இலக்கியம்

வாளும் மலரும்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை சீனாவின் குயிங் வம்ச ஆட்சிக்காலத்தில் இது நடந்தது என்கிறார்கள். யுவான் ஷு என்ற அரசன் கவிதையிலும் இசையிலும் தன்னை மறந்திருந்தான். ஒரு நாள் லின் டேயு என்ற பெண் கவிஞர் அவனைத் தேடி வந்தாள். பேரழகியான அவளிடம் உன் கவிதைகளின் சிறப்பு என்னவென யுவான் ஷு கேட்டான். என் கவிதை மாயங்கள் செய்யக்கூடியது. அது உடைவாளை ஒரு மலராக மாற்றிவிடும் என்றாள். அவனால் நம்பமுடியவில்லை. அவள் ஒரு …

வாளும் மலரும். Read More »

பஷீரின் திருடன்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடில் வெளியான எனது குறுங்கதை எத்தனையோ திருடர்களையும் போக்கிரிகளையும் பிச்சைக்காரர்களையும் சீட்டாடிகளையும் தனது கதைகளில் எழுதி மக்கள் மனதில் நிலைபெறச் செய்திருக்கிறாரே பஷீர் அவர் ஏன் தன்னைப் பற்றி ஒரு கதை கூட எழுதவில்லை என்ற ஏக்கம் கள்ளன் யூசுப்பிற்கு நீண்டகாலமாக இருந்தது, அவன் தான் வைக்கம் முகமது பஷீரின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்தவன். அதில் சில்லறைக் காசுகளைத் தவிரப் பணம் ஏதுமில்லை என்று தெரிந்து அவரிடமே திரும்பக் கொண்டு போய்க் கொடுத்தவன். அவனது …

பஷீரின் திருடன். Read More »

கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்

கு.அழகிரிசாமியின் கதைகள் குறித்துச் சிறந்த விமர்சன நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்.ஆர்.தாசன். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் 1987ல் வெளியானது. இன்றும் ரூ 12க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. இது போல மௌனி, பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை தொகுப்புகளும் மலிவு விலையில் வானதி பதிப்பகத்தில் கிடைக்கின்றன. ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்த கதைகளையும் வாசித்து இப்படி விரிவாக விமர்சனம் எழுதப்படுவதே அவருக்கான உண்மையான அங்கீகாரம். அதை என்.ஆர் தாசன் சிறப்பாகச் செய்திருக்கிறார். என். ஆர். தாசன் அழகிரிசாமியை ஆழ்ந்து …

கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள் Read More »

அட்டன்பரோவின் காந்தி

காந்தி படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியபோது படப்பிடிப்பில் என்ன நடந்தது. எவ்வாறு அந்தப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். ஒளி மற்றும் ஒலியின் தரம் மோசமாக இருந்த போதும் காந்தி திரைப்படம் குறித்த அரிய ஆவணப்பதிவு என்பதால் இதனை விரும்பிப் பார்த்தேன். காந்தியிடம் என்னைக் கவர்ந்த விஷயம் அவரது அறிவுத்திறன் மற்றும் நம்பிக்கை . அவர் கொண்டிருந்த லட்சியவாதம் முதன்மையானது. தனது அறிவுத்திறனை அவர் வெளிப்படுத்திய விதமும் அதை எளிய மனிதர்களின் விடுதலைக்காகப் பயன்படுத்திய …

அட்டன்பரோவின் காந்தி Read More »

நாவலின் விதி

எழுத்தாளர் ஐரின் நெமிரோவ்ஸ்கி இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ஷ் முகாமில் கொல்லப்பட்டவர். உக்ரேனிய யூத வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிரான்சில் வாழ்ந்தவர். பிரெஞ்சு மொழியில் எழுதினார். இவரது Suite française நாவல் அவர் மறைந்து அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனிதர்களைப் போலவே நாவலின் விதியும் விசித்திரமானதே. எழுதப்பட்ட உடனே எல்லா நாவல்களும் வெளியாவதில்லை. சில நாவல்கள் பதிப்பகத்தாலும். எழுத்தாளரின் விருப்பமின்மை மற்றும் மனச்சோர்வினால் அப்படியே முடங்கிப் …

நாவலின் விதி Read More »

ஆயிரம் நினைவுகளின் வீடு

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பா ஜின் எழுதிய குடும்பம் என்ற நாவல் அலைகள் பதிப்பக வெளியீடாக 1999ல் வெளிவந்துள்ளது. இந்நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் நாமக்கல் சுப்ரமணியன். சிறந்த மொழியாக்கம். உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் இந்த நாவல் குறித்துத் தமிழில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. ஒன்றோ இரண்டோ விமர்சனம் வெளியாகியுள்ளது. ஆழ்ந்து வாசிக்கவும் பேசவும் வேண்டிய முக்கிய நாவலிது. நவீன சீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் பா ஜின் 1920களில் ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை வழியாக …

ஆயிரம் நினைவுகளின் வீடு Read More »

டாலியின் கனவுகள்

சர்ரியலிச ஓவியரான டாலியின் கனவு நிலைப்பட்ட ஓவியங்கள் வியப்பானவை. அந்த ஓவியங்களுக்குள் ஒரு பயணம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த மயக்கும் காணொளி கனவு வெளியினை அற்புதமாகச் சித்தரித்துள்ளது. டாலியின் புகழ்பெற்ற ஓவியங்களை ஒன்றிணைத்து இந்தக் காணொளியை உருவாக்கியிருக்கிறார்கள். டாலியின் சகோதரி அன்னா மரியா அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆவணப்படம் ஒன்றினை சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் சிறுவயது முதலே டாலி எப்படி விசித்திரமான உலகின் மீது ஈர்ப்பு கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதைச் …

டாலியின் கனவுகள் Read More »

காற்றோடு கைகோர்த்து

The noise of the streets was a kind of language – Virginia Woolf ஆங்கில எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப் எழுதிய Mrs Dalloway  நாவல் லண்டன் நகரில் ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையை விவரிக்கிறது. நடத்தலின் ஆனந்தத்தை விவரிக்கும் இந்த நாவலில் தனக்கு லண்டன் வீதிகளில் நடப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் கிளாரிசா டாலவே உண்மையில் கிராமப்புற சாலையில் நடப்பதைவிடவும் பரபரப்பான லண்டன் வீதிகளில் நடப்பது சுதந்திரமாக இருக்கிறது என்கிறார் வர்ஜீனியா …

காற்றோடு கைகோர்த்து Read More »

ஒரு அடியீடு மட்டும்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள எழுத்தாளர் என். பி. முஹம்மதுவின் ஒரு அடியீடு மட்டும் மறக்கமுடியாத சிறுகதை. பாலைவனத்தின் காட்சிகளை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இவரது வேறு கதைகள் எதுவும் தமிழில் வெளியாகியுள்ளதா எனத் தெரியவில்லை. இந்தக் கதையை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகியும் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. நீதிக்கதைகளின் சாயலில் எழுதப்பட்டிருந்த போதும் கொள்ளைக்கார யூசுஃப் யாத்ரீகனை சந்திக்கும் காட்சியும் நன்மையின் பாதையில் செல்ல முற்படுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அடி தான் இடைவெளி …

ஒரு அடியீடு மட்டும் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி நாடகங்கள்

2016ம் ஆண்டில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதினேன். தியேட்டர் லேப் ஜெயராவ் தன் குழுவினருடன் அதை மேடையேற்றினார். ஒரு மணி நேர நாடகமது. சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நிகழ்த்தப்பட்ட அந்த நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன்பு புதுவை பல்கலைக்கழகத்தில் முருகபூபதி நாடகக்கலை படித்த போது அவருக்காக மரணவீட்டின் குறிப்புகள் எனத் தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from a Dead House யை மையமாகக் கொண்டு நாடகம் எழுதினேன். அந்த நாடகம் புதுவையில் …

தஸ்தாயெவ்ஸ்கி நாடகங்கள் Read More »