கன்னடத்தில்
THUSHARA கன்னட மாத இதழில் எனது சிறுகதை காந்தியைச் சுமப்பவர்கள் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் கே நல்லதம்பி. ••• மார்ச்2 2020
THUSHARA கன்னட மாத இதழில் எனது சிறுகதை காந்தியைச் சுமப்பவர்கள் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் கே நல்லதம்பி. ••• மார்ச்2 2020
சென்னையும் நானும் காணொளித் தொடரின் 12 வது பகுதி வெளியாகியுள்ளது இணைப்பு CHENNAIYUM NAUM EPI 12 LINK https://youtu.be/InnNkPSWYAA
சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும் என்ற நூலின் அறிமுக விழா மார்ச் 3 (03.03.20) செவ்வாய்கிழமை மாலை சென்னை எஸ்பிளனேட் ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி குறித்து உரையாற்றுகிறேன் கும்பகோணத்தில் வசித்து வரும் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி உலகப்புகழ்பெற்றவர். கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் சிற்பத்துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். மரபும் நவீனமும் ஒன்று சேர்ந்த புதிய கலைப்படைப்புகளை உருவாக்கி வருபவர். இவரது படைப்புகள் குறித்து கலைவிமர்சகர் தேனுகா சிறப்பாக எழுதியிருக்கிறார். •• …
இந்த ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெறும் கே.வி .ஜெயஸ்ரீக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துக்கள் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள் நாவலின் மொழிபெயர்ப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதுணையாக இருந்த நண்பர் பவா மற்றும் ஷைலஜாவிற்கு பாராட்டுகள்
சென்னையும் நானும் காணொளித் தொடரின் 11 வது பகுதி இணைப்பு Chennaiyum Nanum epi 11 link https://youtu.be/v4HxaFBmYa0
நண்பர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எனது சென்னையும் நானும் காணொளித் தொடர் பற்றி பாராட்டி எழுதியிருக்கிறார். கூடவே அதன் இணைப்புகளையும் தந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி. ஜெயமோகன் இணையதளத்தில் எழுதியுள்ள பதிவு. •• சென்னையும் எஸ்.ராமகிருஷ்ணனும் எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையும் நானும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பேச ஓர் ஆவணப்படத்தன்மையுடன் அமைந்த யூடியூப் காணொளித்தொடர் இதுவரை பத்து பகுதிகள் வெளியாகியிருக்கின்றன திடீரென்று யூடியூப் பிரபலமாகிவிட்டிருக்கிறது. அதை பலபேர் பார்க்கிறார்கள் – பணமும் வருகிறது. ஆனால் பார்க்கத்தக்க …
2019ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடனில் வெளியான எனது சிற்றிதழ் கதையை இலக்கியச் சிந்தனை தேர்வு செய்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் 14 அன்று நடைபெறவுள்ளது. இந்த தகவலை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் தெரிவித்துள்ளார். சிறுகதையை வெளியிட்ட ஆனந்தவிகடனுக்கும் விருது அளிக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் மிகுந்த நன்றி. எனது புதிய சிறுகதைத் தொகுதியான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.
எனது புத்தக வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், இணையதளம், பேருரைகளுக்காக எப்போதும் கைப்பணத்தை தான் செலவழித்து வருகிறேன். மிக அரிதாக சில நண்பர்கள் உதவி செய்வார்கள். அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடைக்கவில்லை. அதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன் என்பதால் எனது கஷ்டங்கள் நான் உருவாக்கிக் கொண்டவை என்று புரிந்தே இருக்கிறேன். தற்போது தேசாந்திரி Youtube சேனலில் சென்னையும் நானும் என்ற வீடியோத் தொடரைப் பகிர்ந்து வருகிறேன். 12 பகுதிகளாக இதன் முதற்சீசன் …
சென்னையும் நானும் தொடரின் பத்தாவது பகுதி வெளியாகியுள்ளது. காணொளி இணைப்பு : https://youtu.be/3JfVHHW_R54
சோலை வாசகர் வட்டம், நிஸ்வா- ஓமானில் எனது படைப்புலகம் குறித்த இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது. நிகழ்வை ஒருங்கிணைப்பவர்களுக்கும் கலந்து கொண்டு உரையாற்றுபவர்களுக்கும் நன்றி •• தொடர்புக்கு +96896630871