அறிவிப்பு

சிறப்புத் திட்டம்.

என் மகன் ஹரிபிரசாத் மற்றும் அவனது நண்பர்கள் இணைந்து DESANTHIRI YOUTUBE CHANNELயை கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய நல்ல உள்ளங்களுக்கு மனம் நிரம்பிய நன்றி. குறிப்பாக ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ், புகைப்படக்கலைஞர் இளவேனில், மணிமாறன், அன்பு, சித்துராஜ் பொன்ராஜ், திருவாசகம்,  உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.. இந்தச் சேனல் வழியாகப் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக உலகச் சினிமா குறித்த எனது உரைகள். …

சிறப்புத் திட்டம். Read More »

நிமித்தம்- துயரத்தின் துளிகள்

சத்தியமூர்த்தி. அஸ்திரேலியா நிமித்திம். எஸ்.ராவால் தமிழுக்குத் தரப்பட்ட இன்னொரு க்ளாஸிக். இதைப் படிக்கும் போது பல இடங்களில் என்னை நெகிழச் செய்ததது. தேவராஜ்க்கு நாற்பத்தியேழு வயதில் திருமணம் நடக்கிறது. அவருக்குக் காது கேட்காது. தன் திருமணத்தின் முதல் நாள் இரவு, தன் நண்பர்களை எதிர்பார்த்து அறையில் காத்திருக்கிறார். யாருமே வரவில்லை. அந்தத் தனிமையில் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதுதான் நாவலின் கதை. ஒரு மனிதன் வாழ்வில் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப் படுகிறான் என்று நாவலில் சொல்லப்படுகிறது. …

நிமித்தம்- துயரத்தின் துளிகள் Read More »

இடக்கை காட்டும் வெளிச்சம்

-கண்ணன். நீதிக்காக மனிதர்கள் நடத்தும் நெடும்போராட்டத்தை தங்களின் இடக்கை நாவலில் நீங்கள்  சிருஷ்டித்த விதம் அற்புதம் , இந்த மண்ணில் எதோ ஒரு காலத்தில் கதை நிகழ்கிறது என சொல்லமுடியாதபடி இன்றைய எதார்த்தத்திற்கு அவ்வளவு நெருக்கமான இன்னும் சொல்வதானால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான கேள்விகளை நீதி குறித்த விசாரணையை,நீதிக்கான விளக்கத்தை சாமானியனுக்கு ஒரு விதமும்  ஆள்பவருக்கு வேறுவிதமுமாக  ஆளுக்கொரு நீதி கடைபிடிக்கப்படும் சூட்சமத்தை உங்கள் இடக்கை-யில்  வாசித்துக் கடப்பது எளிதாக இருக்கவில்லை … நீதிக்கு இருக்கும் இருபக்கங்களை …

இடக்கை காட்டும் வெளிச்சம் Read More »

இலக்கிய உரை

தேசாந்திரி Youtube சேனலில் வெளியாகியுள்ள இலக்கிய உரை ”நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளம் பஷீர் https://youtu.be/XSZSPY0SNhQ

ஆய்வு

எனது கதைகள், நாவல்கள், பயண நூல், கட்டுரைகள்  பற்றி கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே தனது ஆய்வேட்டினை எனக்கு அனுப்பித் தருகிறார்கள்.  மற்றவர்கள் அனுப்புவதில்லை.  ஆய்வாளர்கள் ஒரு பிரதியை எனக்கு அனுப்பினால் உங்கள் ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வேன். •• எனது சிறுகதைத் தொகுதி பற்றி வெளியாகியுள்ள ஆய்வேடு

ஜி.சௌந்தர்

யோகா மாஸ்டர் ஜி.சௌந்தரிடம் இரண்டு மாதங்களாக யோகா கற்றுக் கொண்டேன். உடலையும் மனதையும் பேணுவதற்கு யோகா மிகச்சிறந்த வழி. யோகா கற்றுக் கொள்வதில் நல்ல ஆசான் கிடைப்பது முக்கியம். சௌந்தர் மிகச்சிறந்த ஆசிரியர். . சிறந்த யோக பரம்பரையில் ஒன்றான பிஹார் யோக பள்ளியில் ஏழு ஆண்டுகள் பயின்றவர். சென்னை வடபழனியில் சத்யானந்த யோகமையம் நடத்தி வருகிறார். இவர் கற்றுத்தரும் மரபார்ந்த, முறையான யோகப் பயிற்சிகள் மிகச்சிறப்பானவை. அதன் பலனை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். இலக்கியத்தின் மீது …

ஜி.சௌந்தர் Read More »

அ.முத்துலிங்கம் நேர்காணல்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நேர்காணல் யாவரும்.காமில் வெளியாகியுள்ளது. அகரமுதல்வன் நேர்காணல் செய்திருக்கிறார். சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நேர்காணலிது. முத்துலிங்கத்தின் பதில்கள் வியக்கவைக்கின்றன. அ.முத்துலிங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இருக்கைக்காகச் செய்து வரும் முன்னெடுப்புகள்  மகத்தானவை. இயல் விருதுகள் வழங்குவதிலும், தமிழ் படைப்பாளிகளைக் கொண்டாடுவதிலும் அவர் காட்டும் அக்கறையும் நேசமும் நிகரற்றது. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் தனக்குப் பந்து வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். ஒரு அடி முன்னால் போய்ப் பந்து வரும்போதே எதிர்கொண்டு ஓங்கி அடித்துவிடுவார்கள். …

அ.முத்துலிங்கம் நேர்காணல் Read More »

புதிய உரைகள்

தேசாந்திரி youtube சேனலில் வெளியாகியுள்ள புதிய உரைகள் TOTTO-CHAN ஜன்னலில் ஒரு சிறுமி – அறிமுகம் https://youtu.be/aY89jPESR_Q ஈசாப் ஒரு அறிமுகம் https://youtu.be/c5SByiZF4Ao