இயல்விருது

இந்த ஆண்டிற்கான இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது சிறந்த ஆய்வாளரும் பதிப்பாசிரியருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது.   அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் அபுனைவு பிரிவில் தனது சுயசரிதைக்காக நீதிநாயகம் சந்துரு இயல்விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள். புனைவிலக்கியத்திற்கான விருது  பெற்றுள்ள ஜெயகரனுக்கும் ,கவிதைக்கான விருது  பெற்றுள்ள ஆழியாளுக்கும் அன்பான வாழ்த்துகள்.

சதுரங்கக் காய்கள் போல

வைரவன் லெ.ரா.வின் பட்டர் பி சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன். பதினைந்து சிறுகதைகள் கொண்ட முதற்தொகுப்பு. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சொந்த ஊர் திரும்புதலின் போது வெளிப்படும் நினைவுகளையும், கடந்தகால வாழ்வின் அரிய தருணங்களையும், மறக்கப்பட்ட மனிதர்களையும் சித்தரிக்கும் கதைகள். நாஞ்சில் வட்டார வாழ்க்கையைக் கிருஷ்ணன் நம்பி, நாஞ்சில் நாடன் துவங்கி சுசில்குமார் வரை பலரும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்டு தனக்கென கதைமொழியும், கதைக்களன்களும் கொண்ட சிறுகதைகளை வைரவன் எழுதியிருக்கிறார். அதுவே இவரது வருகையைக் கொண்டாடச் செய்கிறது. …

சதுரங்கக் காய்கள் போல Read More »

பரவாயில்லையின் சங்கீதம்

கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்ல எப்போதும் ஒரு மௌன ரயில் காத்திருக்கிறது. அது ஒருவர் மட்டுமே செல்லக்கூடியது. மலையின் உச்சியை நோக்கி குகைப் பாதையினுள் செல்லும் பயணமது வழக்கமான ரயில் பயணத்தில் நமக்கும் புறக்காட்சிக்குமான இடைவெளி குறைவதும் விரிவதுமாக இருக்கும். கவிதையினுள் செல்லும் ரயில் மரங்களை நெருங்கியில்லை மரங்களுக்குள்ளாகவே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. மரத்தினுள் தண்ணீர் நுழைந்து செல்வது போல ரகசியமாக, மகிழ்ச்சியாக நீங்களும் ஒன்று கலந்துவிடுகிறீர்கள். சில வேளைகளில் இந்த ரயில் பின்னோக்கியும் செல்லக்கூடியது. அப்போது …

பரவாயில்லையின் சங்கீதம் Read More »

உலகம் கொண்டாடுகிறது.

பல்வேறு நாடுகளிலும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது உருவப்படம் கொண்ட பணத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதுவும் அவர்களின் கதையுலகின் காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்திய எழுத்தாளர்களுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் கௌரவம் தபால்தலை அல்லது சிறப்புத் தபால் உறை வெளியிடப்படுவது தான். தி.ஜானகிராமன் நினைவாகச் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்ட நிகழ்வு ஒன்றில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். 2016ல் நடந்ததாக நினைவு. கையெழுத்துப் பிரதிகள். முதற்பதிப்புகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. மகாகவி பாரதியின் குரல் எப்படியிருக்கும் என்று …

உலகம் கொண்டாடுகிறது. Read More »

குகையில் ஒரு பெண்

ஈரானில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு 20 ஆண்டுகாலம் திரைப்படம் இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2019ல் வெளியான 3 Faces திரைப்படம் தடையை மீறி ரகசியமாக இயக்கப்பட்டதாகும். பனாஹியின் திரைப்படங்கள் சமகால ஈரானிய வாழ்வைத் துல்லியமாகப் பிரதிபலிக்கக் கூடியவை. அரசியல் ரீதியாகத் துணிச்சலான கருத்துகள் மற்றும் எதிர்ப்பினை முன்வைக்கக்கூடியவை திரைப்படம் எடுப்பதற்குப் பெரிய கதை தேவையில்லை. ஒற்றை நிகழ்வு போதும். அந்த நிகழ்வினை முன்பின்னாக ஆழ்ந்து அறிவதன் மூலம் சிறந்த திரைக்கதையை …

குகையில் ஒரு பெண் Read More »

இதயத்திலிருந்து உதிரும் இலைகள்

பிரெஞ்சு எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜூலியன் பார்ன்ஸ். ஜூலியன் பார்ன்ஸ் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்தவர். அவரது பெற்றோர் பிரெஞ்சு வம்சாவழியை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆகவே இயல்பாகவே அவருக்குப் பிரெஞ்சு மொழி மற்றும் இலக்கியத்தின் மீது விருப்பமிருந்தது. தனது ஆதர்ச எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேரைக் கொண்டாடும் விதமாக அவர் எழுதிய நாவல் Flaubert’s Parrot. 1984 இல் வெளியானது. நாவலின் நாயகனாக வரும் மருத்துவர் ஜெஃப்ரி பிரைத்வைட் ஒருவகையில் ஜூலியன் …

இதயத்திலிருந்து உதிரும் இலைகள் Read More »

தொடுதிரை மீன்கள்

கவிதையில் தத்துவத்தின் இடம் என்ன என்ற கேள்வி இன்று காலாவதியானது. கவிஞர்கள் இதைப்பற்றியெல்லாம் பேசிக் கொள்வதில்லை. விவாதிப்பதில்லை. காரணம் இன்றைய பெரும்பான்மைக் கவிதைகள், நிஜமீன்கள் போலவே செல்போன் திரையில் நீந்திக் கொண்டிருக்கும் பிம்பமீன்கள். அது உண்மையான மீனை விடவும் அதிக நிஜமாக, அதிக இயக்கம் கொண்டதாக, வசீகரமாக இருக்கிறது. திரையில் அலைவுறும் மீனுக்குப் பசியெடுக்காது. அதற்கு மரணமில்லை செல்போன் சட்டகத்தில் நாம் காணும் தண்ணீரும் மீன் கூட்டங்களும் பாசியும் குமிழிடும் நுரைகளும் நிஜமில்லை. அவை நிஜத்திற்கு மாற்றானவை. …

தொடுதிரை மீன்கள் Read More »

காலத்தின் குரல்

நேற்று மாலை முதல் மொழி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் “காலத்தின் குரல்” என்ற தலைப்பில் உரையாற்றினேன். நன்றி : ஸ்ருதி டிவி முதல்மொழி

எட்டு பற்களின் சிரிப்பு.

சீனாவைப் பற்றி அமெரிக்க ஊடகங்கள் பகிரும் செய்திகள். காட்சிகள் பெரிதும் எதிர்மறையான பிம்பத்தைத் தரக்கூடியது. இது போலவே சீன அரசு தன்னைப் பற்றியும் சீன மக்களின் வாழ்க்கை பற்றியும் பகிரும் காட்சிகளும் நம்பகத்தன்மையில்லாதவை. பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டவை. உண்மையான சீனாவின் நிலை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து சில ஆய்வாளர்கள். பத்திரிக்கையாளர்கள் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். அது போன்ற ஒரு ஆவணப்படமே Ascension (2021) ஜெசிகா கிங்டன் இயக்கிய இந்த ஆவணப்படம் இன்றைய சீனாவின் …

எட்டு பற்களின் சிரிப்பு. Read More »

சித்திர செவ்வானம்

எனது பள்ளி வயதில் சினிமா பாடல்களைக் கேட்பதற்கு ரேடியோ ஒன்று தான் வழி. அதுவும் சிலோன் ரேடியாவில் அருமையான பாடல்களை ஒலிபரப்புச் செய்வார்கள். அடுத்து என்ன பாடல் வரும் என்று முன்கூட்டியே சொல்லும் போட்டி எங்களுக்குள் நடக்கும். அந்த நாட்களில் சித்திர செவ்வானம் சிரிக்கக்கண்டேன் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். காற்றினிலே வரும் கீதம் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல். இசைஞானி இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடியது.பஞ்சு அருணாசலம் எழுதியது. இந்தப் பாடலில் வரும் தையரத்தைய்யா தையரத்தைய்யாவை பாடலுடன் …

சித்திர செவ்வானம் Read More »