புரவி முதலாம் ஆண்டுவிழா
வாசக சாலையின் சார்பில் வெளியிடப்படும் புரவி இதழின் முதலாம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இந்த நிகழ்வு ஏப்ரல் 9 சனிக்கிழமை மாலை தி.நகரிலுள்ள தக்கர்பாபா வளாகத்தினுள் நடைபெறுகிறது
வாசக சாலையின் சார்பில் வெளியிடப்படும் புரவி இதழின் முதலாம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இந்த நிகழ்வு ஏப்ரல் 9 சனிக்கிழமை மாலை தி.நகரிலுள்ள தக்கர்பாபா வளாகத்தினுள் நடைபெறுகிறது
தி ஸ்கார்லெட் அண்ட் தி பிளாக் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இதை இயக்கியவர் ஜெர்ரி லண்டன். 1943 இல், ரோம் நகரை நாஜி படைகள் ஆக்கிரமித்துக் கொண்ட போது ராணுவம். வாடிகன் நகரையும் போப்பின் அதிகாரத்தையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றது படத்தின் துவக்கக் காட்சியிலே இரண்டு ராணுவ உயரதிகாரிகள் போப்பினை சந்தித்து வாடிகன் தங்கள் அதிகாரத்தில் தலையிடக் கூடாது. யாருக்கும் அடைக்கலம் கொடுப்பதோ, உதவி செய்வதோ கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அத்துடன் …
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ எனத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாகப் புதிய குழுவினை, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் …
பீகாரைச் சேர்ந்த எழுத்தாளர் ராம்ப்ருக்ஷ் பேனிபுரி (Rambriksh Benipuri )இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். ஹாஜாரீபாக் மத்தியச் சிறையிலிருந்த நாட்களில் தன்னுடைய ஊரைப்பற்றியும் தனது நினைவில் பதிந்துபோன அபூர்வமான மனிதர்களைப் பற்றியும் தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொகுப்பு தான் மண் உருவங்கள். வி.எஸ். ரங்கநாதன் மொழியாக்கத்தில் கலைமகள் வெளியீடாக 1960ல் வெளியாகியுள்ளது நூலின் முன்னுரையில் கிராமத்தின் அரசமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள மண்பொம்மைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். இவை அபூர்வமான கலைப்பொருட்கள் அல்ல. ஆனால் நிறைவேறாத …
ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுகிறேன்
ஒரு நிகழ்வு துவங்கும் போது அது எப்படி முடியும் என்று யாராலும் கணித்துவிட முடியாது. இயல்பாக முடிந்துவிட்டால் அன்றாடச் செயலாகிவிடுகிறது. எதிர்பாராமல் முடிந்துவிட்டால் மறக்கமுடியாத அனுபவமாகிறது. சலூனுக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ளச் சென்ற ஒரு பெண் மீள முடியாத பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அதுவும் நட்பாகப் பழகிய தோழியால் வஞ்சிக்கப்படுவதும், மிரட்டி சதிவேலையில் ஈடுபடச்செய்வதும் அதிர்ச்சியான விஷயங்கள். அதைத் தான் Huda’s Salon விவரிக்கிறது. ஹானி அபு-ஆசாத் …
நேற்று நடைபெற்ற சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்திய அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் நாள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. மிகவும் குறைவான கூட்டம். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி
பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது. அறம் அழிவது அன்றாடச் செயல்பாடாகி வருகிறது; என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்தச் சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான். ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைப்பேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான். இந்தத் தொகுப்பில் …
கி.ராவின் கன்னிமை கதை குறித்து எழுதிய பதிவை வாசித்த சேது வேலுமணி நாச்சியாரை ஓவியமாக வரைந்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்