வேடிக்கைப் பேச்சு

பீகாரைச் சேர்ந்த எழுத்தாளர் ராம்ப்ருக்ஷ் பேனிபுரி (Rambriksh Benipuri )இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். ஹாஜாரீபாக் மத்தியச் சிறையிலிருந்த நாட்களில் தன்னுடைய ஊரைப்பற்றியும் தனது நினைவில் பதிந்துபோன அபூர்வமான மனிதர்களைப் பற்றியும் தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொகுப்பு தான் மண் உருவங்கள். வி.எஸ். ரங்கநாதன் மொழியாக்கத்தில் கலைமகள் வெளியீடாக 1960ல் வெளியாகியுள்ளது நூலின் முன்னுரையில் கிராமத்தின் அரசமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள மண்பொம்மைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். இவை அபூர்வமான கலைப்பொருட்கள் அல்ல. ஆனால் நிறைவேறாத …

வேடிக்கைப் பேச்சு Read More »

உளவு பார்க்கும் உலகில்

ஒரு நிகழ்வு துவங்கும் போது அது எப்படி முடியும் என்று யாராலும் கணித்துவிட முடியாது. இயல்பாக முடிந்துவிட்டால் அன்றாடச் செயலாகிவிடுகிறது. எதிர்பாராமல் முடிந்துவிட்டால் மறக்கமுடியாத அனுபவமாகிறது. சலூனுக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ளச் சென்ற ஒரு பெண் மீள முடியாத பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அதுவும் நட்பாகப் பழகிய தோழியால் வஞ்சிக்கப்படுவதும், மிரட்டி சதிவேலையில் ஈடுபடச்செய்வதும் அதிர்ச்சியான விஷயங்கள். அதைத் தான் Huda’s Salon விவரிக்கிறது. ஹானி அபு-ஆசாத் …

உளவு பார்க்கும் உலகில் Read More »

யுவபுரஸ்கார் விழா

நேற்று நடைபெற்ற சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்திய அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் நாள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. மிகவும் குறைவான கூட்டம். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான்

பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது. அறம் அழிவது அன்றாடச் செயல்பாடாகி வருகிறது; என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்தச் சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான். ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைப்பேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான். இந்தத் தொகுப்பில் …

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான் Read More »

கிரா ஓவியம்

கி.ராவின் கன்னிமை கதை குறித்து எழுதிய பதிவை வாசித்த சேது வேலுமணி நாச்சியாரை ஓவியமாக வரைந்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

சாகித்திய அகாதமி விழா

சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு சென்னையில் மார்ச் 30 மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வடபழனியிலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது

நாச்சியாரு, என் பிரியே

கி.ராவின் ’கன்னிமை’ சிறுகதையில் வரும் நாச்சியாரைப் பற்றி நினைக்கும் போது மனதில் மணிமேகலையின் உருவம் தோன்றி மறைகிறது. இருவருக்கும் ஒரே சாயல். நாச்சியார் கன்னிப்பெண்ணாக இருந்த போது எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிறாள். ஒடியோடி உதவிகள் செய்கிறாள். அன்பு மயமாக இருக்கிறாள். வேலைக்காரர்களுக்குக் கூட அவள் கையில் தான் கஞ்சி ஊற்றுவது பிடித்திருக்கிறது. பருத்தி எடுக்கும் பெண்கள் கூட அவள் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மாஎன்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் படைத்துப் படைத்து …

நாச்சியாரு, என் பிரியே Read More »

உறக்கத்தை வரைபவர்

ஹென்றி மாங்குயின் (Henri Manguin )என்ற பிரெஞ்சு ஓவியரின் La Sieste என்ற ஓவியம் உறக்கத்திலுள்ள ஒரு பெண்ணைச் சித்தரிக்கிறது. 1905ல் வரையப்பட்ட இந்த ஓவியத்திலிருப்பவர் மாங்குயினின் மனைவி ஜீன். அவளை மாடலாகக் கொண்டு மாங்குயின் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார் இந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் மனதில் ஜப்பானிய நாவலாசிரியரான யாசுனாரி கவாபத்தா எழுதிய House of the Sleeping Beauties நாவல் தான் நினைவிற்கு வந்தது. மயக்க நிலையில் உறங்கும் பெண்ணின் அருகில் அவளறியாமல் படுத்து உறங்கும் …

உறக்கத்தை வரைபவர் Read More »