கற்பனைக் குமிழிகள்
சில படங்கள் முதல் காட்சியிலே நம்மை உள்ளிழுத்துக் கொண்டுவிடக்கூடியவை. அப்படியான ஒரு திரைப்படம் தான் Asino vola.( DONKEY FLIES) 2015ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். மொரிசியோ என்ற இசைக்கலைஞரின் பால்ய நினைவுகளை விவரிக்கும் இப்படத்தின் முதற்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக மொரிசியோ செல்லும் போது அவர் கூடவே ஒரு கோழியும் செல்கிறது. அவருடன் அந்தக் கோழி பேசுகிறது. அவருக்காக ஒரு முட்டையைத் தருகிறது. மொரிசியோவும் அந்தக் கோழியுடன் உரையாடுகிறார். அதன் முன்னே இசை நிகழ்த்துகிறார். அந்தக் …









