அறிவிப்பு

கி.ராஜநாராயணன் மணி மண்டபம் – விழா

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறப்பான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் நாளை (02.12.22) திறந்து வைக்கிறார். மாலை ஐந்து மணிக்கு கிரா நினைவரங்கத்தில் கலை இலக்கிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கிராவைப் போற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொணடு உரையாற்றுகிறேன்.

கேரளா இலக்கிய விழா

2023 ஆண்டிற்கான KLF-KERALA LITERATURE FESTIVAL கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன்.

கடைசி குதிரைவண்டி – ஆங்கிலத்தில்

எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை ஆர். சதீஷ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் இந்தக் கதை Usawa Literary Review இதழில் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

கனவு இல்லம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். 2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வண்ணதாசன்,ஜி. திலகவதி, எஸ் இராமகிருஷ்ணன், பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன். ப. மருதநாயகம், …

கனவு இல்லம். Read More »

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

நாளை (18.11.22 வெள்ளிகிழமை) மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். மதுரை ரோட்டிலுள்ள கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. பொதுநிகழ்ச்சி மாலை ஆறு மணிக்குத் துவங்குகிறது.

சித்திரப் பூ விழி வாசலிலே

சித்திரப் பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ என்ற பாடலை நேற்றிரவு கேட்டுக் கொண்டிருந்தேன். பி.சுசிலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடிய பாடல் இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்றது. எழுதியவர் கவிஞர் மாயவநாதன். எத்தனை அழகாக எழுதியிருக்கிறார் என்று வியந்து மறுபடியும் கேட்டேன். தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மாயவநாதன். சிறந்த திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார். 35 வயதில் அமரராகிப் போனவர் மாயவநாதன். 10 ஆண்டுகளில் 24 படங்களில் மொத்தம் 54 பாடல்கள் …

சித்திரப் பூ விழி வாசலிலே Read More »

மாநில கல்விக்கொள்கை உருவாகிறது.

தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்விக்கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுகிறேன். நீதியரசர் முருகேசன் தலைமையில் இந்தக் கல்விக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இது போலக் கல்விக் கொள்கைக்கான குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு என்பேன். தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள். மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள். பெற்றோர்கள், கல்வியியல் அறிஞர்கள், பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் …

மாநில கல்விக்கொள்கை உருவாகிறது. Read More »

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 17 துவங்கி 27 வரை நடைபெறுகிறது விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இந்தப் புத்தகத்திருவிழாவில் நவம்பர் 18 மாலை உரையாற்றுகிறேன் தலைப்பு : நினைவின் சித்திரங்கள்.