அறிவிப்பு

பிறமொழிகளில்.

கதாவிலாசம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகம் இதனை வெளியிட முன்வந்துள்ளது. ஜனவரி 2021ல் இந்நூல் வெளியாகவுள்ளது •• எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பும் ஜனவரியில் வெளியாகிறது •• சஞ்சாரம் நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 2021ல் வெளியாகவுள்ளது •• உப பாண்டவம் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. பிரபல புத்தக நிறுவனம் இதனை வெளியிடுகிறது •• இடக்கை நாவல் செர்பிய மொழியில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. 2021 ஜூனில் இந்த நாவல் வெளியாகக் கூடும் •• தெலுங்கில் …

பிறமொழிகளில். Read More »

ஜெயமோகனின் அவதூறு

ஜெயமோகன் தனது இணையதளத்தில் இன்று என்னைப் பற்றி ஒரு அவதூறு எழுதியிருக்கிறார். வழக்கமாக இது போன்ற அவதூறுகள் எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது நான் பெரிதும் மதிக்கும் கோவை ஞானியின் பெயரில் வந்துள்ள பொய் ஜெயமோகனின் இந்த அவதூறு எப்போதும் போல இறந்தவரின் வாக்குமூலமாக ஒலிக்கிறது. விஷ்ணுபுரம் நூல் விழாவில் நான் பேசியது உண்மை. புத்தகம் படிக்காமலே நான் பேசினேன் என்பது அவரது கற்பனை. தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது இது போன்று சேற்றை வாறி …

ஜெயமோகனின் அவதூறு Read More »

நினைவுகளின் ஊர்வலம்.

ஞானபீடம் விருது பெற்றுள்ள மலையாளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியப் பகுதிகளையும் அவரது நேர்காணல் ஒன்றையும் கொண்டுள்ள தொகுப்பே நினைவுகளின் ஊர்வலம். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பினை டாக்டர் டி.எம்.ரகுராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். எம் டி வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வறுமையும் கஷ்டங்களும் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. அவரது அப்பா இலங்கையில் வேலை பார்த்த நினைவுகளையும், மாமா வீட்டில் தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களையும் வாசுதேவன் …

நினைவுகளின் ஊர்வலம். Read More »

தெலுங்கில்

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் என்ற எனது சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியைச் சேர்ந்த பாலாஜி.

பெயர் குழப்பம்

சக்கரவர்த்தி பீட்டர், வீரம் விளைந்தது என்ற இரண்டு ரஷ்ய நூல்களை நான் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன் என நினைத்து பலரும் என்னைத் தொடர்பு கொண்டு அதன் பிரதிகளைக் கேட்கிறார்கள். நான் இந்த நூல்களை மொழியாக்கம் செய்யவில்லை. அதைச் செய்தவர் தோழர் எஸ்.ஆர்.கே. இவர் ஜெயகாந்தனின் ஆசான்.மதுரைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன். இடது சாரி இயக்கத்தலைவர். அவர் தான் இந்தநூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார் பலரும் எஸ். ராமகிருஷ்ணன் என்றதும் நான் என நினைத்துக் குழம்பிக் கொள்கிறார்கள். டாக்டர் எஸ்.ஆர்.கே …

பெயர் குழப்பம் Read More »

ஞானக்கூத்தன்

கவிஞர் ஞானக்கூத்தனின் அபூர்வமான  புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் இன்று பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு கவிஞர் தேவதச்சனோடு பேசிக் கொண்டிருக்கையில் ஞானக்கூத்தனின் மறைவை தன்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனின் புன்னகை வசீகரமானது.  பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அவரது இளமையின் புன்னகையை அடையாளப்படுத்துகிறது. நன்றி https://www.gnanakoothan.com/

வாழ்த்துகள்

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் One Story Project-இன் ஒரு பகுதியாக எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் தர்மரதம் கதை தேர்வு செய்யப்பட்டு மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் புதிய கதைமொழியில் நாம் அறியாத உலகை அடையாளம் காட்டுகின்றன.  மிகத் தீவிரமான வாசகர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.  சிங்கப்பூரின் வரலாற்றையும் சமகாலத்தையும் புதிய வெளிச்சத்தில் எழுதும் அவரது படைப்புகள் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ••

காலச்சுவடு இதழில்

ஆகஸ்ட் மாத காலச்சுவடு இதழில் எழுத்தாளர் ஜே.டி.சாலிஞ்சர்  பற்றிய ஆவணப்படம் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறேன் காலச்சுவடு இதழை வாசிக்க : https://www.kalachuvadu.com ** august 1 20

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளியும் அன்புமிக்க நண்பருமான எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவிற்கு இதயப் பூர்வமான அஞ்சலி

குறுங்கதைகளின் வழியே

இந்த ஊரடங்கு காலத்தில் 125 குறுங்கதைகள் எழுதியிருக்கிறேன். குறுங்கதை எழுதுவது பெரிய நாவல் எழுதுவதை விடவும் மிகச் சவாலானது குறுங்கதை எனும் வடிவம் இல்லாத நாடேயில்லை. அதை மிக அதிகமாக மதம் பயன்படுத்தியிருக்கிறது. கதை சொல்லாத ஞானியே இல்லை. நாட்டுப்புறக்கதைகளில் குறுங்கதை வடிவமே பிரதானமாக உள்ளது. எழுத்து மரபு உருவானபிறகு தான் குறுங்கதைகள் நீட்சியடைந்தன. நவீன இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதை வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். மெய் தேடல், தத்துவம் மிகைபுனைவு. மயா யதார்த்தம், கனவுத்தன்மை, …

குறுங்கதைகளின் வழியே Read More »