நாம் அறியாத உலகம்

சந்தையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்களை யார் மொத்தமாகக் கொள்முதல் செய்வது. யார் விநியோகம் செய்வது, விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதன் பின்னாள் ஒரு சிண்டிகேட் செயல்படுகிறது. அவர்களை மீறி எவரும் தக்காளியோ, வெங்காயமோ வாழைப்பழங்களோ நேரடியாக வாங்கி விற்பனை செய்துவிட முடியாது. அந்தச் சிண்டிகேட் உறுப்பினர்கள் விவசாயிகள் எப்போது அறுவடை செய்யவேண்டும். யாரிடம் விற்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காய்கறிகள் பழங்கள் எதுவும் கிடைக்காமல் நகரை ஸ்தம்பிக்கச் செய்துவிட முடியும். விவசாயிகள் …

நாம் அறியாத உலகம் Read More »

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது, அந்த நாட்டின் நிலக்காட்சி மனத்தில் பதிய மறுக்கும். அங்கு நிகழும் பனிப்பொழிவு நமக்கு அந்நியமானது. அவர்களின் பெயர்களும் அவர்களின் உடை, உணவு முறைகளும்கூட நமக்கு முற்றிலும் புதிதானவையே. அதனாலேயே நான் ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் திணறி திணறித்தான் படித்து முடிப்பேன். ஆனாலும் அவற்றில் உள்ள படைப்பு நயம் என்னை மயக்கிவிடும். அந்த மயக்கத்திற்காகவே நான் மீண்டும் …

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம் Read More »

கவிஞர் சிற்பி ஆவணப்படம்

இந்திரன் தமிழின் முன்னோடி கலைவிமர்சகர். ஓவியம். சிற்பம். வரைகலை எனக் கலைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் இவர் தமிழ் அழகியல் குறித்துத் தனித்த பார்வைகள் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ள கட்டுரைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. தனித்துவமான கலையாளுமையாக விளங்கும் இந்திரன் கவிஞர் சிற்பி குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். சிற்பி பாலசுப்பிரமணியம் எனும் கவிஞர் சிற்பி, பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பாடத்திட்டக்குழு உறுப்பினர். இதழாசிரியர் சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் …

கவிஞர் சிற்பி ஆவணப்படம் Read More »

தபால்காரனின் நாட்கள்

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ரோஜர் மார்டின் தூகார்டு எழுதிய தபால்காரன் நாவல் பற்றிக் காலம் இலக்கிய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நாவலிது. க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். தபால்காரனை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்ட கதைகளையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

காதலும் காதல் சார்ந்தவையும்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. கடுங்கோடையில் மழைக்காகக் காத்திருக்கும்போது வானிலிருந்து சரமென இறங்கும் கோடைமழையின் முதற்துளியைக் கையில் ஏந்தியது போன்றதுதான் பருவவயதில் வாய்த்துவிடும் முதற்காதலை வரவேற்கும் இளம் மனத்தின் நிலை. அந்த மனநிலையை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. அதன் பின்னர் ஆயிரமாயிரம் பெருங்காதல்கள் வந்து மனத்தில் குடியேறியபோதும் அந்த முதற்காதல் நினைவுகள் கடுங்கோடையில் மண்ணில் விழுந்த முதல்மழையின் சுவடுகள்போலப் பதிந்தே இருக்கும். காதலைக் கொண்டாடாத படைப்பாளர்கள் …

காதலும் காதல் சார்ந்தவையும் Read More »

நிழலின் பந்தம்

“மண்டியிடுங்கள் தந்தையே” நூல் குறித்த வாசிப்பு விமர்சனம்… மஞ்சுநாத் எழுத்தாளனுக்கு எழுத்தின் வழியேயான சுதந்திரம் எல்லையற்றது. கட்டுபாடுகள் இல்லாதது. உண்மையில் எல்லா வகையான படிமங்களிலும் இதைச் சாத்தியமாக்குவது முடியுமா…? முடியாது என்பதே எதார்த்தம். குறிப்பாகத் தனி மனிதர்களின் வரலாற்றுப் பின்புலத்தைச் சாரமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் கதைகளுக்கு எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதிகம் உள்ளன. கூடுதலாக ரஷ்ய எழுத்துலகின் கொண்டாட்டமான மனிதரான டால்ஸ்டாய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதுவதென்பது காட்டில் திரியும் குதிரை தானாக விரும்பி தனது …

நிழலின் பந்தம் Read More »

தொலைந்து போனவர்களின் உலகம்

. ஹருகி முரகாமியின் Kafka On The Shore நாவலில் காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப்போகிறான். அதுவும் அவனது பதினைந்தாவது பிறந்தநாள் அன்று. ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவது ஒரு நாளில் நடக்கும் நிகழ்வில்லை. அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு தாவரம் போல மெல்ல வளர்ந்து கொண்டவரும். முடிவில் ஒரு நாள் சாத்தியமாகும். அப்படித் தான் டமூரா ஓடிப்போவதற்குத் தயார் ஆகிறான். தந்தையிடமிருந்து விலகி ஓடுகிறான் என்பதாலே அவன் காஃப்காவின் மறு உருவம் போலக் கருதப்படுகிறான். அவன் …

தொலைந்து போனவர்களின் உலகம் Read More »

மகனின் நினைவாக

கணேஷ் பாரி · மண்டியிடுங்கள் தந்தையே :  வாசிப்பனுபவம் ஒரு தானியம் தன்னை அழித்துக் கொள்வதன் வழியேதான் புத்துயிர்ப்பு பெறுகிறது.மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை.. – எஸ்.ராமகிருஷ்ணன் விடுமுறைக் காலத்துக் காதல் கதை நாவலுக்குப் பிறகு நான் வாசிக்கும் நாவல் இது.ஐந்துவருடத்துக்குப் பிறகு எங்களுக்குப் போன வருடம் நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. எனது மகனின் நினைவாக வாங்கிய புத்தகம் இது.வெளியீட்டின் முதல் நாளே எஸ்.ராவின் கையால் எனது மகன் பெயர் “லெனின் வான்கா “ எழுதி …

மகனின் நினைவாக Read More »

தப்பிச் செல்லும் பயணம்

நார்த் வெஸ்ட் ஃபிரான்டியர் 1959 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படம். Flame over India என்ற தலைப்பிலும் இப்படம் வெளியாகியிருக்கிறது இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வழக்கமான ஆங்கிலப் படங்களைப் போலவே இந்தியாவைப் புரிந்து கொள்ளாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெருமை பேசும் மற்றொரு படம். சினிமாஸ்கோப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படம் ஒரு நீண்ட ரயில் பயணத்தினை விவரிக்கிறது. தப்பிச் செல்லும் இந்த ரயில் பயணத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தாக்குதல்களும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. ரயில் கடந்து செல்லும் …

தப்பிச் செல்லும் பயணம் Read More »

காலத்தின் நிழல்.

மகிழ் ஆதன் நான்கு வயதிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறான். இப்போது அவனது வயது 9. அவனது முதற்தொகுப்பு நான் தான் உலகத்தை வரைந்தேன். அந்தத் தொகுப்பில் வியப்பூட்டும் கவிதைகள் நிறைய உள்ளன. பாடப்புத்தகங்களே உலகம் என்றிருக்கும் சிறார்களுக்கு நடுவே இந்த உலகையும் அதன் திகைப்பூட்டும் நிகழ்வுகளையும் மகிழ்ஆதன் எளிதாக எதிர்கொண்டு சிறப்பாக கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறான். இப்போது அவனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் என்ற இந்தக் கவிதை நூலை எதிர்  …

காலத்தின் நிழல். Read More »