பனித்துளிகளைச் சேகரிப்பவள்.
இலக்கியத்தில் பதிவான சில சித்திரங்களை வாழ்நாளில் நாம் மறக்கமுடியாது. முதன்முறையாக வாசிக்கும் போது அடைந்த சந்தோஷத்தை இன்று வாசிக்கும் போதும் அந்த வரிகள் தருகின்றன. பனித்துளிகளைச் சேகரித்து வந்து அந்தப் பனிநீரால் முகத்தைக் கழுவிக் கொண்டால் அழகி ஆகிவிடுவாள் என நினைத்து ஒரு பேதைப் பெண் பனித்துளிகளைச் சேகரிக்கச் செல்லும் பாஸீ அலீயெவா Fazu Aliyeva நாவலில் வரும் அந்தக் காட்சி எத்தனை அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு அழகான ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்த பூ. …








