கூண்டில் ஒருவர்.
ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டினா எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள் மட்டுமே எழுதுபவர். முப்பது ஆண்டுகளில் ஆறு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் நீண்ட நேர்காணல் செய்து தனித்தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். re-entry into society என்றொரு சிறுகதையை ஸோரன்டினோ எழுதியிருக்கிறார். அதில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேனிலவிற்குச் சென்றுவிட்டு தங்களின் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். வீட்டில் அவர்களின் படுக்கை அறையில் பெரியதொரு கூண்டு காணப்படுகிறது. அதற்குள் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார். இந்தக் கூண்டினை வைப்பதற்காகப் …









