ஜெயமோகனின் அவதூறு

ஜெயமோகன் தனது இணையதளத்தில் இன்று என்னைப் பற்றி ஒரு அவதூறு எழுதியிருக்கிறார். வழக்கமாக இது போன்ற அவதூறுகள் எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது நான் பெரிதும் மதிக்கும் கோவை ஞானியின் பெயரில் வந்துள்ள பொய்

ஜெயமோகனின் இந்த அவதூறு எப்போதும் போல இறந்தவரின் வாக்குமூலமாக ஒலிக்கிறது.

விஷ்ணுபுரம் நூல் விழாவில் நான் பேசியது உண்மை. புத்தகம் படிக்காமலே நான் பேசினேன் என்பது அவரது கற்பனை. தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது இது போன்று சேற்றை வாறி இறைப்பது அவரது வழக்கம் .

விழாவில் கோவை ஞானியுடன் விஷ்ணுபுரம் நூல் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. சுந்தர ராமசாமியுடன் மட்டுமே பேசினேன். அவரும் எந்த மறுப்பையும் சொல்லவில்லை

ஞானியை அதன்பிறகு பலமுறை கோவையில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒருமுறையும் அவர் மறுத்தோ, கண்டித்தோ ஒரு வார்த்தை சொன்னது கிடையாது.

காலச்சுவடு அப்படி என்னிடம் பேச்சின் உரையைக் கேட்கவேயில்லை. இதுவும் ஜெயமோகனின் கற்பனையே.

அவரால் எவர் மீதும் சேற்றை வாறி அடிக்க முடியும்.  அது ஒருவகை உளவியல் சிக்கல். சக எழுத்தாளர்கள் மீது அவர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை உலகம் அறியும்.

என் தந்தையைப் பற்றி  ஒரு மோசமான குறிப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கேலி என்ற பெயரில் தனது இணையதளத்தில் எழுதினார் அது என் குடும்பத்தை மிகவும் வருத்தமடைய செய்தது. எழுத்தாளின் தந்தை தாய் மனைவி என எவரையும் இழிவுபடுத்த ஜெயமோகன் தயங்கியதேயில்லை.

இன்று என் மீதும் பொய்களை வாறி இறைக்கிறார்.  சதா தன்னைப் பற்றி பிறர் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பது ஒரு கொடிய நோய்.

இந்த நோய் முற்றிய நிலையில் இருக்கிறார் ஜெயமோகன்.

என்ன தான் ஜெயமோகன் வேண்டும் உங்களுக்கு.

ஏன் இப்படிக் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பு ஒன்றின் துக்கத்தில் இருக்கிறேன்.

உங்களுடன் வெட்டிவிவாதம் செய்ய விரும்பவில்லை.

என் மீதான அவதூறு மற்றும் எனது புகைப்படத்தை உடனடியாக இணையதளத்திலிருந்து நீக்கவும்.

•••

0Shares
0