பிரபஞ்சனைச் சந்தித்தேன்
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தொடர் சிகிட்சைகள் பெற்று வரும் எழுத்தாளர் பிரபஞ்சனைக் காணுவதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். நண்பர் இளவேனில் உடன் வந்திருந்தார். புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்புப் பிரிவின் தனியறை… நலம்பெற்று புன்னகையுடன் எழுதிக் கொண்டிருக்கும் பிரபஞ்சனைக் காண சந்தோஷமாக இருந்தது. மருத்துவர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கவனித்துக் கொள்கிறார்கள். பத்திரிக்கையாளர் பிஎன்எஸ் பாண்டியன் பெரும்துணையாக இருந்து உதவிகளைச் செய்து வருகிறார். நண்பர்கள்,எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துப் …