வெ. ஜீவானந்தம் விட்டுச் சென்ற கனவுத்திட்டங்களை நிறைவேற்ற அவரது பெயரில் அறக்கட்டளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த அறக்கட்டளையின் 2023ம் ஆண்டிற்கான பசுமை விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன

விருது பெற்றுள்ள பேராசிரியர் அ.கா.பெருமாள் மற்றும் திருநங்கைகளுக்கான செயற்பாட்டாளர் சுதா இருவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

0Shares
0