அறிவிப்பு

காந்தி சிறுகதை

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆந்திர ஜோதி ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. இதனை சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியை சேர்ந்த ஜி. பாலாஜி. இந்தக் கதையை வாசித்துவிட்டு ஆந்திராவிலிருந்து நிறைய பாராட்டு செய்திகள் மின்னஞ்சலில் வந்தவண்ணம் இருக்கின்றன. கடப்பா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஒரு டாக்டர் தன் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை படித்ததில்லை என்று சிறந்த பாராட்டுரை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.  இன்னொரு மொழியில் எனது கதை இத்தனை தீவிரமாக வாசிக்கபட்டு …

காந்தி சிறுகதை Read More »

இரண்டு ஆவணப்படங்கள்

மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீர் குறித்த ஆவணப்படம். பஷீரின் கதைகள் மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது. பஷீரின் வீடு. அவரது மனைவியின் நேர்காணல், பஷீர் குறித்த நாடகம் என நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது இந்த ஆவணப்படம் My Name Is Basheer https://youtu.be/9-Tm24XRRCE ••• குஞ்ஞுண்ணி  மலையாளத்தின் முக்கியக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னஞ்சிறிய கவிதைகளின் மூலம்  அற்புதமான கவித்துவ அனுபவங்களை வெளிப்படுத்தியவர். அவரது …

இரண்டு ஆவணப்படங்கள் Read More »

இலக்கியச் சிந்தனை பரிசு

எனது சிறுகதை சிற்றிதழ் 2019ம் ஆண்டிற்கான இலக்கியச் சிந்தனை பரிசு  பெற்றுள்ளது. இந்தக் கதை ஆனந்தவிகடனில் வெளியானது. ஆண்டு தோறும் ஏப்ரலில் நடைபெறும் பரிசளிப்பு விழா இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. இந்தச் சிறுகதையை உள்ளடக்கிய 12 கதைகள் சேர்ந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். ••

துருபத்

ஹிந்துஸ்தானி இசையின் துருபத் குறித்த இயக்குநர் மணிகௌலின் மிக முக்கியமான படைப்பு. இதைக் காணும் போது மெய்மறந்து போய்விடுகிறது பரவசமூட்டும் அனுபவம் தரும் மிகச்சிறந்த ஆவணப்படம்.. பிலிம் டிவிசன் தயாரிப்பில் உருவானது. இணைப்பு: https://youtu.be/Lye2FSx0F4c

சுந்தர ராமசாமி ஆவணப்படம்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறித்த அரிய ஆவணப்படம் ஒன்றை ஆர்.வி.ரமணி இயக்கியுள்ளார். நீ யார் என்ற இந்த ஆவணப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் அரிய நேர்காணல், உரை, மற்றும் அவர் படைப்புகள் குறித்த பார்வைகள், அவரது இறுதி நாட்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. சிறப்பான ஆவணப்படம். Nee Yaar? (Who are You?) Directed by RV Ramani | 2008 இணைப்பு https://youtu.be/a1wxroOZYxQ

வாழ்த்துகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி. ராஜநாராயணனின் 98-ஆவது பிறந்த நாளுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கிராவிற்கு ஞானபீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன். இணைப்பு : https://youtu.be/fc_cLDMuYyc

ஜி.நாகராஜன்

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் சிறுகதைகள் குறித்த உரையை வெளியிட்டுள்ளேன். இந்தப்  புதிய காணொளி தேசாந்திரி youtube பக்கத்தில் உள்ளது புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம். இணைப்பு : https://youtu.be/5n8KZYy-ux0

சென்னையும் நானும் 18

கடந்த நான்கு மாதமாக லாக்டவுன் காரணமாக சென்னையும் நானும் காணொளித் தொடருக்கான படப்பிடிப்பு மேற்கொள்ளமுடியவில்லை. தற்போது மீண்டும் அந்த காணொளித் தொடர் வெளியாகியுள்ளது சென்னையும் நானும் 18 தேசாந்திரி youtube பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம். இணைப்பு : https://youtu.be/TyCop8ck5kI

வாழ்க்கையே கதை.

Web of Stories – Life Stories of Remarkable People எழுத்தாளர்கள். கவிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள்  எனப் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களைச் சிறு சிறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த தொகுப்பிது. Adam Zagajewski Jean-Claude Carrière KG Subramanyan Redmond O’Hanlon (Writer) Julia Hartwig நேர்காணல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. •• https://www.youtube.com/c/webofstories/playlists

Arts and ideas

The Journal of Arts and ideas மிக முக்கியமான கலை இலக்கிய இதழ். 1983ல் இருந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த இதழில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நேர்காணலை முதன்முதலில் வாசித்தேன். அவர் நோபல் பரிசு பெற்றவுடனே இந்த நேர்காணல் வெளியாகியிருந்தது. இலக்கியம் சினிமா, கலை, அரசியல், பண்பாடு என இந்த இதழில் வெளியான கட்டுரைகள் யாவும் சிறப்பானவை. இந்த இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. https://dsal.uchicago.edu/books/artsandideas/