இலக்கியம்

குரலின் ஈரம்.

ஷெரீப் எஸ். எல்முசா (Sharif Elmusa ) அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனக் கவிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கவிதைகள் அரபு அமெரிக்கன் கவிதைகளுக்கான இதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது மகளின் பெயர் கர்மா. I am Palestinian by birth, American by citizenship, Egyptian at heart. எனத் தன்னைப் பற்றிச் சொல்கிறார் எல்முசா. Flawed Landscape என்ற அவரது கவிதைத் தொகுப்பினை வாசித்தேன்.. மூன்று பகுதிகளாக உள்ள தொகுப்பிது. இதில் ஒரு கவிதை …

குரலின் ஈரம். Read More »

சொல்லின் வலிமை.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது I’m Not Here to Give a Speech. தலைப்பு அவரது சிறுகதையான I Only Came to Use the Phoneயை நினைவுபடுத்துகிறது. அவர் ஸ்பானிஷில் நிகழ்த்திய உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பான்மையான உரைகள் சிறியவை.. இதன் எழுத்துவடிவத்தை மார்க்வெஸ் உருவாக்கியிருக்கிறார். எழுதி வைத்த உரைகளைச் சில தருணங்களில் அப்படியே வாசித்திருக்கிறார். மேடைப்பேச்சு குறித்த தனது பயத்தையும் …

சொல்லின் வலிமை. Read More »

கடவுளின் எட்டாம் நாள்

சமகால ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய ஒரு குறுங்கதையை வாசித்தேன்.  இவர்  ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு சிறந்த உதாரணம் போலிருக்கிறது இக் கதை. *** உலகைச் சிருஷ்டித்து சலித்துப் போன கடவுள்  எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதைப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி …

கடவுளின் எட்டாம் நாள் Read More »

சிறிய மனிதனும் பெரிய உலகமும்.

வில்லியம் சரோயன் (William Saroyan) எழுதிய தி ஹ்யூமன் காமெடி 1943ல் வெளியான சிறந்த நாவல். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கலிபோர்னியாவின் இதாக்காவில் கதை நிகழுகிறது. பதினான்கு வயதான ஹோமரைப் பற்றியதே நாவல். அவன் பகுதி நேரமாகத் தந்தி அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மா, சகோதரி பெஸ் மற்றும் தம்பி யுலிஸஸ் என அவனது உலகம் மிகச்சிறியது. தந்தி அலுவலகத்தில் இரவு நேரம் தந்தி வந்தால் அதைக் கொண்டு கொடுப்பதற்கு ஆள் தேவை என்பதால் …

சிறிய மனிதனும் பெரிய உலகமும். Read More »

நதிமுகம் தேடி

ராம் தங்கம் நம்பிகை தரும் இளம்படைப்பாளி. இவரது திருக்கார்த்தியல் நல்ல சிறுகதைத் தொகுப்பு. இவரது ராஜவனம் என்ற நாவலை வாசித்தேன். எண்பது பக்கங்கள் கொண்ட சிறிய நாவல். முகளியடி மலையிலுள்ள நந்தியாற்றின் மூலம் காணச் செல்லும் பயணத்தின் கதை. காடு நூறாயிரம் உயிர்களின் வாழ்விடம். காட்டின் பிரம்மாண்டம் அதன் மரங்கள். காட்டில் எப்போது இருள் மிச்சமிருக்கிறது. பாதைகளை அழிப்பது தான் காட்டின் இயல்பு. மழைக்காலத்தில் காடு கொள்ளும் ரூபம் விசித்திரமானது. கோபாலும் அவன் நண்பர்களும் முகளியடி மலையை …

நதிமுகம் தேடி Read More »

ஃபிலிப் லார்கின்

சொல்வனம் டிசம்பர் இதழில் கவிஞர் ஃபிலிப் லார்கின் பற்றி மிகச்சிறப்பான கட்டுரை ஒன்றை நம்பி எழுதியிருக்கிறார் ஃபிலிப் லார்கின்: கவிதைகளை வாசித்திருக்கிறேன். Kingsley Amis உடனான அவரது நட்பு மற்றும் அவருக்கு எழுதிய கடிதங்களைப் படித்திருக்கிறேன். A Girl in Winter என்ற அவரது நாவல் நூலகத்தில் பணியாற்றும் கேதரின் வாழ்க்கையில் பனிரெண்டு மணிநேரங்களை விவரிக்கக்கூடியது. லார்கினின் நேர்காணல் ஒன்றில் உங்களைப் போலவே நூலகராக வேலை செய்தவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் என்று கேள்விகேட்பவர் சொல்லும் போது …

ஃபிலிப் லார்கின் Read More »

தந்தை எனும் அதிகாரம்

தந்தையும் தனயர்களும் என்ற தலைப்பில், இவான் துர்கனேவ் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்குப் பிடித்தமானது. காரணம், தலைமுறைகள் மாறினாலும் தந்தைக்கும் தனயனுக்குமான உறவிலுள்ள எதிர் நிலை மாறவேயில்லை. தந்தையாக இருப்பது என்பது ஒரு அதிகாரம்.எல்லாத் தந்தைகளுக்கும் அது பொருத்தமானதே.தனயன் என்பது ஒரு மீறல். ஒரு விடுபடல். சுதந்திரம். எல்லாக் காலத்திலும் மகன் தந்தையினைக் கடந்து போகவும் மீறிச் செயல்படவுமே முயற்சிப்பான். அதுவே இயல்பு. மகன் வளர்ந்து பெரியவன் ஆகி திருமணமாகி மகனோ, மகளோ பெற்றவுடன் …

தந்தை எனும் அதிகாரம் Read More »

கூடுதலான எனது கைகள்

எமிதால் மஹ்மூத் (Emtithal Mahmoud) சூடானியக் கவிஞர். அமெரிக்காவில் வசிக்கிறார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நல்லெண்ண தூதராகச் செயல்பட்டு வரும் இவர் கென்யா, கிரீஸ் மற்றும் ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார். மஹ்மூத் சூடானின் டார்பூரில் பிறந்தவர், 1998 இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கே பிலடெல்பியாவில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்றார் யேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற நாட்களில் …

கூடுதலான எனது கைகள் Read More »

கடல் கடந்த கடிதங்கள்.

ஒரு பழைய புத்தகக் கடைக்கும் , அதன் வாடிக்கையாளருக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்திய புத்தகம் 84, சேரிங் கிராஸ் ரோடு. உண்மை சம்பவத்தின் தொகுப்பு. புத்தகம் முழுவதும் கடிதங்களே இடம்பெற்றிருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு ஹெலன் ஹான்ஃப் வெளியிட்ட இந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் தொடர்ச்சியாக மேடைநாடகமாகவும் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் நாடக ஆசிரியரான ஹெலன் ஹான்ஃ புத்தகம் படிப்பதை வாழ்க்கையாகக் கொண்டவர். அவர் பிரிட்டிஷ் இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி …

கடல் கடந்த கடிதங்கள். Read More »

ஐன்ஸ்டீனின் கனவுகள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்புகவிஞர் ஆனந்த், கவிஞர் தேவதச்சன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து காலம் பற்றிய ஆய்வு ஒன்றில் ஈடுபட்டார்கள். 1992ல் ஆனந்த் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது காலம் குறித்த வியப்பான விஷயங்களை, தகவல்களை, கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த ஆய்விற்காகப் பலரையும் நேர்காணல் செய்தார்கள்.  ஆனால் அது இன்றும் வெளியிடப்படவில்லை. இன்று Einstein’s Dreams என்ற நாவலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் வந்து போயின ஆலன் லைட்மென் எழுதிய இந்த நாவல் ஐன்ஸ்டீனின் …

ஐன்ஸ்டீனின் கனவுகள் Read More »