டால்ஸ்டாய் ஓவியம்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் முகப்பிலுள்ள டால்ஸ்டாய் ஓவியத்தை 11வயதான சித்தார்த் வரைந்து அனுப்பியிருக்கிறான். சித்தார்த்திற்கு எனது மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் முகப்பிலுள்ள டால்ஸ்டாய் ஓவியத்தை 11வயதான சித்தார்த் வரைந்து அனுப்பியிருக்கிறான். சித்தார்த்திற்கு எனது மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும்
ந.ஜயபாஸ்கரனின் அறுந்த காதின் தனிமை கவிதைத் தொகுப்பைப் படித்தேன் மிகச்சிறந்த கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. ஜயபாஸ்கரன் நாம் கொண்டாட வேண்டிய மிக முக்கியமான கவிஞர். மதுரையில் வெண்கலப் பாத்திரங்கள் விற்கும் சிறு வணிகராக வாழ்ந்து வரும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருகிறார். இந்தத் தொகுப்பிலுள்ள அவரது கவிதைகள் வான்கோவினைப் போலவே தீவிர மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன தனது கவிதைகளில் வான்கோவின் அறுந்த காதினை ஒரு குறியீடாக மாற்றியிருக்கிறார் ஜயபாஸ்கரன். அது கொரானோ காலத்தில் உறைந்து …
மஞ்சுளா இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காகக் காத்திருப்பது, நீதி கிடைக்காத போது யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன என்று இந்த நூலின் முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுவது போல் வரலாறு நெடுகிலும் நீதியின் குரல் நெறிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இடக்கை நாவல் முழுக்க நீதி மறுக்கப்பட்ட மனிதனின் துயரக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் எஸ்.ரா. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்குகிறது …
சித்தார்த்த யசோதரா’ என்ற நாவலை வாசித்தேன் சிங்கள எழுத்தாளர் சோமா ஜயகொடி எழுதிய இந்த நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் சரோஜினி அருணாசலம். குமரன் புத்தக இல்லம் வெளியிட்டுள்ளது புத்தரின் மனைவியான யசோதராவின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் அவர்களின் காதல், திருமணம், புத்தரின் துறவு பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் யசோதராவிற்கும் புத்தருக்குமான பந்தம் ஜென்ம ஜென்மமாகத் தொடர்வது என்பதே மைய இழையாக உள்ளது. ரோஹிணி நதி நீரைப் பங்கு போடுவதில் சாக்கிய வம்சத்திற்கும் கோலிய …
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலில் வரும் அக்ஸின்யாவை ஓவியமாக வரைந்திருக்கிறார் சுரேஷ். நாவலைப் படித்த நண்பர் வேலூர் லிங்கம் அக்ஸின்யாவை யாராவது ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவரது விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. சுரேஷிற்கு மனம் நிறைந்த நன்றி
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது மண்டியிடுங்கள் தந்தையே பற்றிய அறிமுகம் வெளியாகியுள்ளது
கடந்த இரண்டு நாட்களாக சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்தேன். நேற்று நல்ல கூட்டம். நிறைய இளம் வாசகர்களைக் காண முடிந்தது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 317 318ல் வாசகர்களைச் சந்தித்துப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பதிப்பு விற்று முடிந்து அடுத்த பதிப்ப வெளியாகியுள்ளது. தினசரி மாலை நான்கு மணிக்குப் புத்தக் கண்காட்சிக்கு வருகை தருவேன். எட்டு மணி வரை இருப்பேன். வழியில் சந்தித்து …
தி.லட்சுமணன். நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைப் பற்றி நாவல்கள் எழுதப்படுவது மிகவும் குறைவு. இத்தகு சுழலில் எஸ்.ராமகிருஷ்ணன் “நிமித்தம்” என்ற சிறப்பான நாவலைப் படைத்துள்ளார். அந்த நாவலில் வரும் தேவராஜ் காதுகேளாத மாற்றுத்திறனாளி, அவன் தன் வாழ்க்கையில் காது கேளாத காரணத்தால் எவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது என்பதைச் சிறப்பாக விளக்குகிறார். நாவலின் முதல் அத்தியாயத்திற்கு “அவனது இரவு” என்ற தலைப்பிட்டு ஆசிரியர் கதையைத் துவக்குகிறார். அந்த ஒர் இரவுதான் அவனுடைய …
புத்தகக் கண்காட்சிக்கென புதிய புத்தகங்கள் நிறைய வெளியாகியுள்ளன. நான் எப்போதும் கிடைக்காத அரிய நூல்களைத் தான் முதலில் தேடி வாங்குவேன். எனது சேமிப்பிலிருந்து காணாமல் போனவை. இரவல் கொடுத்துத் திரும்பி வராதவை எனப் பல அரிய நூல்களை மறுபடி வாசிக்கத் தேடிவருகிறேன். சிறந்த இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேடிப் பாருங்கள். கிடைத்தால் அவசியம் வாசியுங்கள்.
டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூலின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகவுள்ளது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது