அறிவிப்பு

ஏழுதலை நகரம்

சில தினங்களுக்கு முன்பாக லா.ச.ராவின் புதல்வர் சப்தரிஷியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது“ உங்கள் புத்தகங்களிலே மிகவும் பிடித்தது ஏழு தலை நகரம். அதை உப பாண்டவம் நாவலுக்கு இணையாகச் சொல்வேன். குழந்தைகளுக்கான நாவல் என்று சொன்னாலும் அது சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் படிக்க வேண்டும். இப்படி ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தை நான் படித்ததில்லை. என் மகள் அதை விரும்பிப் படித்தாள். நாங்கள் சேர்ந்து அந்தக் கதையைப் பலமுறை படித்திருக்கிறோம். கண்ணாடிக்காரத் தெருவும் அதில் …

ஏழுதலை நகரம் Read More »

அஞ்சலி

தமிழ் பதிப்புலகின் முன்னோடி ஆளுமையான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தரத்தில் தமிழ் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நேர்த்தியான வடிவமைப்பு. அச்சாக்கம் எனப் புத்தக உருவாக்கத்தைக் கலைப்படைப்பாக மாற்றியவர். அவர் உருவாக்கிய தற்காலத் தமிழ் அகராதி ஈடு இணையற்றது. க்ரியா பதிப்பகம் போலப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற அளவுகோலை பதிப்புலகிற்கு உருவாக்கித் தந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தேர்ந்த இலக்கிய வாசகர். மிகச்சிறந்த எடிட்டர். அவரது முயற்சியின் காரணமாகவே ஆல்பெர் …

அஞ்சலி Read More »

வாழ்த்துகள்

நேற்று பாரதப்பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பொன் மாரியப்பனை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அதிலும் தமிழிலே உரையாடியது மிகுந்த பாராட்டிற்குரியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத் தூத்துக்குடியில் முடிதிருத்தகம் வைத்திருக்கும் பொன் மாரியப்பன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது முடிதிருத்தகத்தில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்திருப்பதாகவும். வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் அதை ஆர்வத்துடன் படிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரைப் பாராட்டி எனது இணையதளத்தில் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து பலரும் மாரியப்பனுடன் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். நேரில் சென்று வாழ்த்தைத் தெரிவித்தார்கள். …

வாழ்த்துகள் Read More »

தென்னிந்திய நாடகவிழாவில்

சங்கீத நாடக அகாதமியின் Festival of plays by Young Directors of South Zone நாடகவிழாவில் எனது அரவான் நாடகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடகத்தைப் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறையைச் சேர்ந்த சுகுமார் சண்முகம் இயக்கியுள்ளார். முன்னதாக அவர் அரவான் நாடகத்தைப் புதுவையில் மேடையேற்றியபோது கண்டிருக்கிறேன். மிகச்சிறப்பான தயாரிப்பு. சுகுமார் சிறந்த நடிகர். நவீன நாடகங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். ஆரோவில் நாடகக் குழுவோடு இணைந்து ஆங்கில நாடகங்களிலும் பணியாற்றுகிறவர். திரைத்துறையிலும் நடிகர் தேர்வு …

தென்னிந்திய நாடகவிழாவில் Read More »

தெலுங்கில்

எனது கைதட்டல்கள் போதும் என்ற சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது.  sakshi  ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. தெலுங்கில் மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. Link : https://epaper.sakshi.com/2860049/Funday/18-10-2020#page/1/1

வாழ்த்துகள்

நவீனத் தமிழ் கவிதையின் தனித்துவமிக்க ஆளுமை கவிஞர் கலாப்ரியா. வடிவ ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தனது கவிதைகளில் இவர் நிகழ்த்திய பாய்ச்சல் குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திய குற்றாலம் கவிதைப்பட்டறை மறக்கமுடியாதது. கவிஞராக மட்டுமின்றி  நாவல், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி பன்முகப் படைப்பாளியாக விளங்குகிறார். தமிழ் விமர்சனவுலகில் தனித்துவமிக்க ஆளுமையாக விளங்குபவர் பேராசிரியர் பஞ்சாங்கம். பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சமகாலப்புனைவுகள் வரை ஆழ்ந்து திறனாய்வு செய்து வருபவர். இவர்கள் இருவருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கு விருது பெறும் அண்ணன் கலாப்ரியா அவர்களுக்கும்,  பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் தொடர்ந்து சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் விளக்கு அமைப்பிற்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். ••

ஆசிய சினிமா இதழ்.

வீட்டில் ஏதோ புத்தகம் ஒன்றைத் தேடும் போது வாங்கிப்படித்து பாதுகாத்து வைத்திருந்த Cinemaya இதழ்கள் கையில் கிடைத்தன. எனது கல்லூரி நாட்களில் விரும்பி வாசித்த சினிமா இதழ் Cinemaya. டெல்லியிலிருந்து காலாண்டிதழாக வெளியானது. இந்த இதழை வாங்குவதற்காகவே திருவனந்தபுரம் போய் வருவேன். விருதுநகரிலிருந்து பாசஞ்சர் ரயில் மூலம் திருவனந்தபுரம் செல்வது பிடித்தமானது. மாதம் இரண்டு முறையாவது சென்றுவிடுவேன். நாலரை மணி நேரப்பயணம். மழைக்காலத்தில் பயணம் செல்லும் போது வழியெங்கும் பசுமை ததும்பி வழிய சிலுசிலுவெனக் காற்று வீசும். …

ஆசிய சினிமா இதழ். Read More »

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்  என்ற எனது சிறுகதை The Tenth Rasa  என்ற பென்குவின் வெளியிட்டுள்ள ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் லதா ராமகிருஷ்ணன். ••