புத்தக விமர்சனம்

இளம்வாசகி

எனது நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து என்ற சிறார் நூலுக்கு பதினோறு வயது சிறுமி ரியா எழுதியுள்ள விமர்சனம். உன் அன்பான வாசிப்பிற்கு நன்றி ரியா. •• பெயர் : ரியா ரோஷன் வகுப்பு : ஆறாம் வகுப்பு வயது :11 இடம் :சென்னை புத்தகம் :நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து ஆசிரியர்:எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் :தேசாந்திரி விலை : Rs.70 சனிக்கிழமை நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். நான் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம்  …

இளம்வாசகி Read More »

கடலின் காட்சிகள்

யாழினி ஆறுமுகம்•• தங்களது சிறுகதைகள் தொகுப்பான “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது” தற்போது தான் படித்தேன்.ஒவ்வொரு கதையும் அருமை. வரலாற்றையும், நினைவுகளையும், நடப்பு உலகையும் தனது அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன என்று கூறியுள்ளீர்கள். ஆனால் உருவாக்கியுள்ளீர்கள் என்று தான் கூறுவேன். கிரேக்கத்து முயல் கதை மிகவும் அருமை. பின்னிரவுத் திருடன், பெரிய வார்த்தை, இருபது வயதின் அவமானங்கள், வயதின் கனவுகள் கதைகள் எல்லாம் மனதின் சிக்கல்களை மிக நுட்பமாக போகிற போக்கில் கதை மாந்தர்கள் சொல்லிக் கொண்டே போகிறார்கள். …

கடலின் காட்சிகள் Read More »

சிங்கப்பூர் கனவு.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் பயணநூல் Singapore Dream and Other Adventures: சின்னஞ்சிறிய நூல். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவிற்கு ஹெஸ்ஸே மேற்கொண்ட மூன்று மாத காலப்பயண அனுபவத்தை 21 கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் மூன்று நான்கு பக்கங்களே ஆகும். 1911ல் இந்தப் பயணத்தை ஹெஸ்ஸே மேற்கொண்டிருக்கிறார். ஹெஸ்ஸேயின் தாத்தா ஹெர்மன் குண்டர்ட் இந்தியாவில் மதப்பிரச்சாரம் செய்தவர். கேரளாவில் பணியாற்றிய கிறிஸ்துவ மிஷனரியில் இருந்தவர். அவருக்கு ஒன்பது இந்திய மொழிகள் தெரியும். அவரே …

சிங்கப்பூர் கனவு. Read More »

திரைநாயகன்

ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமான திலீப்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். Dilip Kumar: The Substance and the Shadow என்ற நூல் யூசுப்கான் என்ற பெஷாவரைச் சேர்ந்த இளைஞன் திலீப்குமார் என்ற நட்சத்திரமாக உருவான கதையை மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. சினிமாவோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு குடும்பத்திலிருந்து உருவானவர் திலீப்குமார். அவர் சினிமாவில் நடிக்கிற விஷயம் அவரது தந்தைக்குக் கூடத் தெரியாது. போஸ்டரில் திலீப்குமாரின் படத்தைப் பார்த்தபிறகே தந்தை அது பற்றி விசாரித்து …

திரைநாயகன் Read More »

படிக்கத் தெரிந்த சிங்கம்

படிக்கத் தெரிந்த சிங்கம் – எஸ்.ராமகிருஷ்ணன் (சிறார் நாவல்) விழியன் ** எஸ்.ரா கதை சொல்லி கேட்பது ஒரு சுவாரஸ்யம். சுவாரஸ்யம் என்பதைவிட ஒரு மயக்கம் கொடுத்துவிடும். பிரசாத் ஸ்டுடியோ வாசலில் ஒருமுறை சந்தித்தபோது படிக்கத் தெரிந்த சிங்கத்தின் ஒன் லைனைரை கூறினார். குழந்தைகள் தினசரிகளை வாசிக்க வைக்க ஒரு சிறார் நாவல் என்றார். எஸ்.ரா செய்யப்போகும் மாயத்திற்காக காத்திருந்தேன். விறுவிறு வாசிப்பு. எட்டு வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கான புத்தகமாக வந்துள்ளது. அதைவிட சிறிய …

படிக்கத் தெரிந்த சிங்கம் Read More »

செம்மலரில்

செம்மலர் மே இதழில் இடக்கை நாவல் குறித்து கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார். அவருக்கும் செம்மலர் இதழுக்கும் மனம் நிரம்பிய நன்றி ••

மண்ணின் இசையாய்…

( சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக் கட்டுரை) சுப்பாராவ் கர்னாடக சங்கீதம் இந்த மண்ணின் இசையா? இல்லை அதுவும் கைபர் கணவாய் வழியே வந்ததா? என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. நல்ல ரசனையும், ஆழ்ந்த வாசிப்பும், பரந்த பார்வையும் கொண்ட பல முற்போக்காளர்கள் கூட கர்னாடக சங்கீத விஷயத்தில் சறுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அது இந்த மண்ணின் இசையல்ல, அது இந்த மக்களின் இசையல்ல, அது மேட்டுக்குடியினரின் இசை, உழைக்கும் வர்க்கத்திற்கு, பிராமணரல்லாத, இடைநிலைச்சாதியினருக்கு சம்பந்தமில்லாத ஒரு …

மண்ணின் இசையாய்… Read More »

உண்மையின் தோழன்

சமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான யாருடைய எலிகள் நாம் நூலை வாசித்தேன், சமகாலப்பிரச்சனைகள் குறித்து வெகுதீர்க்கமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவைகள். வேறுவேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் அதன் அடிப்படையாக இயங்குவது நீதியுணர்வும் அறச்சீற்றமும் தான். சமூகவெளியில் நடக்கின்ற வன்முறைகள், அரசியல் வெறியாட்டங்கள், ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் போகிற பொதுபுத்தியின் மீது விழும் சவுக்கடிகள் தான் இந்தக் கட்டுரைகள் சமஸின் கட்டுரைகள் பிரச்சனைகளை மட்டும் கவனம் கொள்பவையில்லை, மாறாக அது எப்படி உருவானது, எங்கே அதன் வேர்கள் புதையுண்டிருக்கின்றன, …

உண்மையின் தோழன் Read More »

‘சொந்தக்குரல்’ சிறுகதை பற்றிய என் குரல்

பிச்சினிக்காடு இளங்கோ நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய கதைகளைத்தான் சொல்லமுடியும். காரணம் அவை என்னுடைய கதைகள். நினைவிலிருந்து நழுவும் நிலை கதைகளுக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவே உடனடியாக இப்படிப்பதிவுசெய்கிறேன். அப்படித்தான் ஒரு சிறுகதை வாசிப்பாளனாக என்னை நிலைநிறுத்துகிறேன். அண்மையில் சிங்கப்பூர் கிளிமண்டி நூலகத்தில் …

‘சொந்தக்குரல்’ சிறுகதை பற்றிய என் குரல் Read More »

ஏழு தலை நகரம் – மகிழ்விக்கும் கற்பனை

– லேகா உலக இலக்கியம், உலக சினிமா,பயண அனுபவங்கள் என எஸ்.ராவின் அனுபவ தேடல்கள் பலவற்றுள் இருந்து வேறுபட்டு குழந்தைகளுக்கான மிகுந்த கற்பனை,தந்திரங்கள்,மாயாஜாலங்கள் நிறைந்தது இந்நாவல். இரும்புக்கை மாயாவி” ,”வேதாள கதைகள்” ,”சிந்துபாத்” என சிறு பிராயத்தில் படித்த கதைகளை மீண்டும் நினைவில் கொண்டும் இந்நாவலின் கதையாடல் முற்றிலும் ஒரு புதிய அனுபவம். குழந்தைகளுக்கான வாசிப்பு வெளிகள் முற்றிலும் சுருங்கிய இன்றைய சூழலில் ஆனந்த விகடனின் இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது தற்கால நிகழ்வாகவே சொல்லப்படும் இந்நாவலின் கதையாடல் எங்கோ …

ஏழு தலை நகரம் – மகிழ்விக்கும் கற்பனை Read More »