நிகழ்வின் கிளைவழிகள்

Waru என்ற நியூசிலாந்து திரைப்படத்தைப் பார்த்தேன். வாரு என்ற பழங்குடியினச் சிறுவனின் மரணம் மற்றும் இறுதிச்சடங்கினையும் அது பழங்குடியினரிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் முன்வைத்து உருவாக்கப்பட்ட கதைதொகுப்பாகும். ஒவ்வொரு பகுதியும் பத்து நிமிஷம் ஓடக்கூடியது. சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியினையும் ஒரு மாவோரி பெண் இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்தத் தொகுப்பிற்கான படப்பிடிப்பு காலை 9:59 மணிக்குத் தொடங்கி, ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த Anthology இதுவே. ரோஷோமான் போல …

நிகழ்வின் கிளைவழிகள் Read More »

ஹைதராபாத் நாட்கள்

ஒரு வாரம் ஹைதராபாத்திலிருந்தேன். நண்பர்கள் சந்திப்பு. சினிமா வேலை, ஊர்சுற்றல் என நாட்கள் போனதே தெரியவில்லை. ஹைதராபாத்தில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் அதிகம். விடிகாலை துவங்கி நள்ளிரவு வரை எந்தச் சாலையில் சென்றாலும் நீண்ட வாகன வரிசை. நெடிய காத்திருப்பு. ஹைதராபாத் இன்னொரு துபாய் என்றே தோன்றியது. ஹைதராபாத் முழுவதும் விதவிதமான உணவகங்கள். சாப்பிடுவதற்கு இடம் பிடிக்கக் குறைந்தது ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டும். விதவிதமான பிரியாணிகள். ருசியான உணவு. அதுவும் இரவுக்கடைகளின் வரிசையினைக் காணும் போது …

ஹைதராபாத் நாட்கள் Read More »

கோவையில் உரையாற்றுகிறேன்

புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா தனது பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவர். சங்க இலக்கியம் குறித்து ஆழ்ந்து அறிந்தவர். இவரது தமிழ்பணியைப் போற்றும் விதமாக 2021ல் பத்மஸ்ரீ விருது அளிக்கபட்டது. அவரது நகைச்சுவை உணர்வும் , சமூக அக்கறையும் மிகுந்த பாராட்டிற்குரியது நீண்டகாலமாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். காலவரிசைப்படுத்தி, புதிய உரையுடன் இவர் வெளியிட்ட ‘புறநானூறு’ – …

கோவையில் உரையாற்றுகிறேன் Read More »

திருப்பூர் புத்தகத் திருவிழாவில்

திருப்பூர் புத்தகத் திருவிழா ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 24 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை கண்காட்சி வளாகத்தில் உரையாற்றுகிறேன் தலைப்பு : பசியின் கதை அன்று மாலை 4 மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம் •••

ஃபாசெட்டின் கதைச்சித்திரங்கள்.

1940- 50களில் Saturday Evening Post, Collier, Cosmopolitan போன்ற அமெரிக்க இதழ்களில் வெளியான துப்பறியும் கதைகளுக்குத் தனித்துவமிக்கப் படங்களை வரைந்திருக்கிறார் ராபர்ட் ஃபாசெட்(Robert Fawcett). இவரது கதைச்சித்திரங்களின் தொகுப்பினை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் படங்கள் வரையப்பட்ட திகில் கதைகளில் ஒன்றிரண்டினை தான் படித்திருக்கிறேன். ஆனால் பல கதைகளில் என்ன நடக்கிறது என்பதை ஓவியத்தின் வழியாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அது தான் ஃபாசெட்டின் சிறப்பு. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய ஆர்தர் கோனன் டாய்லின் மறைவிற்குப் …

ஃபாசெட்டின் கதைச்சித்திரங்கள். Read More »

புரவி முதலாம் ஆண்டுவிழா

வாசக சாலையின் சார்பில் வெளியிடப்படும் புரவி இதழின் முதலாம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இந்த நிகழ்வு ஏப்ரல் 9 சனிக்கிழமை மாலை தி.நகரிலுள்ள தக்கர்பாபா வளாகத்தினுள் நடைபெறுகிறது

வெள்ளைக் கோட்டினைக் கடந்து.

தி ஸ்கார்லெட் அண்ட் தி பிளாக் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இதை இயக்கியவர் ஜெர்ரி லண்டன். 1943 இல், ரோம் நகரை நாஜி படைகள் ஆக்கிரமித்துக் கொண்ட போது ராணுவம். வாடிகன் நகரையும் போப்பின் அதிகாரத்தையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றது படத்தின் துவக்கக் காட்சியிலே இரண்டு ராணுவ உயரதிகாரிகள் போப்பினை சந்தித்து வாடிகன் தங்கள் அதிகாரத்தில் தலையிடக் கூடாது. யாருக்கும் அடைக்கலம் கொடுப்பதோ, உதவி செய்வதோ கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அத்துடன் …

வெள்ளைக் கோட்டினைக் கடந்து. Read More »

மாநில கல்விக் கொள்கை குழு

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ எனத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாகப் புதிய குழுவினை, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் …

மாநில கல்விக் கொள்கை குழு Read More »