காந்தி
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆடியோ ஒலிபரப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு Nilu Nadi Sakshiga” Story https://youtu.be/3WXcSxZ5lpQ Telugu Translator: Jillela Balaji Narrator: Malleswara Rao Akula, IBS
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆடியோ ஒலிபரப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு Nilu Nadi Sakshiga” Story https://youtu.be/3WXcSxZ5lpQ Telugu Translator: Jillela Balaji Narrator: Malleswara Rao Akula, IBS
அன்பிற்குரிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயார் திருமதி.ராஜாமணி அவர்கள் இன்று காலமானார். திருமதி.ராஜாமணி எங்கள் ஊருக்கே தாயாக விளங்கியவர். மல்லாங்கிணற்றில் அவர்களின் வீடு ஒரு அன்னசாலை. வீடு தேடி வந்தவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்த அன்பின் திருவுருவம். எங்கள் குடும்பத்தின் மீது அவர்கள் காட்டிய அன்பு நிகரற்றது. அன்னையை இழந்து வாடும் அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். ••
இம்மாத( அக்டோபர் 2020) அந்திமழை இதழில் தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்
விருட்சன் என்ற புனைபெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் தமிழில் அதிகம் கவனிக்கப்படாத தென்கிழக்கு ஆசியக் கவிதைகளை ஆர்வத்துடன் மொழியாக்கம் செய்து வருகிறார். இவர் மொழியாக்கம் செய்து சிறுவெளியீடாக வெளியிட்டுள்ள சபார்டி ஜோகோ தமோனோ (Sapardi Djoko Damono ) இந்தோனோஷியாவின் முக்கியக் கவிஞர். அவரது கவிதைகளின் இரண்டு ஆங்கிலத் தொகுப்புகள் என்னிடமுள்ளன. அவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன். விருட்சன் சபார்டியின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல தேர்வு. மொழியாக்கத்தில் சில சொற்களைத் திருத்தம் செய்து மேம்படுத்தினால் …
பாரதி பாஸ்கர் சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த வாசகர். தன் பேச்சின் நடுவே தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள் குறித்து அழகாக எடுத்துப் பேசக்கூடியவர். அவரது மேடைப்பேச்சை ரசித்துக் கேட்டிருக்கிறேன். சிரித்த முகத்துடன் ,கடுஞ்சொல்லால் எவரையும் தாக்கிப் பேசாமல்,மிக நாகரீகமான முறையில், அழகாகத் தனது கருத்துகளை முன்வைக்கக்கூடியவர். லாக்டவுன் காலத்தில் அவர் தனக்கு விருப்பமான சிறுகதைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். தி.ஜானகிராமன், வண்ணதாசன். அ.முத்துலிங்கம் சூடாமணி எனச் சிறந்த படைப்பாளிகளின் கதைகளைப் பாரதி பாஸ்கர் சிறப்பாக …
நண்பர் தமிழ்நேசன் நடத்தும் மும்பை இலக்கியக் கூடம் நிகழ்வில் எழுத்தாளர் அகரமுதல்வன் எனது படைப்புகள் குறித்து உரையாற்றுகிறார் நாள்: 03.10.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி ஜூம் செயலி மற்றும் பேஸ்புக் நேரலை வழியாக நிகழ்வு நடைபெறும். Meeting Id : 215 501 3891 Password : 231764. தொடர்புக்கு : இரா. தமிழ் நேசன்
இந்தி திரைப்பட இயக்குநர் சுதிர் மிஸ்ரா பற்றிய ஆவணப்படத்தில் அவர் தான் படித்த சாகர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே உள்ள மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் உரையாடுகிறார். அப்போது இந்திய இலக்கியத்தில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்கிறார். ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மாணவன் மட்டும் பிரேம்சந்த் என்கிறான்.. சமகால எழுத்தாளர்கள் ஒருவரையும் படிக்கவில்லையா என்று மறுபடியும் கேட்கிறார். ஒரு மாணவன் மட்டும் சேதன் பகத் என்கிறான். இப்படித்தானிருக்கிறது நமது கல்விமுறை. யாரும் எந்த முக்கிய …
இலக்கிய அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும் சிறந்த படைப்புகள் குறித்து கலந்துரையாடும் நண்பர்கள் குழுவாக அசைவு உருவாக்கபட்டிருக்கிறது அசைவு இலக்கிய விவாதக் குழு நண்பர்கள் இம்முறை விவாதத்திற்கு எனது சிறுகதை காகிதப்பறவைகளைத் தேர்வு செய்து உரையாடியிருக்கிறார்கள். காகிதப்பறவைகள் குறித்து விவாதித்த கருத்துக்கள் தொகுத்து கீழே பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. அசைவு இலக்கிய விவாதக்குழு நண்பர்கள் ம.கண்ணம்மாள், க.விக்னேஷ்வரன், சரவணன் மாணிக்க வாசகம், சுஷில் குமார், சக்திவேல், சுஜா, நவீன், காயத்ரி, பால ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் …
நெருக்கமானவர்களின் மரணம். வழிகாட்டியாக இருந்தவர்களின் மரணம் எனத் தொடர்ந்து மரணச்செய்திகளைக் கேட்டுக் கேட்டு மனம் துக்கத்திலே துவண்டு போயிருக்கிறது. நேற்று முழுவதும் நண்பர்கள் பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கான துக்கத்தையும் அவரது இனிமையான பாடல்களைக் கேட்ட நாட்களையும் பகிர்ந்து கொண்டேயிருந்தார்கள். நான் அதிகம் சினிமா பாடல்களைக் கேட்பவனில்லை. ஆனாலும் என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூடி நிறையப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். பாடல்களுக்காகவே ஒரு படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த நாட்களில் கேசட்டில் சினிமா பாடல் பதிவு …
எழுத்தாளர் தி.ஜானகிராமன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது ஜப்பானிய பயணநூலான உதயசூரியன் குறித்த உரை ஒன்றை வெளியிட்டுள்ளேன் தேசாந்திரி Youtube page ல் இதனைக் காணலாம் இணைப்பு: https://youtu.be/9UFRomzf3LY