இலக்கியம்

மன்னரின் மூக்குக் கண்ணாடி

The Last Emperor படத்தில் சீனாவின் கடைசி அரசர், புய் ஒரு அரசியல் கைதியாகவும், போர்க்குற்றவாளியாகவும் இருக்கிறார். அங்கே அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் மரியாதை செய்கிறார்கள். அது அவரை அதிகக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. வீழ்ச்சியின் போது ஒரு மனிதன் தனது பழைய மரியாதையைப் பெறுவதை விலக்கவே முற்படுகிறான். ஆனால் அவனது வீழ்ச்சி தற்காலிகமானது என்பது போலவே மக்கள் பழைய மரியாதையை அளிக்க முற்படுகிறார்கள். படம் புய்  தற்கொலை செய்ய முயல்வதிலிருந்து துவங்குகிறது. மன்னர்களில் தற்கொலை …

மன்னரின் மூக்குக் கண்ணாடி Read More »

இரண்டும் கப்பல் தான்.

புதிய சிறுகதை சூயஸ் கால்வாயைத் தடுத்து நின்றிருந்த அந்தக் கப்பல் பிடிபட்ட திமிங்கலம் ஒன்றைப் போலிருந்தது தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தபடியே திரையில் தெரியும் அந்தக் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபால் ரத்னம். மணி மூன்றைக் கடந்திருந்தது. பின்னிரவில் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எதற்காக இப்படிச் சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவருக்கே புரியவில்லை. ஆனால் அந்தக் கப்பல் அவரைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அதை எப்போது மீட்பார்கள். …

இரண்டும் கப்பல் தான். Read More »

அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல்

புதிய சிறுகதை டாக்டர் மோகன் தங்கையா தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இரண்டாம் முறையாகப் பிள்ளையார் கோவில் தெரு வரை போய் வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாகத் துவங்கியிருந்த அன்பரசன் கிளினிக் வெளியே முப்பது நாற்பது பேருக்கும் மேலாகக் காத்திருந்தார்கள். மணி ஐந்தாகியிருந்த போதும் இன்னமும் டாக்டர் வரவில்லை. ஒருவேளை ராயல் ஹாஸ்பிடலில் இருப்பாரோ என்னவோ. பெட்டிக்கடையினை ஒட்டித் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மருத்துவமனை வெளியே காத்திருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி என்ன அன்பரசனிடம் யாரும் …

அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல் Read More »

டால்ஸ்டாயின் ஒவியம்

டால்ஸ்டாயின் உருவச்சிலையை முதன்முறையாக வடித்தவர் அவரது மனைவி சோபியா. அவர் தான் மார்பளவு சிலை ஒன்றை செய்து கொடுத்தார். Ilya Repin என்ற புகழ்பெற்ற ஒவியர் டால்ஸ்டாயை சிறப்பான ஒவியம் தீட்டியிருக்கிறார். டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ஒவியங்களை வரைந்தவர் லியோனிட் பாஸ்டர்நாக். இவரே. டால்ஸ்டாயின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். இவரது மகன் தான் நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் பாஸ்டர்நாக். லியோனர்ட் பாஸ்டர்நாக்  1862 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி ஒடேஸாவில் ஒரு  …

டால்ஸ்டாயின் ஒவியம் Read More »

தமிழ்க் கவிதையின் இடம்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பெரும்பான்மையான INDIAN POETRY ANTHOLOGY களில் தமிழ்க் கவிதையே இடம்பெறுவதில்லை. அபூர்வமாக இடம்பெற்றாலும் மிக மோசமான கவிதையாக உள்ளது. அதைப் படிக்கும் வாசகன் இவ்வளவு தானா தமிழ்க் கவிதையின் தரம் என நொந்துபோவான். சமீபத்தில் அப்படி இரண்டு கவிதைத் தொகுதிகளைப் படித்தேன். இரண்டிலும் தமிழ்க் கவிதைகள் இடம்பெறவில்லை. இன்று இந்திய அளவில் தமிழின் நவீன கவிதை மிகச் சிறந்த இடத்தைக் கொண்டிருக்கிறது. தமிழில் உள்ளது போலப் புதுக்குரல்கள். புதிய மொழி, புதிய கவிதையாக்கம் வேறு …

தமிழ்க் கவிதையின் இடம். Read More »

வராத ரயில்

புதிய சிறுகதை அந்த ரயில் நிலையத்திற்கு மதுரை பாசஞ்சர்  பத்தரை மணிக்கு வந்து நிற்பது வழக்கம். சின்னஞ்சிறிய ரயில் நிலையமது. ஸ்டேஷன் மாஸ்டர் அறை புறாக்கூண்டு போல இருக்கும். அருகில் சிறிய ஸ்டோர் ரூம். அதையொட்டி கல்லால் ஆன இரண்டு பெஞ்சுகள். மூன்று தூங்குமூஞ்சி மரங்கள். ஒரு தண்ணீர்தொட்டி. அதில் எப்போதும் குடிதண்ணீர் இருக்காது. சிவப்பு ஒடு வேய்ந்த கட்டிடமது. சிவமணியை அழைத்துக் கொண்டு கிழவி அந்த ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். அவளை விட்டால் சிவமணிக்கு வேறு …

வராத ரயில் Read More »

இரவின் சிறுபாடல்

புதிய சிறுகதை கடைசிப் பஸ்ஸைத் தவறவிட்டிருந்தான் ரகுபதி. வேலை தேடிச் சுற்றியலைகிறவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்குப் போய் என்ன ஆகப்போகிறது என்ற அவனது நினைப்பு தான் பேருந்தைத் தவறவிட முக்கியக் காரணம். இனி காலை ஐந்தரை மணிக்கு தான் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து வரும். அதுவரை இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான். என்ன செய்வது எனத் தெரியவில்லை. நேரத்தை கழிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் காலம் நீண்டுபோய்விடக்கூடியது. அன்றைக்கும் அப்படித்தான். இப்போது தான் …

இரவின் சிறுபாடல் Read More »

இந்திய இலக்கியத்தின் முகம்

.ரஷ்ய இலக்கியங்களையும் உலகின் சிறந்த படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நீங்கள் ஏன் இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யவில்லை என்று நர்மதா என்ற இளம் வாசகி மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதமி மூலம் நிறைய இந்திய நாவல்கள், சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மிகச்சிறந்த சில நாவல்களுக்கு ஒரு விமர்சனம் கூட வெளியானதில்லை என்பது வருத்தமான விஷயமே என் கல்லூரி நாட்களில் எந்த எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றாலும் …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »

உலோக விலங்குகள்

ஒவ்வொரு நாய்க்கும் அதன் இரவென்பதுண்டு -அய்யப்ப பணிக்கர் அவனது வீட்டின் வரவேற்பறை விலங்குகளால் நிரம்பியிருக்கிறது. விலங்குகள், வெண்கலம், எஃகு, பித்தளையில் வார்க்கப்பட்டவை.. அமைதியாக இருக்க அவை பழக்கப்படுத்தப்பட்டிருப்பினும், நேற்றிரவில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டன. நேற்று நாய்களின் முறை. ஒன்றின் குரைப்பு மற்றவைகளைத் தூண்டிவிட்டது. அதைக் கேட்டு நரிகள் அமைதியற்று ஊளையிடத் தொடங்குகின்றன. பித்தளைச் சிங்கம் கர்ஜிக்க எழுந்தது. பாடப் புத்தகங்களில் கர்ஜனை என்பதே சொல்; முயற்சித்து, ஆனால் சளியிருப்பதால், கைவிட்டுத் தானாகவே கூண்டுக்குத் திரும்பிவிட்டது. கச்சேரி முடிந்து …

உலோக விலங்குகள் Read More »

ஒளியை வாசிக்கிறவன்

அட்சரம் இதழில் வெளியான சிறுகதை – மீள்பிரசுரம். அந்த அறையில் அவனும் திமிங்கிலத்தையும் தவிர வேறு யாருமேயில்லை. கடலைவிட்டு வெளியேறி நாற்பதாண்டுகளாகி, உரு அழிந்து எலும்பு பொறியென நீண்டு நிசப்தித்திருக்கும் அந்தத் திமிங்கலத்தை எப்போது காணும் போதும் பிரம்மாண்டம் குறைவதேயில்லை. கோபாலராவ் திரும்பவும் அதன் வால் அருகே நின்றவனாக மொத்த திமிங்கலத்தையும் ஒருமுறை பார்த்தான். கண்களில் அடங்காத உருவம். மீனின் அடிவயிறு ஊஞ்சலென ஆடிக்கொண்டிருந்தது. இந்தத் திமிங்கலம் தன்னை விழுங்கியிருந்தால் இதே விலாவின் இரு எலும்புகளை பற்றியபடி …

ஒளியை வாசிக்கிறவன் Read More »