கருத்தரங்கில்
நேற்று நடைபெற்ற எனது படைப்புகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். காலை பத்து மணிக்குத் துவங்கிய நிகழ்வு நிறைவுபெற இரவு எட்டுமணியாகிவிட்டது. எனது படைப்புகள் குறித்துப் பேசியவர்கள் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக உரையாற்றினார்கள். படைப்பின் நுண்மைகளை அவர்கள் எடுத்துக்காட்டிய விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. காலை அமர்வில் பேசிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இடக்கை நாவல் பற்றிச் சிறப்பாகப் பேசினார். எனது ஆசான் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எனது படைப்புகள் மற்றும் …









