கதாவிலாசம்
தமிழின் சிறந்த நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்வதற்காகத் தமிழக அரசு புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் நடைபெறும் இத்திட்டத்தில் சிறந்த தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. தமிழக அரசு இத்திட்டத்துக்குப் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. பழைய பாடநூல்கள் மறுபதிப்பு, நாட்டுடைமை ஆக்கப்பட்ட அச்சில் இல்லாத நூல்களின் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது போன்ற பணிகள் இத்திட்டத்தின் …









