லியர் சென்ற பாதை
லியோ டால்ஸ்டாய் தனது 82வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிப் போன நிகழ்வை பாவெல் பெசின்ஸ்கி விரிவாக ஆராய்ந்து தனது Flight from Paradise நூலில் எழுதியிருக்கிறார். அதில் டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறிய செய்தி நாளிதழ்களில் எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கிழட்டுச் சிங்கம் தன் குகையை விட்டு வெளியேறிச் சென்றது, தப்பிப்பறந்தார் டால்ஸ்டாய் டால்ஸ்டாய் எங்கே ஒளிந்திருக்கிறார் என செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஒடேசா என்ற நாளிதழ் “டால்ஸ்டாயைத் தேடாதீர்கள். அவர் குடும்பத்திற்கு மட்டும் …









