அறிவிப்பு

சைக்கிள் கமலத்தின் தங்கை- விமர்சனம்.

–MJV எஸ்.ரா அவர்களின் புத்தகத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பாகவே ஒரு சிறு பரபரப்பு எப்போதும் ஒட்டிக் கொள்வதைத் தடுக்க முடிவதில்லை. அது போன்றதொரு நிலை தான் இந்தச் சைக்கிள் கமலத்தின் தங்கை என்ற சிறுகதை தொகுப்பிற்கும் இருந்தது. சில முறை யோசிப்பதுண்டு, வேகமாக நம்மைத் தன் உலகத்தில் இழுத்து சென்று, இருத்திக் கொள்ளவும் செய்யும் புத்தகங்கள் என்ன வகையாக இருக்கும் என்று! அந்த வரிசையில் இந்தத் தொகுப்பையும் மிக விரைவில் வாசித்து முடித்தாயிற்று. கோயிந்துவும் திலிப்குமாரும், அருணகிரியும் …

சைக்கிள் கமலத்தின் தங்கை- விமர்சனம். Read More »

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

முனைவர் ம. இராமச்சந்திரன் உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவரின் பள்ளிப் படிப்பும் குடும்பச் சிக்கலும் யதார்த்த சமூகச் சூழலும் பிற்கால …

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை Read More »

சிங்கப்பூர் இலக்கிய விருதுகள்

சிங்கப்பூரின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான  Singapore Book Council விருது 2020 அறிவிக்கபட்டுள்ளது. இந்த விருது பெற்றுள்ள எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், ஹேமா இருவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். சித்துராஜ் கவிதை நாவல் என இரண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. **

நாதஸ்வர ஓசையிலே

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. பூவும் பொட்டும் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கோவர்த்தனம். பாடல் படமாக்கப்பட்டவிதம் அத்தனை சிறப்பாகயில்லை. படமும் சுமாரே. கண்ணதாசன் எழுதிய பாடல் TMS மற்றும் P.சுசிலா இனிமையான குரல் கொடுத்துப் பாடியிருக்கிறார்கள். 1968-இல் பூவும் பொட்டும் வெளிவந்தது இந்தப் பாடல் ரேடியோவில் கேட்டுக் கேட்டு மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. எப்போதும் இந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினாலும் மறுநிமிசம் மனது …

நாதஸ்வர ஓசையிலே Read More »

அஞ்சலி.

பேரன்பு மிக்க நண்பரும் இடதுசாரி இயக்கத்தின் முக்கியத் தலைவருமான டி.லட்சுமணன் நேற்றிரவு காலமானார். தோழர் டி.எல் என்று அழைக்கப்பட்ட டி.லட்சுமணன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். கால்நடை ஆய்வாளராக அரசுப்பணியிலிருந்தவர் டி.லட்சுமணன். தமிழக அரசு ஊழியர் சங்கத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். மாற்றுத்திறனாளிக்கான அமைப்பின் தலைவராகச் செயல்பட்டவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையினை மேற்கொண்டு வந்த அற்புதமான மனிதர் அன்பு காட்டுவதில் டி.எல் அவர்களுக்கு நிகரே கிடையாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக …

அஞ்சலி. Read More »

வண்ணதாசன் 75

தமிழின் மகத்தான படைப்பாளி வண்ணதாசனின் 75 வது பிறந்த நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாண்டியாட்டம்

எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இணைய இதழில் உலக இலக்கியங்கள் குறித்து அற்புதமான கட்டுரைகளை எழுதிவருபவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். நான் அவரது எழுத்தின் ரசிகன். அவரது கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவுள்ளது. யாவரும் பதிப்பகம் வெளியிடும் இந்நூலிற்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமான நண்பர்கள் நூலை முன்பதிவு செய்து கொள்ளவும். எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-… A/c no.34804520231 (yaavarum publishers) SBI …

பாண்டியாட்டம் Read More »

இனி

ஒவ்வொரு மாதமும் எனக்கு இருபது முப்பது சிற்றிதழ்கள் தபாலில் வருவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காலத்தில் ஒரு இதழும் வெளியாகவில்லை. தபால் வருவதே இரண்டு மாதங்களாக இல்லாமல் இருந்தது. தற்போது தபால் வருகிறது. ஆனால் இதழ்கள் ஒன்றையும் காணவில்லை. சிற்றிதழ் நடத்துகிறவர்களின் பொருளாதாரக் கஷ்டம் உலகம் அறிந்தது. அதிலும் இந்த ஊரடங்கு காலத்தில் அச்சிடுவது, தபாலில் அனுப்புவது இயலாத காரியம். நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. அது போல இவர்களால் செயல்படவும் முடியாது, தொழில்நுட்ப வசதிகளும் குறைவு. …

இனி Read More »