இலக்கியம்

பசித்தவன்

எட்வர்ட் மன்ச் வரைந்த The Scream என்ற ஓவியத்தைக் காணும் போதெல்லாம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் பசி நாவலே நினைவிற்கு வருகிறது. ஒன்று, பசியால் துரத்தப்படும் எழுத்தாளனின் ஓலம். மற்றொன்று நகரவாழ்வின் நெருக்கடி உருவாக்கிய அலறல். மன்ச்சின் ஓவியத்திலிருப்பவன் தான் ஹாம்சன் நாவலில் எழுத்தாளனாக வருகிறான் என்றே நினைத்துக் கொள்கிறேன். நட் ஹாம்சனின் பசி நாவல் 1890 இல் வெளியானது. இளம் எழுத்தாளனின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் இந்த நாவல் திரைப்படமாகவும் வந்துள்ளது. …

பசித்தவன் Read More »

திருடனின் மீது விழும் மழைத்துளி

மலையாள எழுத்தாளர் யு.கே. குமரன் எழுதிய இருட்டில் தெரியும் கண்கள் என்ற சிறுகதையில் தன்மீது விழும் மழைத்துளியால் திடுக்கிட்டுப் போகிறான் ஒரு திருடன். திருடனின் வாழ்க்கையை விவரிக்கும் அந்தக் கதையில் “இப்போதெல்லாம் யாரும் விலைமதிப்பு மிக்கப் பொருட்களை வீட்டில் வைப்பதில்லை. திருடச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு திருடனால் இங்குக் கண்ணியமான வாழ்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது“ என்கிறான் அத் திருடன் பல நாட்களாகத் திருடச் செல்லாத திருடன் ஒரு இரவு சாலையில் நடந்து கொண்டிருக்கும் …

திருடனின் மீது விழும் மழைத்துளி Read More »

அகமெம்னானின் கனவு

கிரேக்கப் பழங்கால நூல்களை இன்றைய இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவை எவ்வளவு விரிவான புனைவுப்பரப்பில் இயங்கி, ஆழமான உணர்வுகளை, புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று புரிகிறது. மனிதர்களுக்குள் நடக்கும் மோதலை மட்டும் கிரேக்கக் கதையுலகம் விவரிக்கவில்லை. மாறாக மனிதனுக்கும் கடவுளுக்குமான மோதலை. கடவுளின் பழிவாங்குதலைப் பற்றிப் பேசுகிறது. பூமியைப் போலவே வானமும் அங்கே முக்கியக் கதைக்களமாக விளங்குகின்றன. ஒரு கதாபாத்திரத்தின் விதியை வானிலிருக்கும் ஒரு கடவுள் முடிவு செய்கிறார். மனிதர்கள் கடவுளின் கைகளில் பகடைக்காய்களாக உருளுகிறார்கள். அதிகாரத்திற்கான போட்டி …

அகமெம்னானின் கனவு Read More »

பார்ட்ல்பியின் மறுப்பு

ஹெர்மன் மெல்வில்லின் நெடுங்கதையான Bartleby, the Scrivener முப்பது பக்கங்கள் கொண்டது. 1853 இல் வெளியானது. நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள சட்ட அலுவலகத்தில் கதை நடக்கிறது. கதை சொல்பவர் ஒரு வயதான வழக்கறிஞர். அவரது அலுவலகத்தில் பணியாற்றிய பார்ட்ல்பி என்பவனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். சட்ட ஆவணங்கள்- ஒப்பந்தங்கள், குத்தகைகள், உயில்கள் மற்றும் பிற ஆவணங்களைக் கையால் நகலெடுக்கும் எழுத்தர்களே ஸ்க்ரிவெனர் எனப் படுகிறார்கள். அவர்களின் வேலை ஆவணங்களை நகலெடுத்து மூலத்துடன் ஒப்பிட்டு …

பார்ட்ல்பியின் மறுப்பு Read More »

புஷ்கினைத் தேடுகிறார்கள்

உலகின் பல்வேறு நூலகங்களிலிருந்தும் புஷ்கினின் முதற்பதிப்புகள் திருடு போவதாகச் செய்தி படித்தேன். டார்ட்டு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சமீபமாக இந்தத் திருட்டு நடைபெற்றிருக்கிறது அரிய நூல்களை இப்படித் திருடிச் சென்றுவிற்கும் கூட்டம் பெருகிவிட்டது என்றும், இந்த முதற்பதிப்புகளுக்கு இன்றைய சந்தையில் விலை பல கோடி ரூபாய் என்றும் சொல்கிறார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முதற்பதிப்புகளைச் சேகரிக்கும் வசதி படைத்தவர்கள் அதற்காக எவ்வளவு பணமும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். அரிய புத்தங்களைச் சேகரிக்கும் இந்தப் பிப்லியோஃபைல்களின் உலகம் விசித்திரமானது. இதைப்பற்றி ஜீன் …

புஷ்கினைத் தேடுகிறார்கள் Read More »

கவனிக்க மறந்த மனிதர்கள்

 (கிதார் இசைக்கும் துறவி சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்) டாக்டர் இரா.மௌலிதரன் கிதார் இசைக்கும் துறவி இந்த வருடம் வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு , அதற்குக் காரணம் அதன் ஆசிரியர் . எஸ் ரா அவர்கள் சிறுகதையில் ஒரு மாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும் . இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இத்தனை கதைகளுக்குப் பிறகும் அவருக்கு எழுதுவதற்கு ஒரு சிறுகதையாக என்ன மிஞ்சியிருக்கிறது என்ற கேள்வியே என்னை இந்தப் புத்தகத்தை நோக்கிய பெரும் …

கவனிக்க மறந்த மனிதர்கள் Read More »

வளைந்து செல்லும் வாக்கியங்கள்

சொல்வனம் இதழில் நம்பி கிருஷ்ணன் மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time” என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறார். பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் ப்ரூஸ்டினை இதைவிடச் சிறப்பாக எவராலும் அறிமுகம் செய்துவிட முடியாது. அபாரமான கட்டுரை. தலைசிறந்த பேராசிரியர் வகுப்பில் உரையாற்றுவதைப் போலத் தனது வாசிப்பின் ஆழத்தை, ஞானத்தைக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நம்பி கிருஷ்ணனின் கட்டுரைகள் தமிழுக்குக் கிடைத்த கொடை என்றே சொல்வேன். மார்சல் ப்ரூஸ்டின் பெயரை எனது ஆங்கிலப் பேராசிரியர் ஜோசப் …

வளைந்து செல்லும் வாக்கியங்கள் Read More »

கவிதையினுள் மறைந்த கதை.

இந்திய ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டர் (Meena Alexander) ஒரு நேர்காணலில் தான் கதைகள் எழுத விரும்புகிறேன். ஆனால் அதைக் கவிதையாக எழுதிவிடுகிறேன் என்கிறார். அதே நேர்காணலின் இன்னொரு பதிலில் எனது கவிதையில் உப்புத் தண்ணீரில் கரைந்திருப்பது போலக் கதை கலந்திருக்கிறது என்றொரு விளக்கத்தையும் சொல்கிறார். கதை எனச் சிறுகதையாசிரியர்கள் சொல்வதும் மீனா அலெக்சாண்டர் சொல்வதும் ஒன்று தானா. கதை என்று சொல்லப்படுவது நிகழ்வுகளா. அல்லது அனுபவங்களின் திரட்சியா. இது தான் கதை என்று  எவராலும் வரையறை …

கவிதையினுள் மறைந்த கதை. Read More »

கால்வினோவின் ஆறு உரைகள்

எழுத்தின் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான கட்டுரைகள், நூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் பெருமளவு பல்கலைகழகப் பேராசிரியர்கள் எழுதியது. வகுப்பறைப் பாடமாகவோ, அல்லது பயிற்சிமுகாமிற்கான கையேடு போலவோ தயாரிக்கபட்டவை. தனது படைப்புகள் மற்றும் படைப்பின் நுட்பங்கள் பற்றி எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களே நாம் வாசிக்க வேண்டியவை. இதே பொருளில் அவர்கள் ஆற்றிய உரைகளும் முக்கியமானதே. ஹார்வர்ட் பல்கலைகழகத்தால் நடத்தப்படும் NORTON LECTURES வரிசையில் T .S. Eliot, Jorge Luis …

கால்வினோவின் ஆறு உரைகள் Read More »

ஆகஸ்ட் மாதக் காதல்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் புதிய நாவல் Until August யை வாசித்தேன், அவர் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு வெளியாகியுள்ளது. 2002ல், மார்க்வெஸிற்கு டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டது. நினைவு மறத்தலுக்கு ஆளான மார்க்வெஸால் அதன்பிறகு எதையும் எழுத இயலவில்லை. அவரது கடைசி நாட்களில் குடும்ப உறுப்பினர்களையே அடையாளம் கண்டு கொள்ள முடியாதவராக இருந்தார் என்கிறார்கள். எழுத்தாளனின் ஒரே சொத்து நினைவுகள் தான். அது மறையத்துவங்கும் போது அவன் இறக்கத் துவங்குகிறான். மறதியோடு நடக்கும் போராட்டம் தான் எழுத்து. …

ஆகஸ்ட் மாதக் காதல் Read More »