அறிவிப்பு

புதிய புத்தகங்கள் 1 : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

கர்னலின் நாற்காலி

ஊரடங்கு காலத்தில் நான் இணையதளத்தில் எழுதிய 125 குறுங்கதைகளின் தொகுப்பு கர்னலின் நாற்காலி என்ற பெயரில் வெளியாகிறது. டிசம்பர் இறுதியில் இதன் வெளியீட்டு விழா நடைபெறும் தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

அந்திமழை 100

அந்திமழையின் நூறாவது இதழ் வெளியாகியுள்ளது. என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்திமழை துவங்கப்பட்ட நாளிலிருந்து அதை அறிவேன். கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற நண்பர்கள் பத்திரிக்கையுலகின் மீது ஆர்வம் கொண்டு சிற்றிதழாகத் துவங்கி பின்பு இணைய இதழ், அச்சிதழ், பதிப்பகம் என்று வளர்ந்திருக்கிறார்கள் நல்ல நண்பர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெறும் என்பதற்கு அந்திமழையின் நண்பர்களே சாட்சி. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், பண்பாடு என அந்திமழையின் பரந்த பார்வையும் …

அந்திமழை 100 Read More »

தெலுங்கில்

அவன் பெயர் முக்கியமில்லை என்ற எனது சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி.

ஆவநாழி

ஆவநாழிஎன்ற இணைய இதழை கவிஞர் சுதேசமித்ரன் நடத்தி வருகிறார். முன்பு ஆரண்யம் என்ற கலை இலக்கிய இதழை ஸ்ரீபதி பத்மநாபாவோடு இணைந்து கொண்டுவந்திருக்கிறார்., நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. இலக்கியம் சினிமா கலை என தீவிரமான கட்டுரைகள் நேர்காணல்களுடன் மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளியானது. சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான், எம் டி வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய படங்களின் முழுமையான திரைக்கதைகள் அதில் வெளியாகியிருந்ததை மறக்கமுடியாது. சுதேசமித்ரன் சிறந்த வடிவமைப்பாளர் …

ஆவநாழி Read More »

24 சிறுபாடல்கள்

கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சமகாலக் கவிஞர்கள் பற்றிய கவிதையின் கையசைப்பு என்ற தடம் இதழில் வெளியான பத்தியிலும் அவரைப் பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். கவிஞர் சமயவேல் அவரது பத்து கவிதைகளை மொழியாக்கம் செய்து உதவியிருந்தார். தேர்வு செய்யப்பட்ட கோ யுன் கவிதைகளை 24 சிறுபாடல்கள் என்ற தொகுப்பாக விவேக் கிருஷ்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். விவேகானந்தன் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இது …

24 சிறுபாடல்கள் Read More »

புயலுக்குப் பின்பு

நிவர் புயல் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னையே முடங்கிப் போனது. நேற்று முழுவதும் மின்சாரத் தடை காரணமாக வீடு இயங்கவில்லை. எனது வீதியே முழு இருளில் மூழ்கிப் போனது. மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்கள். இடைவிடாத கன மழை. மழையுடன் பலத்த காற்றும் சேர்ந்து கொண்டது. செம்பரப்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் எங்கே வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் மேலோங்கியிருந்தது. அடையாறு,வேளச்சேரி, கோட்டூர்புரம் பகுதியில் வாழும் நண்பர்கள் தங்கள் பகுதியினை வெள்ளம் சூழ்ந்து வருவதைப் பதற்றமாகத் …

புயலுக்குப் பின்பு Read More »

கனலி ஜப்பானிய சிறப்பிதழ்

இந்த ஆண்டிற்கான எனது புதிய புத்தகங்களின் தயாரிப்புப் பணிகள் காரணமாக இணையத்தில் வெளியாகும் இதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. கனலி இணைய இதழ் வெளியிட்டுள்ள ஜப்பானியச் சிறப்பிதழைத் தினமும் ஒன்றிரண்டு எனக் கடந்த பத்து நாட்களாக வாசித்தேன். கனலியின் ஜப்பானியச் சிறப்பிதழ் மிக முக்கியமான பங்களிப்பு. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், நேர்காணல்கள் எனச் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். மிகச்சிறப்பான மொழியாக்கங்கள். நேர்த்தியான வடிவமைப்பு. சிறுகதைகளில் என் கனவுகளின் கெண்டை மீன், கடைசிப் புகைப்பிடிப்பாளன், தூய …

கனலி ஜப்பானிய சிறப்பிதழ் Read More »

புதிய நாவல்

( முகப்பு அட்டை தற்காலிகமானது.) இன்று லியோ டால்ஸ்டாய் நினைவு நாள் நவம்பர் 20, 1910 ல் டால்ஸ்டாய் தனது 82வது வயதில் மறைந்தார். தனது யஸ்னயா போல்யானா பண்ணையிலே டால்ஸ்டாய் புதைக்கபட்டார்.  அவருக்குக் கல்லறை அமைக்கபடவில்லை. புல்வெளியில் தான் அவரது புதைமேடு காணப்படுகிறது. ஏழை விவசாயி ஒருவனைப் போலவே தானும் புதைக்கப்பட வேண்டும் என்று டால்ஸ்டாய் விரும்பினார். ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் டால்ஸ்டாயை ஆழ்ந்து படித்திருக்கிறேன். அவர் பற்றிச் …

புதிய நாவல் Read More »