சிறுகதை

காணாமல் போனவர்களின் வசிப்பிடம்

(உயிர்மை 100 வது இதழில் வெளியான சிறுகதை) 1891ம் ஆண்டு நடைபெற்ற பில்வமங்கன் கொலை வழக்கு எனப்படும் மோகன்பூர் ஜமீன்தார் கொலைவழக்கினை விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்டிருந்த போலீஸ் சூப்ரெண்டெண்ட் யதோத்தகாரி எழுதிய டயரிக் குறிப்புகள் அவரது மறைவிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவரது குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு நூலாக்கம் பெறுவதற்காக நவயுகம் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருந்தது. இந்த வழக்கின் விசித்திரம் கொலையாளியாகச் சந்தேகிக்கபடும் பில்வமங்கனின் மனைவி வருணா கொலை நடந்த இரவு காணாமல் போய்விட்டார். இக் கொலைவழக்கினை விசாரிக்க …

காணாமல் போனவர்களின் வசிப்பிடம் Read More »

இரண்டு கிழவர்கள்

விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை டெல்லிக்கு விமானத்தில் தான் போக வேண்டும் என்று பட்டாபிராமன் நினைத்தார். பின்பு காந்தி ஒருமுறை கூட விமானத்தில் போனதில்லையே. நாம் ஏன் காந்தி சமாதியைக் காண விமானத்தில் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே டெல்லி ரயிலில் டிக்கெட் போட்டார். காந்தி சமாதியை பார்க்க வேண்டும் என்பதற்காக டெல்லி போகிறேன் என்று மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டான். இந்த வயதான காலத்தில் எதற்காகக் காந்தி சமாதியைப் பார்க்க வேண்டும். பல …

இரண்டு கிழவர்கள் Read More »

நினைவுப் பெண்

புதிய சிறுகதை ஹூப்ளி எக்ஸ்பிரஸில் யாரோ ஒரு பெண் தவறவிட்டதாக அந்தச் சிவப்பு நிற மணிபர்ஸை ரயில்வே காவல் நிலையத்தில் வித்யா ஒப்படைத்தபோது மார்கண்டன் ஸ்டேஷனில் இல்லை. ஆறாவது பிளாட்பாரத்தில் கிடந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் அடிப்பதாகப் பயணிகள் புகார் செய்த காரணத்தால் அதைப் பரிசோதனை செய்யப் போயிருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு மரப்பெட்டியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலை அவர்கள் கைப்பற்றினார்கள். அவளது தலையை மட்டும் காணவில்லை. ஆனால் உடல் மூன்றாகத் துண்டிக்கபட்ட நிலையில் …

நினைவுப் பெண் Read More »

பதினேழாவது ஆள்

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை ராமநாதன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் புதிதாக ஒருவர் தோன்றியிருந்தார். அவர் யார். எப்படி புகைப்படத்தில் புதிதாகத் தோன்றினார் என்று வீட்டில் எவருக்கும் புரியவில்லை. அந்தப் புகைப்படம் 1986ல் எடுக்கப்பட்டது. அஜந்தா ஸ்டுடியோவில் பொங்கலுக்கு மறுநாள் எடுத்தது. சின்ன அக்கா கல்யாணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம். சுருள் முடியோடு பேரழகியாக இருக்கிறாள். அந்த புகைப்படத்தில் மொத்தம் பதினாறு பேர் இருந்தார்கள். ஆனால் பதினேழாவதாக …

பதினேழாவது ஆள் Read More »

பஷீரின் திருடன்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடில் வெளியான எனது குறுங்கதை எத்தனையோ திருடர்களையும் போக்கிரிகளையும் பிச்சைக்காரர்களையும் சீட்டாடிகளையும் தனது கதைகளில் எழுதி மக்கள் மனதில் நிலைபெறச் செய்திருக்கிறாரே பஷீர் அவர் ஏன் தன்னைப் பற்றி ஒரு கதை கூட எழுதவில்லை என்ற ஏக்கம் கள்ளன் யூசுப்பிற்கு நீண்டகாலமாக இருந்தது, அவன் தான் வைக்கம் முகமது பஷீரின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்தவன். அதில் சில்லறைக் காசுகளைத் தவிரப் பணம் ஏதுமில்லை என்று தெரிந்து அவரிடமே திரும்பக் கொண்டு போய்க் கொடுத்தவன். அவனது …

பஷீரின் திருடன். Read More »

கோடைகாலப் பறவை

புதிய சிறுகதை ரங்கநாத் கையில் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளிட்ட சிறகொன்றை வைத்திருந்தான். நீளமான அச்சிறகு வசீகரமாகயிருந்தது “அது என்ன பறவையின் சிறகு“ என்று கேட்டாள் லூசி. “பெயர் தெரியவில்லை. ஆனால் இப்படியான சிறகை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்“ என்றான் ரங்கநாத் கோத்தகிரியிலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றினாள் லூசி. தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கூர்மையான நாசி, ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். ஒடிசலான உடல்வாகு. அரக்கு வண்ண காட்டன் புடவை …

கோடைகாலப் பறவை Read More »

இரண்டு ஜப்பானியர்கள்

புதிய சிறுகதை அந்த இரண்டு ஜப்பானியர்களும் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருந்தார்கள். கியாத்தோவிலிருந்து இந்தியாவின் தென்கோடியிலிருந்த கொடைக்கானல் மலைக்கு வந்து சேர்ந்த தூரமது. உடல்வாகை வைத்து ஜப்பானியர்களின் வயதைக் கண்டறிய முடியாது. முகத்திலும் பெரிய மாற்றமிருக்காது. முழுவதுமாகத் தலைநரைத்த ஜப்பானியர் ஒருவரைக் கூட நந்தகுமார் கண்டதில்லை. கொடைக்கானலுக்கு வரும் வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரே வசதியானவர்கள். மற்றவர்கள் அந்த நாடுகளில் நடுத்தர வருமானமுள்ள தொழிலாளர்களாகவோ, அலுவலகப் பணியாளர்களாகவே இருப்பவர்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் வருவதுண்டு. இதுவரை …

இரண்டு ஜப்பானியர்கள் Read More »

கடைசிக் குதிரைவண்டி

புதிய சிறுகதை கண்ணாயிரம் வீட்டின் பெரிய இரும்புக் கேட்டை ரகசியமாகத் தள்ளி அந்த இடைவெளியின் வழியே உள்ளே எட்டிப்பார்த்தார் சேர்மதுரை. குதிரை கண்ணில் படவில்லை. வாசலை ஒட்டி ஒரு இன்னோவா கார் நிற்பது மட்டும் தான் கண்ணில் தெரிந்தது. எக்கிக் கொண்டு பார்த்தபோது நாலைந்து பூச்செடிகளும் பைக் ஒன்றும் கண்ணில் பட்டது குதிரையை எங்கே கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று மாலை அவரது கடனுக்காகக் குதிரையைக் கண்ணாயிரத்தின் ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அந்த நேரம் சேர்மதுரை …

கடைசிக் குதிரைவண்டி Read More »

தேவகியின் தேர்

புதிய சிறுகதை “நம்ம கோவில் தேரைப் பார்க்க வந்திருக்கிறார். அவரைத் தேரடி முக்கு வரைக்கும் அழைச்சிட்டு போயிட்டு வா“ என்று ஹரியிடம் அப்பா சொன்ன போது அவன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தான். அம்மா தோசைக்கல்லை அப்போது தான் அடுப்பில் போட்டிருந்தாள். அம்மா மெதுவாகத் தான் தோசை சுடுவாள். அதுவும் அப்பாவிற்குச் சுடும்போது இடையில் வேறு யாரும் சாப்பிட வந்துவிடக்கூடாது. அப்பா சாப்பிட்டுமுடித்துப் போன பிறகு தான் மற்றவர்களுக்குச் சாப்பாடு அப்பா ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் நிர்வாகத்தைப் பார்க்கிறவர் என்பதால் அதிகாலையிலே …

தேவகியின் தேர் Read More »

வாழ்வின் தேவை

சிறுகதை குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஸ்வேதா அம்மாவை வரவழைத்திருந்தாள். இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகிவிட்டது. நிறையக் குருதிப்போக்கு. அறுவைசிகிச்சை. அவளை இரண்டுமாதகாலம் படுக்கையில் கிடத்திவிட்டது. இதற்கு மேல் லீவு போட முடியாது என்ற சூழலில் அலுவலகம் போய்வரத்துவங்கினாள். அப்பா இருக்கும்வரை அம்மா தனியே பயணம் செய்ததேயில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஏற்றிவிட்டால் தானே பெங்களூர் வந்துவிடுகிறாள். கன்னடம் தெரியாத போதும் அவளாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்துவிடுகிறாள். இந்த முறை அப்படித்தான் வந்து …

வாழ்வின் தேவை Read More »