எஸ்.வி.ஆர் – சந்திப்பு.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கோத்தகிரி சென்று உடல் நலமற்றிருந்த தோழர் எஸ்.வி. ஆர் அவர்களைச் சந்தித்தேன். தாங்க முடியாத வலியுடன் போராடியபடி படுக்கையில் இருந்தார். அவரது கட்டிலின் அருகிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். உரையாடல் துவங்கிய அரைமணி நேரத்தில் அவரிடம் உற்சாகம் ஏற்பட்டு எழுந்து அமர்ந்து கொண்டார். பேச்சும் எழுத்தும் தான் அவருக்கான மருந்து எங்களுக்காக மதிய உணவு தயாரிக்கச் சொன்னார். நல்ல உணவளித்தார்கள். நான்கு மணி நேரம் அவருடன் இருந்தேன். வலியின் உச்சத்தில் வாழ்ந்து வந்த …

எஸ்.வி.ஆர் – சந்திப்பு. Read More »

சாம்பல் முகங்கள்

ஆறுவயதான கர்ட் தனது அத்தை எலிசபெத்துடன் டிரெஸ்டனில் நடைபெறும் ஓவியக்கண்காட்சிக்குச் செல்வதுடன் NEVER LOOK AWAY படம் துவங்குகிறது. ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஃப்ளோரியன் ஹென்கெல் வான் டோனர்ஸ்மார்க் இயக்கியுள்ள படம் அந்தக் கண்காட்சி கர்ட்டிற்கு விநோதமாகயிருக்கிறது வருகை தந்துள்ள மனிதர்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் விசித்திர ஓவியங்கள், புதிரான நவீன சிற்பங்கள். காவல்காக்கும் ராணுவத்தினர் என அந்த இடமும் மனிதர்களும் மிரட்சி கொள்ளச் செய்கின்றன ஆனால் எலிசபெத் கண்காட்சியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஒவியங்களை ரசிக்கிறாள். அவளது …

சாம்பல் முகங்கள் Read More »

மதகுரு 3 – ஓநாயும் நாவலும்

மதகுரு நாவலில் ஓநாய்களின் கூட்டம் கெஸ்டாவை தாக்கும் காட்சி இடம்பெறுகிறது. அபாரமான பகுதியது. பணக்காரக் கிழவன் பிபெர்க்கும் அழகி அன்னா ஸ்டார்ண்யேக்கும் திருமணம் அறிவிக்கப்படுகிறது. அதைக் கெஸ்டா விரும்பவில்லை. அன்னா ஏன் இப்படி ஒரு கிழவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரப்படுகிறான். அன்னாவை மணந்து கொள்ள வேண்டும் எனப் பெர்டினாண்ட் பிரபு ஆசைப்படுகிறான் அன்னாவின் திருமணத்தை ஏற்பாடு செய்தவள் மதகுருவின் மனைவி ஸ்வார்ட்டோ. அவள் தான் பணக்காரக் கிழவனைத் திருமணம் செய்தால் வசதியாக வாழலாம் …

மதகுரு 3 – ஓநாயும் நாவலும் Read More »

மதகுரு- 2 தந்தையின் கோபம்

தந்தைக்கும் மகளுக்குமான உறவில் ஏற்படும் விரிசலையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் மதகுரு நாவலில் செல்மா லாகர்லெவ் மிகவும் நுட்பமாக எழுதியிருக்கிறார். கெஸ்டா பெர்லிங் தனது மகள் மரியாளைக் காதலிக்கிறான். மகளும் அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள் என அறியும் மெல்கியார் இதை விரும்பாமல் ஆத்திரமடைகிறார். அந்தக் கோபத்தினாலே மகளைச் சூதாட்டப்பொருளாக வைக்கிறார். சூதில் கெஸ்டா வென்றுவிடவே மரியாளை அவனிடமே விட்டுவிட்டு ஏக்பி மாளிகையை விட்டு வெளியேறுகிறார். அன்றிரவு நடந்த நடனவிருந்தில் கெஸ்டாவும் மரியாளும் கைகோர்த்து ஆடுகிறார்கள். நள்ளிரவைத் தாண்டியும் …

மதகுரு- 2 தந்தையின் கோபம் Read More »

மதகுரு- தாயின் சாபம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார் கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவல் 1894 இல் ஸ்வீடனில் வெளியாகியிருக்கிறது. மதகுரு நாவலைப் பலமுறை வாசித்திருக்கிறேன். காவியத்தன்மை கொண்ட நாவல். மகாபாரதத்தில் வருவது போலவே சூதாடி பெண்ணைத் தோற்கும் நிகழ்ச்சி இதிலும் இடம்பெற்றிருக்கிறது. தனது மகளைச் சூதில் இழக்கிறார் சிங்களேர். அபூர்வமான இந்த நாவலை எப்படி க.நா.சு கண்டுபிடித்து …

மதகுரு- தாயின் சாபம் Read More »

அக்கடாவின் உலகம்.

மகிழ்நிலா ஒன்பதாம் வகுப்பு, கூத்தூர்,திருச்சி *** குழந்தைகள் கரடி பொம்மைகளுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் ஒரு எண்ணம் என்னைத் திகைக்க வைக்கும், ஒருவேளை உயிரற்ற பொருள்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனவா; இல்லை அவை பேசுவது குழந்தைகளுக்கு மட்டுமே கேட்கக்கூடியதா? என்ற கேள்விகள் மனதில் வந்து செல்லும். அத்தகைய கேள்விகளுக்கான விடையாக அக்கடா அமைந்திருந்தது. என்னை மீண்டும் ஒரு சிறுகுழந்தை போலச் சிந்திக்க வைத்த அக்கடாவை என்னால் மறக்க முடியாது. அக்கடா தன்னுடைய பெயரைத் தீர்மானம் செய்யும் கதை மிகவும் நகைப்பூட்டலாக …

அக்கடாவின் உலகம். Read More »

world Literature Today இதழில்

எனது சிறுகதை சொந்தக்குரல் world literature today மே இதழில் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற இலக்கிய இதழிது. சர்வதேச அளவில் படைப்புகள் வெளியாகின்றன. திலா வர்கீஸ் எனது கதையை மொழிபெயர்ப்பு செய்துள்ளார் கதையை வாசிக்க இணைய தளத்திற்கு செல்லவும்.

நடைவணிகர்

முதுகில் சுமையோடு கையில் ஊன்றுகோலுடன் தனியே நடந்து செல்லும் வணிகரின் சித்திரம் ஒன்றைப் பார்த்தேன். அவருடன் நாய் ஒன்றும் உடன் செல்கிறது. அழகான ஓவியம். இங்கிலாந்தின், கிராமப்புறங்களிலிருந்து சிறிய நகரங்களுக்குப் பொருட்களைச் சுமந்து சென்று விற்பன செய்யும் வணிகரது கோட்டுச்சித்திரம் Street Pedlar என அழைக்கப்படும் இது போன்ற வணிகர்கள் இங்கிலாந்தில் நிறைய இருந்தார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்திருந்தது. ஆகவே இவர்களின் பயண அனுபவம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. சிலரது நாட்குறிப்புகள் மற்றும் …

நடைவணிகர் Read More »

நிழல் சொல்லும் நிஜம்.

பள்ளி நாட்களில் The Count of Monte Cristo நாவலின் சுருக்கத்தை ஆங்கிலத் துணைப்பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்பு நாவலின் இரண்டு வேறுபட்ட திரைவடிவங்களைப் பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான கதை. 2002ல் வெளியான The Count of Monte Cristo படத்திலுள்ள மழைத்துளிகளுக்கு நடுவே வாள் வீசி பயிற்சி எடுக்கும் காட்சி மறக்கமுடியாதது. அலெக்சாண்டர் டூமா பிரான்சில் மட்டுமின்றி இந்தியாவிலும் விரும்பிப் படிக்கப்பட்டவர். இவரது The Three Musketeers நாவலுக்கு 50க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தழுவல்கள் …

நிழல் சொல்லும் நிஜம். Read More »

துப்பாக்கியிலிருந்து எழும் இசை

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் எனியோ மோரிகோன் பற்றி Ennio என்ற  ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனியோ மோரிகோன் என்றதும் வெஸ்டர்ன் திரைப்படங்களின் மறக்கமுடியாத இசை நினைவில் எழுகிறது. அதிலும் குறிப்பாக விசிலோடு கூடிய The Good the Bad and the Ugly – Main Theme மற்றும் Man with Harmonica – …

துப்பாக்கியிலிருந்து எழும் இசை Read More »