எனது புதிய நூல்கள்
சென்னை புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 415 & 416ல் எனது புதிய புத்தகங்களைப் பெறலாம்
சென்னை புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 415 & 416ல் எனது புதிய புத்தகங்களைப் பெறலாம்
ஹிந்துஜா குழுமத்தின் துணைத்தலைவர் ஆர். சேஷசாயி இசையிலும் இலக்கியத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். சமீபத்தில் ‘The Dance of Faith’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். இந்நாவல் மிகுந்த பாராட்டினைப் பெற்று வருகிறது. சென்ற ஆண்டு அவர் வாசித்த சிறந்த புத்தகங்களைப் பற்றி The Hindu BusinessLine ல் எழுதியிருக்கிறார். அதில் எனது சஞ்சாரம் நாவல் இடம்பெற்றுள்ளது. ஆர் சேஷசாயி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி
டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையப்படுத்தி நான் எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நாவல் ஓராண்டில் மூன்று பதிப்புகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன இந்நாவலுக்கு எழுதப்பட்ட அறிமுக/ விமர்சனக் கட்டுரைகளை தொகுத்தால் ஐநூறு பக்கங்களுக்கு மேலாக வரும். இந் நாவல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ரஷ்ய மொழிகளில் வெளிவர இருக்கிறது தேசாந்திரி பதிப்பகம் இந்நாவலின் புதிய பதிப்பை புத்தகக் கண்காட்சிக்காக வெளியிட்டுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 415 மற்றும் 416 நான்காவது வரிசையின் பின்பகுதியில் உள்ளது தினமும் மாலை 4 மணிக்கு தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வருவேன், விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் சந்திக்கலாம்
காலம் செல்வம் எனும் செல்வம் அருளானந்தம் எழுதியுள்ள பனிவிழும் பனைவனம் நூலை வெளிவருவதற்கு முன்பாகவே வாசித்தேன். மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறார். முக்கியமான புத்தகம். இந்த எழுத்து துன்பமும் இன்பமும் வலியும் பகடியும் நிறைந்த ஒரு நினைவு கூரல்.என முன்னுரையில் சச்சிதானந்தன் சுகிர்த ராஜா குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. படிக்கும் போது சிரிப்பையும், நூலை வாசித்து முடிக்கும் போது கண்ணீரையும் வரவழைத்த அசலான எழுத்து. யாழ்ப்பாணத்தைக் கொண்டாடும் இந்த நூல் அதன் அரசியல் மாற்றங்கள். பண்பாட்டு நினைவுகள். மற்றும் …
தமிழக அரசின் சார்பில் சென்னை இலக்கியத் திருவிழா ஜனவரி 6 முதல் 8 வரை நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தினுள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஐந்து மையங்களில் இது போன்ற இலக்கியத் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் நிகழ்வு திருநெல்வேலியில் துவங்கியது. சென்னையில் நடைபெறுவது இரண்டாவது இலக்கியத் திருவிழா. தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடும் தமிழக அரசின் இந்த ஏற்பாடு மிகுந்த பாராட்டிற்குரியது. சென்னை இலக்கியத் திருவிழாவில் ஜனவரி 6 …
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு அறிவிக்கபட்டுள்ளது. அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலா பாணி நாவலை வாசித்திருக்கிறேன். காளையார் கோவில் போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவல். தமிழக வரலாற்றின் அறியப்படாத உண்மைகளை தொடர்ந்து தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்திவருபவர் ராஜேந்திரன் அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். •••
கனேடிய இலக்கியத் தோட்டம் சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது சிறந்த எழுத்தாளரான பாவண்ணன் மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லெ.முருகபூபதி இருவருக்கும் வழங்கப்படுகிறது. இருவரும் எனது நண்பர்கள். சிறந்த படைப்பாளிகள். தொடர் செயல்பாட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தியவர்கள். பாவண்ணன் சிறந்த மொழிபெர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். முருகபூபதி இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றிருக்கிறார். மிகத்தகுதியானவர்களை தேர்வு செய்து கௌரவிக்கும் இயல்விருதுக் குழுவிற்கும் நண்பர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பக அரங்கில் புதிய நூல்கள் யாவும் கிடைக்கும்
நேற்று எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. நூல்களை வெளியிட்டு சிறப்பித்தார் ஆனந்தகுமார் ஐஏஎஸ். சிறப்பு விருந்தினராக இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டார். ஆசான் எஸ்.ஏ.பெருமாள். எழுத்தாளர் உதயசங்கர், பொன் மாரியப்பன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள் நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து பால்சாக் பற்றி சிறப்புரை ஆற்றினேன் புத்தகங்களைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். புத்தகத் தயாரிப்பில் உறுதுணை செய்த ஹரிபிரசாத், அன்புகரன். நிகழ்வு ஒருங்கிணைப்பில் உதவிய சண்முகம், தூத்துக்குடியிலிருந்து வந்த பொன் மாரியப்பன். …