அறிவிப்பு

மலையாளத்தில்

எனது உறுபசி நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. இடமன் ராஜன் இதனை மொழியாக்கம் செய்திருக்கிறார். லோகோஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. தமிழக அரசின் சிறந்த நூலுக்கான மொழியாக்கத் திட்டத்தில் இதனை வெளியிடுகிறார்கள்.

தேசாந்திரி பற்றி

எனது தேசாந்திரி புத்தகம் இன்றுவரை விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்துவருகிறது. இந்த நூல் பற்றி மலேசியாவில் வாழும் வெங்கட்ராமன் சிறப்பான குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார் Desanthiri – S. Ramakrishnan – Blogternator Desanthiri – S. Ramakrishnanwritten by Venky February 22, 2023 Armed with a copy of Dan Cruickshank’s A Portrait of a City in 13 Walks, I arrived in London in December 2022, …

தேசாந்திரி பற்றி Read More »

கன்னடத்தில்

காந்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் சிறுகதைகளைத் தேர்வு செய்து கன்னடத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் கே. நல்லதம்பி. இந்த நூலில் எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது.

கதைகளின் நாற்காலி

இயக்குநர் வசந்தபாலன் (கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து இயக்குநர் வசந்தபாலன் எழுதியுள்ள குறிப்பு.) எஸ்ரா சிறுகதைகளின் கருவைக் கண்டடைவதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.வரலாற்று மனிதர்கள் தவற விடும் இடைவெளிகளைக் கச்சிதமாக எடுத்து கதைகளாக்கிவிடுவார். அப்படி இந்த 125 குறுங்கதைகளில் பல அற்புதமான கதைகள் உள்ளன. உலகின் உயர்ந்த இலக்கியமாகக் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னகரீனாவில் அன்னாகரீனா தனது மகனுக்காக பொம்மை வாங்கினாள் என்ற இடத்தை அபகரித்து ஒரு கதை எழுதியிருக்கிறார். தன்னைப்பிரிந்து வாழும் மகனுக்கு “உண்மையில் அன்னா …

கதைகளின் நாற்காலி Read More »

ஆங்கிலத்தில்

எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு https://borderlessjournal.com/2023/01/20/nobody-in-the-sky/

போர்ஹெஸ் துப்பறிகிறார்

லூயிஸ் பெர்னாண்டோ வெரிசிமோ பிரேசிலின் புகழ்பெற்ற எழுத்தாளர், போர்ஹெஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் BORGES AND THE ETERNAL ORANG-UTANS என்ற நாவலை எழுதியிருக்கிறார் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆங்கில நாவல்கள் விற்கும் பழைய புத்தகக்கடை குவியல் ஒன்றினுள் இந்த நாவலைக் கண்டெடுத்தேன். எட்கர் ஆலன் போ பற்றிய கருத்தரங்கிற்காகப் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வருகை தரும் வோகெல்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு துப்பறியும் கதையை எழுதியிருக்கிறார். வியப்பூட்டும் இந்த நாவலில் போர்ஹெஸ் துப்பறியும் …

போர்ஹெஸ் துப்பறிகிறார் Read More »

தெலுங்கு சிறுகதை தொகுப்பில்

மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது

அதிகாரத்தின் அறைகள்

(இடக்கை ‘ நாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார்  அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார்.  போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை …

அதிகாரத்தின் அறைகள் Read More »

இந்து தமிழ் நாளிதழில்

இன்று வெளியாகியுள்ள இந்து தமிழ் நாளிதழில் இந்திய இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். https://www.hindutamil.in/news/literature/929422-todays-indian-literature.html

சென்னை சங்கமம் -நாவல் கருத்தரங்கம்

தைத்திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் இன்று துவங்குகிறது. கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி. அவர்கள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்கலைவிழாவாக மாநகரம் எங்கும் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையும் கலை பண்பாட்டுத் துறையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கிய சங்கமம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இலக்கிய நிகழ்வினை கவிஞர் இளையபாரதி ஒருங்கிணைப்பு செய்கிறார். 16ம் தேதி மாலை …

சென்னை சங்கமம் -நாவல் கருத்தரங்கம் Read More »