இலக்கியம்

வார்த்தைகளின் இல்லம்

The Book of Embraces எட்வர்டோ கலியானோவின் முத்தொகுதிகளில் ஒன்று இந்த நூல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை மையமாகக் கொண்டது. ஆய்வாளர்கள் வரலாற்றை உயரிய கோபுரமாகக் கட்ட முயலும் போது படைப்பாளிகள் அவற்றை நீருற்று போலவோ, பனி உருகியோடுவது போலவே மாற்ற முயலுகிறார்கள். வரலாற்றின் சிறுதுண்டுகளையே எடுவர்டோ கலியானோ உருவாக்குகிறார். கூழாங்கல்லைப் போன்ற அழகிய உருவம் கொண்ட அந்தச் சிறுகுறிப்புகள். குறுங்கதைகள், அசாதரண நிகழ்வுகள் வசீகரமாக விளங்குகின்றன. கலைடாஸ்கோப்பினுள் உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்று சேர்ந்து புதிய …

வார்த்தைகளின் இல்லம் Read More »

மலர்களை நேசிக்கும் காளை.

அமெரிக்க எழுத்தாளர் முன்ரோ லீஃப் எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபெர்டினாண்ட் குழந்தைகளுக்கான சிறந்த கதைப் புத்தகம். மலர்களை நேசிக்கும் ஒரு காளையின் கதையைச் சொல்லும் இந்நூல் அனிமேஷன் திரைப்படமாகவும் வந்துள்ளது இளம் காளையான ஃபெர்டினாண்ட் மற்ற காளைக் கன்றுகளைப் போல மோதவும், குதிக்கவும், மற்ற காளைகளோடு சேர்ந்து விளையாடவும் விரும்பாமல் தனிமையில் அமர்ந்து கொண்டு பூக்களை ரசிக்கிறது. அதற்கு. பூக்களை மிகவும் பிடிக்கும், தனிமையும் பிடிக்கும். மலர்களின் நறுமணத்தை அனுபவிக்கிறது. இதற்கென ஒரு மரத்தடி நிழலினையும் …

மலர்களை நேசிக்கும் காளை. Read More »

மழையை ருசிக்கும் சிறுமி

தெலுங்குச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். 1973ல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. அதில் எழுத்தாளர் திரிபுரநேனி கோபிசந்த் எழுதிய பாசம் என்ற கதை விவசாயி ஒருவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. திரிபுரநேனி  கோபிசந்த் சிறந்த தெலுங்கு எழுத்தாளர். பத்து நாவல்கள், பன்னிரண்டு நாடகங்கள்,  நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ஜோகய்யா என்ற விவசாயிக்கு மூன்று மகன்கள். பேரன் பேத்தி எனப் பெரிய குடும்பம்.. அவரது மனைவி நோயாளியாக மரணப் படுக்கையில் கிடக்கிறார். ஜோகய்யாவிற்கு நிறைய நிலமிருக்கிறது. …

மழையை ருசிக்கும் சிறுமி Read More »

விநோதமான மனிதர்களின் உலகம்

  இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு இந்த 2025-லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது ? என்ற கேள்வி கொடுத்த ஆர்வத்தில் தான் இந்த தொகுப்பை தேர்ந்தெடுத்தேன் . ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவமிக்க எழுத்தாளரின் சமகால படைப்பை வாசிக்கும்பொழுது அ .முத்துலிங்கம் அவர்களின் ஒரு வரி எங்கிருந்தாலும் வந்து என் மனதில் அமர்ந்துவிடும் . 100 நாற்காலிகளை செய்த ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது …

விநோதமான மனிதர்களின் உலகம் Read More »

காஃப்காவின் நிழல்

பெஞ்சமின் பாலிண்ட்டின் Kafka’s Last Trial: The Case of a Literary Legacy புத்தகத்தைப் படிக்கும் போது அது காஃப்காவின் விசாரணை நாவலைப் போலவே இருப்பதை உணர முடிகிறது. காஃப்காவின் படைப்புகள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நீதிமன்ற வழக்கு பற்றிய இப்புத்தகம் ஜெருசலேமில் ஒரு கோடை காலத்தின் காலை நேரத்தில் முற்றிலும் கறுப்பு நிறத்தில் உடையணிந்த 82 வயதான ஈவா ஹோஃப், இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தின் வளைந்த மர பெஞ்சில் தனது கைகளைப் பற்றிக் …

காஃப்காவின் நிழல் Read More »

புதிய மொழி

தாவோ கோவிலுக்குச் செல்வது எப்படி என்றொரு ஆங்கிலக் கவிதை தொகுப்பை மலையாள கவிஞர் சச்சிதானந்தன் வெளியிட்டுள்ளார். இருமொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் தொகுப்பை INTERNATIONAL POETRY NIGHTS IN HONG KONG வெளியிட்டுள்ளது. இதில் மிகச்சிறந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன இந்தத் தொகுப்பின் முதல்கவிதை திக்குவாய் பற்றியது. மிக அழகாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை திக்குவாயை ஒரு குறீயிடாக மாற்றுகிறது. திக்குவாய் குறித்த கேலிகள். அவமானங்களைப் புறந்தள்ளி அதனைப் புதியதொரு மொழியாக அறிவிக்கிறது. •• திக்குவாய் என்பது ஒரு குறையல்ல. …

புதிய மொழி Read More »

போரும் காதலும்

ஜெர்மானிய எழுத்தாளர் எரிக் மரியா ரெமார்க்கின் A Time to Love and a Time to Die நாவல் போரின் துயர நாட்களை விவரிக்கிறது. ஹெமிங்வேயின் A Farewell to Arms நாவலைப் போன்ற கதைக்களம் கொண்டது. இதில் போர் முனையிலிருந்து வீடு திரும்பி வரும் சிப்பாய் கிரேபரின் காதலும், பெற்றோரை தேடும் அவனது இடைவிடாத பயணமும் விவரிக்கபடுகிறது. போரை முதன்மைப்படுத்திய ஐரோப்பிய நாவல்களுக்கும் ரஷ்ய நாவல்களுக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் போர் நாவல்களில் …

போரும் காதலும் Read More »

அலமாரியில் உறங்குகிறவன்.

போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோசெக் (Slawomir Mrozek) கதை ஒன்றில் ஒருவன் தனது அறையில் உள்ள படுக்கை, பீரோ, மேஜை மூன்றும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருப்பதை நினைத்துச் சலிப்படைகிறான். அறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பி அலமாரியை நகர்த்தி வேறு பக்கம் வைக்கிறான். படுக்கையை அந்தப் பக்கம் திருப்புகிறான். மேஜையை ஒரமாக நகர்த்திவிடுகிறான். இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால் சில நாட்களில் மீண்டும் அறையின் தோற்றம் சலிப்பை உருவாக்குகிறது. இந்த முறை அறையின் …

அலமாரியில் உறங்குகிறவன். Read More »

காலத்தால் அழியாத உண்மை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிக்ரிட் அன்ட்செட் எழுதிய கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் நாவல் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலானது. மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளது. நாவலில் வரும் கிறிஸ்டியன், சிக்ரிட்டின் மாற்றுவடிவம் போலவே சித்தரிக்கபடுகிறாள். சிக்ரிட்டின் சொந்த வாழ்க்கை அவரது நாவலை விடவும் திருப்பங்களைக் கொண்டது. துயரத்தால் நிரம்பியது. 14ம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. மலைகிராமம் ஒன்றில் வாழும் லாவ்ரான்ஸின் மகளான கிறிஸ்டின் விளையாட்டுதனமானவள். ஒரு நாள் தனது தங்கை உல்விட்டோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் …

காலத்தால் அழியாத உண்மை Read More »

பியர் கிரிபாரியின் கதைகள்

ஒரு உருளைக்கிழங்கின் காதல் கதை என்றொரு சிறார்கதையைப் பிரெஞ்சு எழுத்தாளர் பியர் கிரிபாரி (Pierre Gripari) எழுதியிருக்கிறார். அக்கதையில் ஒரு சிறுவன் தனது வீட்டின் சமையலறையிலிருந்து ஒரு உருளைக்கிழங்கைத் திருடி, அதன் முகத்தைக் கத்தியால் செதுக்குகிறான். இதனால் உருளைக்கிழங்கிற்குக் கேட்கவும் பேசவும் பார்க்கவும் திறன் ஏற்படுகிறது. பேசத் தெரிந்த அந்த உருளைக்கிழங்கு தான் வெறும் உருளைக்கிழங்காக நடத்தப்படுவதை விரும்பவில்லை. தனக்கெனத் தனியே வாழ்க்கை இருப்பதாக நம்புகிறது. சிறுவனின் வீட்டைவிட்டு வெளியேறி உடைந்து கிடந்த கிதார் ஒன்றை வழியில் …

பியர் கிரிபாரியின் கதைகள் Read More »